அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1026

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُوَيْدُ بْنُ عَمْرٍو الْكَلْبِيُّ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَيَّارِ بْنِ سَلَامَةَ أَبِي الْمِنْهَالِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا بَرْزَةَ الْأَسْلَمِيَّ ‏ ‏يَقُولُا ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُؤَخِّرُ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ وَيَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا وَكَانَ يَقْرَأُ فِي صَلَاةِ الْفَجْرِ مِنْ الْمِائَةِ إِلَى السِّتِّينَ وَكَانَ يَنْصَرِفُ حِينَ يَعْرِفُ بَعْضُنَا وَجْهَ بَعْضٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இஷாத் தொழுகையை இரவின் மூன்றிலொரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பார்கள். ஃபஜ்ருத் தொழுகையில் அறுபதுமுதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள். தொழுது முடித்துத் திரும்பிச்செல்லும்போது எங்களில் ஒருவர் மற்றவரின் முகத்தை அறிந்து கொள்வார்.

அறிவிப்பாளர் : அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1025

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَيَّارِ بْنِ سَلَامَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا بَرْزَةَ ‏ ‏يَقُولُا ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُبَالِي ‏ ‏بَعْضَ تَأْخِيرِ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ وَكَانَ لَا يُحِبُّ النَّوْمَ قَبْلَهَا وَلَا الْحَدِيثَ بَعْدَهَا ‏

قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏ثُمَّ لَقِيتُهُ مَرَّةً أُخْرَى فَقَالَ أَوْ ثُلُثِ اللَّيْلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இஷாத் தொழுகைக்கு இரவின் பாதிவரை தாமதிப்பதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பியதில்லை.

அறிவிப்பாளர் : அபூபர்ஸா (ரலி) வழியாக ஸய்யார் (ரஹ்)

குறிப்பு :

“நான் மற்றொரு முறை ஸய்யார் பின் ஸலாமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, ‘இஷாத் தொழுகையை இரவில் பாதி அல்லது மூன்றில் ஒரு பகுதிவரை (தாமதப்படுத்துவதை நபியவர்கள் பொருட்படுத்தியதில்லை)’ என்று தாம் செவியுற்றதைக் கூறினார்” என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1024

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَيَّارُ بْنُ سَلَامَةَ ‏ ‏قَالَ ‏

سَمِعْتُ أَبِي يَسْأَلُ ‏ ‏أَبَا بَرْزَةَ ‏ ‏عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏آنْتَ سَمِعْتَهُ قَالَ فَقَالَ كَأَنَّمَا أَسْمَعُكَ السَّاعَةَ قَالَ سَمِعْتُ أَبِي يَسْأَلُهُ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏لَا يُبَالِي ‏ ‏بَعْضَ تَأْخِيرِهَا ‏ ‏قَالَ ‏ ‏يَعْنِي الْعِشَاءَ ‏ ‏إِلَى نِصْفِ اللَّيْلِ وَلَا يُحِبُّ النَّوْمَ قَبْلَهَا وَلَا الْحَدِيثَ بَعْدَهَا ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏ثُمَّ لَقِيتُهُ بَعْدُ فَسَأَلْتُهُ فَقَالَ ‏ ‏وَكَانَ ‏ ‏يُصَلِّي الظُّهْرَ حِينَ ‏ ‏تَزُولُ ‏ ‏الشَّمْسُ وَالْعَصْرَ يَذْهَبُ الرَّجُلُ إِلَى أَقْصَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَالشَّمْسُ ‏ ‏حَيَّةٌ ‏ ‏قَالَ وَالْمَغْرِبَ لَا أَدْرِي أَيَّ حِينٍ ذَكَرَ قَالَ ثُمَّ لَقِيتُهُ بَعْدُ فَسَأَلْتُهُ فَقَالَ ‏ ‏وَكَانَ ‏ ‏يُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ الرَّجُلُ فَيَنْظُرُ إِلَى وَجْهِ جَلِيسِهِ الَّذِي يَعْرِفُ فَيَعْرِفُهُ قَالَ وَكَانَ يَقْرَأُ فِيهَا بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ

“என் தந்தை ஸலாமா (ரஹ்), அபூபர்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி வினவியதை நான் செவியுற்றேன்” என்று ஸய்யார் பின் ஸலாமா (ரஹ்) கூறினார்கள்.

நான் ஸய்யார் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் அதை(நேரடியாக)ச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் கேட்டதைத் தற்போது நான் செவியேற்பதைப் போன்றே செவியேற்றேன். என் தந்தை ஸலாமா (ரஹ்), அபூபர்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை குறித்து வினவினார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இஷாத் தொழுகைக்கு இரவின் பாதிவரை தாமதிப்பதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பியதில்லை’ என பதிலளித்தார்கள்” எனக் கூறினார்.

பிறகு (மற்றொரு முறை) நான் ஸய்யார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோதும் (தொழுகை நேரங்கள் பற்றி) வினவினேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது லுஹ்ருத் தொழுவார்கள். பிறகு அஸ்ருத் தொழுவார்கள். (அவர்களுடன் அஸ்ருத் தொழுத) ஒருவர் மதீனாவின் கடைக்கோடியிலுள்ள தமது இல்லத்திற்குச் சென்றடையும்போதும் சூரியன் (ஒளிகுன்றாமல்) இருந்துகொண்டிருக்கும் என்று அபூபர்ஸா (ரலி) கூறினார்கள். மஃக்ரிபு (தொழுகையின் நேரம்) குறித்து அவர்கள் கூறியது சரியாக என் நினைவில் இல்லை” என்று கூறினார்கள்.

