அத்தியாயம்: 6, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1332

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَفْصٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ عَلَيَّ الْقُرْآنَ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي فَقَرَأْتُ ‏ ‏النِّسَاءَ ‏ ‏حَتَّى إِذَا بَلَغْتُ ‏فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا ‏‏

‏رَفَعْتُ رَأْسِي أَوْ غَمَزَنِي رَجُلٌ إِلَى جَنْبِي فَرَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ دُمُوعَهُ تَسِيلُ ‏

‏حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏وَمِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ ‏ ‏هَنَّادٌ ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ عَلَى الْمِنْبَرِ اقْرَأْ عَلَيَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! குர்ஆன் அருளப்படுவதே உங்கள் மீது. தங்களுக்கு நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு, “நான் பிறரிடமிருந்து அதைச் செவியுற விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு அந்நிசா எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “… ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது அல்லது எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

குறிப்பு :

ஹன்னாத் (ரஹ்) வழி அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிம்பர் மீதிருந்தபடி, “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று என்னிடம் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment