அத்தியாயம்: 5, பாடம்: 43, ஹதீஸ் எண்: 1040

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَدَ نَاسًا فِي بَعْضِ الصَّلَوَاتِ فَقَالَ ‏ ‏لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلًا ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ ثُمَّ ‏ ‏أُخَالِفَ ‏ ‏إِلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنْهَا فَآمُرَ بِهِمْ فَيُحَرِّقُوا عَلَيْهِمْ بِحُزَمِ الْحَطَبِ بُيُوتَهُمْ وَلَوْ عَلِمَ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَظْمًا سَمِينًا لَشَهِدَهَا ‏ ‏يَعْنِي صَلَاةَ الْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களில் சிலரைச் சில தொழுகைகளில் காணாமல் தேடிவிட்டு, “நான் ஒருவரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துவிட்டு, விறகுக் கட்டைகளைக் கொண்டுவரச் சொல்லி, (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாத ஆண்களிடம் சென்று அவர்களை வீட்டோடு தீயிட்டுக் கொளுத்திவிட வேண்டும் என்று எண்ணியதுண்டு. அவர்களில் எவரும் (பள்ளியில்) சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்பு கிடைக்கும் எனத் தெரிந்தால்கூட தொழுகையில், அதாவது இஷாத் தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment