அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1136

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُسَبِّحُ ‏ ‏عَلَى ‏ ‏الرَّاحِلَةِ ‏ ‏قِبَلَ ‏ ‏أَيِّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لَا ‏ ‏يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் எந்தத் திசையை முன்னோக்கிப் பயணித்தாலும் அதில் இருந்தவாறு நஃபில் தொழுகைகளைத் தொழுவார்கள். வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள். ஆனால், கடமையான (ஃபர்ளுத்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்.)

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அவரின் மகன் ஸாலிம் (ரஹ்)