அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1032

و حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَعَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏كَيْفَ أَنْتُمْ أَوْ ‏

قَالَ ‏ ‏كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا فَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا ثُمَّ إِنْ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلِّ مَعَهُمْ فَإِنَّهَا زِيَادَةُ خَيْرٍ

அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்), “தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் நீ என்ன செய்வாய்/நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டுவிட்டுப் பிறகு, “அப்போது தொழுகையை உரிய நேரத்தில் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். பிறகு (கூட்டுத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் மக்களுடன் (சேர்ந்து) தொழுது கொள்ளுங்கள். அது கூடுதல் நன்மையாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் அபூதர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment