அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1250

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏حَدَّثَهُمْ ‏

‏أَنَّ رَجُلًا نَادَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ فِي الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أُوتِرُ صَلَاةَ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ صَلَّى فَلْيُصَلِّ مَثْنَى مَثْنَى فَإِنْ أَحَسَّ أَنْ يُصْبِحَ سَجَدَ سَجْدَةً فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى ‏

‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏ابْنِ عُمَرَ

ஒருவர் பள்ளிவாசலில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இரவுத் தொழுகையை எவ்வாறு ஒற்றைப்படையாக (வித்ராக) ஆக்குவேன்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(இரவில்) தொழுபவர் இரண்டிரண்டு ரக்அத்களாகவே தொழட்டும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி அவர் அறிந்தால் ஒரு ரக்அத் (வித்ருத்) தொழட்டும்! முன்னர் அவர் தொழுதவற்றை அது ஒற்றைப்படையாக மாற்றிவிடும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

குறிப்பு :

அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பில், இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான உபைதுல்லாஹ் அவர்களைப் பற்றி, உமர் (ரலி) அவர்களின் பேரன் உபைதுல்லாஹ் என்றில்லாமல் அப்துல்லாஹ் (இப்னு உமர்) மகன் உபைதுல்லாஹ் என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment