அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1278

‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّهُ بَاتَ عِنْدَ خَالَتِهِ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ اللَّيْلِ فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا قَالَ وَصَفَ وُضُوءَهُ وَجَعَلَ يُخَفِّفُهُ وَيُقَلِّلُهُ قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ ‏ ‏فَأَخْلَفَنِي ‏ ‏فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ فَصَلَّى ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ ثُمَّ أَتَاهُ ‏ ‏بِلَالٌ ‏ ‏فَآذَنَهُ بِالصَّلَاةِ فَخَرَجَ فَصَلَّى الصُّبْحَ وَلَمْ يَتَوَضَّأْ ‏

‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏وَهَذَا لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَاصَّةً لِأَنَّهُ بَلَغَنَا ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَنَامُ عَيْنَاهُ وَلَا يَنَامُ قَلْبُهُ

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவு தங்கினேன். அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து, கட்டித் தொங்க விடப்பட்டிருந்த தண்ணீர் பையிலிருந்து (தண்ணீரைச் சரித்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) செய்ததைப் போன்றே (உளூச்) செய்துவிட்டு வந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்னை(ப் பிடித்து)ப் பின்புறமாகக் கொண்டுவந்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தலானார்கள்; பிறகு தொழுதார்கள். பின்னர், படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு அவர்களிடம் பிலால் (ரலி) வந்து (சுப்ஹுத்) தொழுகைக்காக அவர்களுக்கு அறிவிப்புக் கொடுத்தார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்று (புதிதாக) உளூச் செய்யாமலேயே சுப்ஹுத் தொழு(வித்)தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உளூச் செய்வதற்கு நீரை எவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள் என்பதை இபுனு அப்பாஸ் (ரலி) செய்முறையால் விளக்கிச் சொன்னார்கள்.

“இந்த (உறங்கிய பின் புதிதாக உளூச் செய்யாமல் தொழும்) முறையானது, நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியதாகும். ஏனெனில் அவர்களின் கண்கள் மட்டுமே உறங்குகின்றன; உள்ளம் உறங்குவதில்லை எனும் தகவல் நமக்கு எட்டியுள்ளது” என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஃப்யான் (ரஹ்) கூறுகிறார்.

Share this Hadith:

Leave a Comment