அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1124

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ ‏ ‏قَالَ ‏

صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِنًى ‏ ‏وَالنَّاسُ أَكْثَرُ مَا كَانُوا فَصَلَّى رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ ‏

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ ‏ ‏هُوَ أَخُو ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏لِأُمِّهِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விடைபெறும் ஹஜ்ஜின்போது அவர்களுக்குப் பின்னால் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகத்) தொழுதேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அதிகமாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

குறிப்பு :

“ஹாரிஸா பின் வஹ்பு அல்குஸாஈ (ரலி), உமர் (ரலி) அவர்களின் மகன் உபைதுல்லாஹ் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஆவார்” என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகிறார்கள்.

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1123

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏حَارِثَةَ بْنِ وَهْبٍ ‏ ‏قَالَ ‏

صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِنًى ‏ ‏آمَنَ مَا كَانَ النَّاسُ وَأَكْثَرَهُ رَكْعَتَيْنِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்புடனும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர்.

அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1122

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ ‏ ‏يَقُولُا ‏

صَلَّى بِنَا ‏ ‏عُثْمَانُ ‏ ‏بِمِنًى ‏ ‏أَرْبَعَ رَكَعَاتٍ فَقِيلَ ذَلِكَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏فَاسْتَرْجَعَ ‏ ‏ثُمَّ قَالَ ‏ ‏صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِنًى ‏ ‏رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ ‏ ‏أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ‏ ‏بِمِنًى ‏ ‏رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏بِمِنًى ‏ ‏رَكْعَتَيْنِ فَلَيْتَ حَظِّي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ ‏

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏وَابْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

உஸ்மான் (ரலி), மினாவில் (4 ரக்அத் தொழுகைகளைச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே எங்களுக்குத் தொழுவித்தார்கள். இதுபற்றி (அத்தொழுகையில் கலந்துகொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டபோது, “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறிவிட்டு, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ருஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். (இப்போது நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து (அல்லாஹ்வால்) ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத்தால் போதும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1121

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏سَمِعَ ‏ ‏حَفْصَ بْنَ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏

صَلَّى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِنًى ‏ ‏صَلَاةَ الْمُسَافِرِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرُ ‏ ‏وَعُثْمَانُ ‏ ‏ثَمَانِيَ سِنِينَ ‏ ‏أَوْ قَالَ سِتَّ سِنِينَ ‏

قَالَ ‏ ‏حَفْصٌ ‏ ‏وَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يُصَلِّي ‏ ‏بِمِنًى ‏ ‏رَكْعَتَيْنِ ثُمَّ يَأْتِي فِرَاشَهُ فَقُلْتُ أَيْ عَمِّ لَوْ صَلَّيْتَ بَعْدَهَا رَكْعَتَيْنِ قَالَ لَوْ فَعَلْتُ لَأَتْمَمْتُ الصَّلَاةَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَقُولَا فِي الْحَدِيثِ ‏ ‏بِمِنًى ‏ ‏وَلَكِنْ قَالَا صَلَّى فِي السَّفَرِ

நபி (ஸல்), மினாவில் தொழுதபோது பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத்) தொழுதார்கள். (அவ்வாறே) அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (தொழுதார்கள்).
(அவ்வாறே) உஸ்மான் (ரலி), (தமது ஆட்சியின்) எட்டு அல்லது ஆறு ஆண்டுகள் (பயணத்தில் சுருக்கியே தொழுதார்கள்).

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்பு :

இப்னு உமர் (ரலி), மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு தமது படுக்கைக்கு வருவார்கள். அப்போது அவர்களிடம் நான், “என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (கடமையான) இந்தத் தொழுகைக்குப் பின் (கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் என்ன!” என்று கேட்டேன். அதற்கு, “நான் (கூடுதலான தொழுகையைத்) தொழுவதாயிருந்தால் கடமையான தொழுகையை (நான்கு ரக்அத்களாகவே) நிறைவாகத் தொழுதிருப்பேனே” என்று சொன்னார்கள் என்று ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) தமது வழி அறிவிப்பில் குறிப்பிடுகின்றார்.

இபுனுல் முஸன்னா (ரஹ்), அப்துஸ்ஸமது (ரஹ்) ஆகிய இருவர்வழி அறிவிப்பில் சுருக்கித் தொழுவது என்பது ‘மினாவில்’ என்றில்லாமல் ‘பயணத்தில்’ என்றே இடம்பெறுகிறது.

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1120

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏

صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِنًى ‏ ‏رَكْعَتَيْنِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏بَعْدَهُ ‏ ‏وَعُمَرُ ‏ ‏بَعْدَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَعُثْمَانُ ‏ ‏صَدْرًا مِنْ خِلَافَتِهِ ثُمَّ إِنَّ ‏ ‏عُثْمَانَ ‏ ‏صَلَّى بَعْدُ أَرْبَعًا فَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ صَلَّى أَرْبَعًا وَإِذَا صَلَّاهَا وَحْدَهُ صَلَّى رَكْعَتَيْنِ ‏

و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُقْبَةُ بْنُ خَالِدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அவர்களுக்குப் பிறகு அபூபக்ரு (ரலி) அவர்களும் அபூபக்ருக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும் (தொடர்ந்து) உஸ்மான் (ரலி) அவர்களும் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் (சுருக்கியே) தொழுதார்கள்.

பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் (சுருக்கித் தொழாமல் பயணத்தில்) நான்கு ரக்அத்கள் (நிறைவாகத்) தொழலானார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்பு :

“இப்னு உமர் (ரலி), (நான்கு ரக்அத் தொழுவிக்கும்) இமாமைப் பின்பற்றித் தொழுதால் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்; தனியாகத் தொழும்போது (சுருக்கி) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1119

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏صَلَّى صَلَاةَ الْمُسَافِرِ ‏ ‏بِمِنًى ‏ ‏وَغَيْرِهِ رَكْعَتَيْنِ ‏

وَأَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرُ ‏ ‏وَعُثْمَانُ ‏ ‏رَكْعَتَيْنِ صَدْرًا مِنْ خِلَافَتِهِ ثُمَّ أَتَمَّهَا أَرْبَعًا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏بِمِنًى ‏ ‏وَلَمْ يَقُلْ وَغَيْرِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மினாவிலும் (அதைச் சார்ந்த) பிற இடங்களிலும் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் (அவ்வாறே தொழுவார்கள்). உஸ்மான் (ரலி) அவர்களும் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள். அதற்குப் பிறகு (சுருக்கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்பு :

அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்), மஃமர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், ” … மினாவில் …” என்று மட்டுமே இடம்பெறுகிறது. “… (அதைச் சார்ந்த) பிற இடங்களிலும் …” எனும் தொடர் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1118

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فَصَلَّى رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعَ قُلْتُ كَمْ أَقَامَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏قَالَ عَشْرًا ‏

و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُا ‏ ‏خَرَجْنَا مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏إِلَى الْحَجِّ ثُمَّ ‏ ‏ذَكَرَ مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّوْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ الْحَجَّ

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவுக்குப் புறப்பட்டோம். அவர்கள் திரும்பி வரும்வரை (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று அனஸ் பின் மாலிக் (ரலி) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினார்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு, “பத்து (நாட்கள்)” என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்)

குறிப்பு :

ஷுஃபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம் …” என்று அனஸ் (ரலி) கூறுவதாக ஹதீஸ் தொடங்குகிறது.

ஸவ்ரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம்…” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1117

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مَهْدِيٍّ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ‏ ‏قَالَ خَرَجْتُ مَعَ ‏ ‏شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ ‏ ‏إِلَى قَرْيَةٍ عَلَى رَأْسِ سَبْعَةَ عَشَرَ أَوْ ثَمَانِيَةَ عَشَرَ مِيلًا فَصَلَّى رَكْعَتَيْنِ فَقُلْتُ لَهُ ‏ ‏فَقَالَ ‏

رَأَيْتُ ‏ ‏عُمَرَ ‏ ‏صَلَّى ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏رَكْعَتَيْنِ فَقُلْتُ لَهُ فَقَالَ إِنَّمَا أَفْعَلُ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَفْعَلُ ‏

و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ عَنْ ‏ ‏ابْنِ السِّمْطِ ‏ ‏وَلَمْ يُسَمِّ ‏ ‏شُرَحْبِيلَ ‏ ‏وَقَالَ إِنَّهُ أَتَى أَرْضًا يُقَالُ لَهَا ‏ ‏دُومِينَ ‏ ‏مِنْ ‏ ‏حِمْصَ ‏ ‏عَلَى رَأْسِ ثَمَانِيَةَ عَشَرَ مِيلًا

நான் ஷுரஹ்பீல் பின் அஸ்ஸிம்த் (ரஹ்) அவர்களுடன் பதினேழு அல்லது பதினெட்டு மைல் தொலைவிலிருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் (பயணத்தில்) இரண்டு ரக்அத்களே தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான் (அது பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதைப் பார்த்துவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் நான் அதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்றே நானும் செய்கிறேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக ஷுரஹ்பீல் (ரஹ்) வழியாக ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்)

குறிப்பு :

இந்த ஹதீஸ் முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்தம் இயற்பெயர் இல்லாமல் ‘இப்னுஸ் ஸிம்த்’ என அவரின் தந்தையில் பெயரால் குறிப்பிடப் படுகின்றார். மேலும் “அவர் பதினெட்டு மைல் தொலைவிலுள்ள ஹிம்ஸ் பகுதியைச் சேர்ந்த ‘தூமீன்’ எனும் ஊருக்குச் சென்றார்” என்று கூடுதல் தகவலுடன் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1116

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏

عَنْ قَصْرِ الصَّلَاةِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ ‏ ‏أَوْ ثَلَاثَةِ ‏ ‏فَرَاسِخَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏الشَّاكُّ ‏ ‏صَلَّى رَكْعَتَيْنِ

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக் தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்)

குறிப்பு :

“மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக்” என்று ஃபர்ஸக்கைப் பற்றிய ஐயத்துடன் அறிவிப்பவர் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஃபா (ரஹ்) ஆவார்.

ஒரு ஃபர்ஸக் தொலைவு என்பது மூன்று மைல்களாகும். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் இதையொத்த வேறொரு ஹதீஸில், “ஒரு ஃபர்ஸக்” எனத் திட்டவட்டமான சொற்றொடர் இடம்பெறுவதால் இந்த ஹதீஸில் இடம்பெறும் சொற்றொடரை, “மூன்று மைல் அல்லது ஒரு ஃபர்ஸக்” என்று திருத்திப் பொருள்கொள்ள வேண்டும்.

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1115

‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏سَمِعَا ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُا ‏

صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الظُّهْرَ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏أَرْبَعًا وَصَلَّيْتُ مَعَهُ الْعَصْرَ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏رَكْعَتَيْنِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ருத் தொழுதேன்; (மக்காவுக்குச் செல்லும் பயணத்தில்) துல்ஹுலைஃபாவில் அவர்களுடன் இரண்டு ரக்அத்கள் அஸ்ருத் தொழுதேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)