அத்தியாயம்: 5, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1053

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ جَدَّتَهُ ‏ ‏مُلَيْكَةَ ‏ ‏دَعَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ ‏ ‏قُومُوا فَأُصَلِّيَ لَكُمْ قَالَ ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدْ اسْوَدَّ مِنْ طُولِ مَا ‏ ‏لُبِسَ ‏ ‏فَنَضَحْتُهُ ‏ ‏بِمَاءٍ فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَصَفَفْتُ أَنَا ‏ ‏وَالْيَتِيمُ ‏ ‏وَرَاءَهُ ‏ ‏وَالْعَجُوزُ ‏ ‏مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ

என் பாட்டியான முலைக்கா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (வந்து) அதில் சிறிதளவைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு, “எழுங்கள், உங்களுக்காக நான் (நஃபில் தொழுகை) தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். நான் எங்களது பாயை எடுப்பதற்காக எழுந்தேன். அது நீண்ட நாட்கள் விரிக்கப்படாததால் கறுப்பாகிவிட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீர் தெளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுகைக்காக) அதில் நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணியில் நின்றோம். ஒரு மூதாட்டி எங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரண்டு ரக்அத்கள் எங்களுக்குத் தொழுவித்துவிட்டுச் சென்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் அநாதைச் சிறுவர், ளுமைர் பின் ஸஅத் ஆவார். மூதாட்டி எனக் குறிப்பிடப்படுபவர் உம்மு ஸுலைம் (ரலி) ஆவார்.

Share this Hadith:

Leave a Comment