பிறகு (இன்னொரு முறை) அவர்களைச் சந்தித்து வினவியபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுவி(த்து முடி)க்கும்போது (தொழுதுவிட்டுத்) திரும்பும் (எங்களில்) ஒருவர், தமக்குப் பக்கத்தில் அமர்ந்திக்கும் அறிமுகமானவரின் முகம் பார்த்து (இன்னார் என) அறிந்துகொள்வார். ஸுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்” என அபூபர்ஸா (ரலி) கூறியதை நினைவு கூர்ந்தார்.

அறிவிப்பாளர் : அபூபர்ஸா (ரலி) வழியாக ஸய்யார் (ரஹ்) வழியாக ஷுஅபா (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1023

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ‏ ‏قَالَ ‏

لَمَّا قَدِمَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَسَأَلْنَا ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الظُّهْرَ ‏ ‏بِالْهَاجِرَةِ ‏ ‏وَالْعَصْرَ وَالشَّمْسُ نَقِيَّةٌ وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ وَالْعِشَاءَ أَحْيَانًا يُؤَخِّرُهَا وَأَحْيَانًا يُعَجِّلُ كَانَ إِذَا رَآهُمْ قَدْ اجْتَمَعُوا عَجَّلَ وَإِذَا رَآهُمْ قَدْ أَبْطَئُوا أَخَّرَ وَالصُّبْحَ كَانُوا ‏ ‏أَوْ قَالَ كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّيهَا ‏ ‏بِغَلَسٍ ‏

و حَدَّثَنَاه ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدٍ ‏ ‏سَمِعَ ‏ ‏مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏يُؤَخِّرُ الصَّلَوَاتِ فَسَأَلْنَا ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏غُنْدَرٍ

ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் மதீனாவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ற்கு வந்தபோது, (தொழுகைகளைத் தாமதப்படுத்தலானார்). நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரங்கள் பற்றிக்) கேட்டோம். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நண்பகல் நேரத்தில் லுஹ்ருத் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும்போதே அஸ்ருத் தொழுவார்கள். சூரியன் மறைந்த உடன் மஃக்ரிபுத் தொழுவார்கள். இஷாவைச் சிலபோது முந்தியும் சிலபோது பிந்தியும் தொழுவார்கள். மக்கள் கூடிவிட்டதைக் கண்டால் ஆரம்ப நேரத்திலேயே தொழுதுவிடுவார்கள். மக்கள் வரத் தாமதமாயின் (இஷாவைத்) தாமதப்படுத்துவார்கள். நபி (ஸல்) / மக்கள் இருள்விலகாத (அதிகாலையில்) ஸுப்ஹுத் தொழுவார்கள்” என்று ஜாபிர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக முஹம்மத் பின் அம்ரிப்னில் ஹசன் பின் அலீ (ரஹ்)

குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஹஜ்ஜாஜ், தொழுகைகளைத் தாமதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எனவே, நாங்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரங்கள் பற்றிக்) கேட்டோம் …” என ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1022

و حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَعْنٌ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

إِنْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ ‏ ‏مُتَلَفِّعَاتٍ ‏ ‏بِمُرُوطِهِنَّ ‏ ‏مَا يُعْرَفْنَ مِنْ ‏ ‏الْغَلَسِ ‏

و قَالَ ‏ ‏الْأَنْصَارِيُّ ‏ ‏فِي رِوَايَتِهِ مُتَلَفِّفَاتٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுவிப்பார்கள். பெண்கள் (தொழுது விட்டு) தங்கள் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு திரும்பிச்செல்வார்கள். இருளினால் அப்பெண்கள் (அடையாளம்) தெரிந்துகொள்ளப் படமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1021

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏

لَقَدْ ‏ ‏كَانَ نِسَاءٌ مِنْ الْمُؤْمِنَاتِ يَشْهَدْنَ الْفَجْرَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُتَلَفِّعَاتٍ ‏ ‏بِمُرُوطِهِنَّ ‏ ‏ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ وَمَا يُعْرَفْنَ مِنْ ‏ ‏تَغْلِيسِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالصَّلَاةِ

இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் தம் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் கலந்து கொள்வார்கள். பிறகு தம் இல்லங்களுக்குத் திரும்பிச்செல்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுவித்த ஃபஜ்ருத் தொழுகை, இருள்விலகாத அதிகாலையில் நிகழ்ந்தேறியதால் அப்பெண்கள் (அடையாளம்) தெரிந்துகொள்ளப் படமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 41, ஹதீஸ் எண்: 1020

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

أَنَّ نِسَاءَ الْمُؤْمِنَاتِ كُنَّ يُصَلِّينَ الصُّبْحَ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ يَرْجِعْنَ ‏ ‏مُتَلَفِّعَاتٍ ‏ ‏بِمُرُوطِهِنَّ ‏ ‏لَا يَعْرِفُهُنَّ أَحَدٌ

இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸுப்ஹுத் தொழுதுவிட்டு தம் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு திரும்பிச்செல்வார்கள். (இருளினால்) அவர்களை எவரும் அறிந்து கொள்ளமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)