அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 837

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ

‏كُنَّا نُسَلِّمُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي الصَّلَاةِ فَيَرُدُّ عَلَيْنَا فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ ‏ ‏النَّجَاشِيِّ ‏ ‏سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كُنَّا نُسَلِّمُ عَلَيْكَ فِي الصَّلَاةِ فَتَرُدُّ عَلَيْنَا فَقَالَ ‏ ‏إِنَّ فِي الصَّلَاةِ شُغْلًا ‏

حَدَّثَنِي ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ السَّلُولِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُرَيْمُ بْنُ سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களுக்கு ஸலாம் சொல்வதும் அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் சொல்வதும் வழக்கம். (இது முதலாவது புலப்பெயர்வுக்கு முன்னர் இருந்த நடைமுறை).

ஆனால், நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிவந்த பின்னர் (தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் சொல்லவில்லை. பின்னர் நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் தொழும்போது) நாங்கள் உங்களுக்கு ஸலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் ஸலாம் சொல்வது வழக்கமாக இருந்ததே?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “திண்ணமாக, தொழுகையில் சிந்தனை சிதறலாகாது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

Share this Hadith:

Leave a Comment