அத்தியாயம்: 6, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1324

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ ‏ ‏قَالَ ‏

‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏عَلَى نَاقَتِهِ يَقْرَأُ سُورَةَ ‏ ‏الْفَتْحِ ‏

‏قَالَ ‏ ‏فَقَرَأَ ‏ ‏ابْنُ مُغَفَّلٍ ‏ ‏وَرَجَّعَ ‏ ‏فَقَالَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏لَوْلَا النَّاسُ لَأَخَذْتُ لَكُمْ بِذَلِكَ الَّذِي ذَكَرَهُ ‏ ‏ابْنُ مُغَفَّلٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏خَالِدِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ عَلَى رَاحِلَةٍ يَسِيرُ وَهُوَ يَقْرَأُ سُورَةَ ‏ ‏الْفَتْحِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி அல்ஃபத்ஹு (எனும் 48ஆவது) அத்தியாயத்தை ஓசை நயத்துடன் ஓதிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ஓசை நயத்துடன் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல் முஸனீ (ரலி) வழியாக முஆவியா பின் குர்ரா (ரஹ்)

குறிப்பு :

“மக்கள் (திரண்டுவிடுவர் என்பது) பற்றிய அச்சமில்லையெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) ஓதிக் காட்டியதைப் போன்றே உங்களுக்கும் நான் ஓதிக் காட்டியிருப்பேன்” என்று முஆவியா பின் குர்ரா (ரஹ்) கூறியுள்ளார்.

இந்த ஹதீஸ், காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… நபி (ஸல்) வாகனத்தின் மீது பயணம் செய்தபடி அல்ஃபத்ஹூ அத்தியாயத்தை ஒதிக்கொண்டிருந்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1323

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ الْمُزَنِيَّ ‏ ‏يَقُولُا ‏

‏قَرَأَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ الْفَتْحِ فِي مَسِيرٍ لَهُ سُورَةَ ‏ ‏الْفَتْحِ ‏ ‏عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏فَرَجَّعَ ‏ ‏فِي قِرَاءَتِهِ ‏

‏قَالَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏لَوْلَا أَنِّي أَخَافُ أَنْ يَجْتَمِعَ عَلَيَّ النَّاسُ لَحَكَيْتُ لَكُمْ قِرَاءَتَهُ

“நபி (ஸல்), மக்கா வெற்றிப் பயணத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி அல்ஃபத்ஹு எனும் (48ஆவது) அத்தியாயத்தை ஓசை நயத்துடன் ஓதினார்கள்” என அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல் முஸனீ (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.

மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லையாயின் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) ஓதிக் காட்டியதைப் போன்று (ஓசை நயத்துடன்) உங்களிடம் நான் ஓதிக் காட்டியிருப்பேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல் முஸனீ (ரலி) வழியாக முஆவியா பின் குர்ரா (ரஹ்)