அத்தியாயம்: 5, பாடம்: 34, ஹதீஸ் எண்: 982

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏وَعَوْنُ بْنُ سَلَّامٍ ‏ ‏قَالَ ‏ ‏عَوْنٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ يُونُسَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏خَبَّابٍ ‏ ‏قَالَ ‏

أَتَيْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَشَكَوْنَا إِلَيْهِ حَرَّ ‏ ‏الرَّمْضَاءِ ‏ ‏فَلَمْ ‏ ‏يُشْكِنَا ‏

قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏قُلْتُ ‏ ‏لِأَبِي إِسْحَقَ ‏ ‏أَفِي الظُّهْرِ قَالَ نَعَمْ قُلْتُ أَفِي تَعْجِيلِهَا قَالَ نَعَمْ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று சுடுமணல்(மீது நின்று தொழுவதைக்) குறித்து முறையிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் முறையீட்டை ஏற்கவில்லை.

அறிவிப்பாளர் : கப்பாப் பின் அல்அரத் (ரலி)

குறிப்பு :

ஸுஹைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடம் ‘இது, லுஹ்ருத் தொழுகை தொடர்பானதா?’ என்று கேட்டேன். அதற்கு அபூஇஸ்ஹாக் (ரஹ்), ‘ஆம்’ என்றார்கள். நான், ‘லுஹ்ருத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது தொடர்பாகவா?’ என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment