அத்தியாயம்: 5, பாடம்: 08, ஹதீஸ் எண்: 839

دَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَنِي لِحَاجَةٍ ثُمَّ أَدْرَكْتُهُ وَهُوَ يَسِيرُ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏يُصَلِّي ‏ ‏فَسَلَّمْتُ عَلَيْهِ فَأَشَارَ إِلَيَّ فَلَمَّا فَرَغَ دَعَانِي فَقَالَ ‏ ‏إِنَّكَ سَلَّمْتَ ‏ ‏آنِفًا ‏ ‏وَأَنَا أُصَلِّي وَهُوَ مُوَجِّهٌ حِينَئِذٍ ‏ ‏قِبَلَ ‏ ‏الْمَشْرِقِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை, தேவையான ஒரு வேலையைச் செய்துவர அனுப்பி இருந்தார்கள். அவர்கள் (தமது வாகனத்தில் கூடுதலான தொழுகை) தொழுதவாறு சென்று கொண்டிருந்தபோது, (என் வேலை முடிந்த பின்னர்) அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (பதில் ஸலாம் கூறாமல்) என்னை நோக்கி சைகை செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்ததும் என்னை அழைத்து, “சற்று முன்னர் எனக்கு நீங்கள் ஸலாம் சொன்னீர்கள். அப்போது நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று கூறினார்கள். அப்போது அவர்களுடைய முகம் (கிப்லா அல்லாத) கிழக்குத் திசையை முன்னோக்கி இருந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment