அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1145

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَعَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَابِرُ بْنُ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا عَجِلَ عَلَيْهِ السَّفَرُ يُؤَخِّرُ الظُّهْرَ إِلَى أَوَّلِ وَقْتِ الْعَصْرِ فَيَجْمَعُ بَيْنَهُمَا وَيُؤَخِّرُ الْمَغْرِبَ حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاءِ حِينَ يَغِيبُ الشَّفَقُ

நபி (ஸல்) அவசர(ப் பகற்) பயணம் செய்தால், லுஹ்ருத் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம்வரைத் தாமதப்படுத்தி, லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்துத் தொழுவார்கள்; செம்மேகம் மறையும்போது மஃக்ரிபுத் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1144

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ بْنُ سَوَّارٍ الْمَدَايِنِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلِ بْنِ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَرَادَ أَنْ يَجْمَعَ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَدْخُلَ أَوَّلُ وَقْتِ الْعَصْرِ ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا

நபி (ஸல்) பயணத்தில் இரு தொழுகைகளை இணைத்துத் தொழ விரும்பும்போது, லுஹ்ருத் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம் வரும்வரைத் தாமதப்படுத்துவார்கள்; பிறகு லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்துத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1143

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُفَضَّلُ يَعْنِي ابْنَ فَضَالَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ ‏ ‏تَزِيغَ ‏ ‏الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا فَإِنْ ‏ ‏زَاغَتْ ‏ ‏الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயணிக்கும் நேரத்தில் சூரியன் உச்சியிருந்து சாயாமலிருந்தால் லுஹ்ருத் தொழுகையை(யைத் தொழாமல் புறப்பட்டு) அஸ்ரு நேரம்வரைத் தாமதப்படுத்தி, பின்பு (ஓரிடத்தில்) இறங்கி லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்துத் தொழுவார்கள். அவர்கள் பயணம் புறப்படுவதற்குமுன் சூரியன் உச்சியிருந்து சாய்ந்துவிட்டிருந்தால் லுஹ்ருத் தொழுத பின்னர் பயணம் மேற்கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1142

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنَ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏قَالَ ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏أَعْجَلَهُ ‏ ‏السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ صَلَاةَ الْمَغْرِبِ حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ صَلَاةِ الْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவசர(இரா)ப் பயணம் புறப்படுவதாக இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப் படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1141

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவசர(இரா)ப் பயணம் புறப்பட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1140

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏كَانَ إِذَا ‏ ‏جَدَّ ‏ ‏بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بَعْدَ أَنْ يَغِيبَ الشَّفَقُ ‏

وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا ‏ ‏جَدَّ ‏ ‏بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

இப்னு உமர் (ரலி), அவசர(இரா)ப் பயணம் செய்வதாயின் (வானில்) செம்மேகம் மறைந்தபின் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவசர(இரா)ப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்” என்றும் குறிப்பிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1139

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا عَجِلَ بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவசர(இரா)ப் பயணம் புறப்பட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)