அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1365

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏مِمَّنْ أَنْتَ قُلْتُ مِنْ أَهْلِ ‏ ‏الْعِرَاقِ ‏ ‏قَالَ مِنْ أَيِّهِمْ قُلْتُ مِنْ أَهْلِ ‏ ‏الْكُوفَةِ ‏ ‏قَالَ هَلْ تَقْرَأُ عَلَى قِرَاءَةِ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَاقْرَأْ ‏ وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ‏قَالَ فَقَرَأْتُ ‏: ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى وَالنَّهَارِ إِذَا ‏ ‏تَجَلَّى ‏ ‏وَالذَّكَرِ وَالْأُنْثَى قَالَ فَضَحِكَ ثُمَّ قَالَ هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَؤُهَا ‏

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَتَيْتُ ‏ ‏الشَّامَ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏أَبَا الدَّرْدَاءِ ‏ ‏فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ

நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் “நீங்கள் எந்த நாட்டவர்?” என்று கேட்க, “இராக்கியர்’ என்று பதிலளித்தேன். “இராக்கியரில் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?” என்று அன்னார் வினவ, “கூஃபாவாசி”” என நான் விடையளித்தேன். “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிய முறையில் நீங்கள் ஓதுவீர்களா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால், வல்லைலி இதா யக்க்ஷா எனும் (92ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுங்கள்” என்றார்கள். நான் “வல்லைலி இதா யக்க்ஷா என ஓதத் தொடங்கி “வத்தகரி வல்உன்ஸா” என ஓதினேன். உடனே அபுத்தர்தா (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் செவியேற்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்)

குறிப்பு:

ஆமிர் (ரஹ்) அறிவிப்பில்,
“நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன்” என்று அல்கமா (ரஹ்) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1364

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ ‏
‏قَدِمْنَا ‏ ‏الشَّامَ ‏ ‏فَأَتَانَا ‏ ‏أَبُو الدَّرْدَاءِ ‏ ‏فَقَالَ أَفِيكُمْ أَحَدٌ يَقْرَأُ عَلَى قِرَاءَةِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقُلْتُ نَعَمْ أَنَا قَالَ فَكَيْفَ سَمِعْتَ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏يَقْرَأُ هَذِهِ الْآيَةَ” وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ” ‏ قَالَ سَمِعْتُهُ يَقْرَأُ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏يَغْشَى ‏ ‏وَالذَّكَرِ وَالْأُنْثَى
قَالَ وَأَنَا وَاللَّهِ هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَؤُهَا وَلَكِنْ هَؤُلَاءِ يُرِيدُونَ أَنْ أَقْرَأَ وَمَا خَلَقَ فَلَا أُتَابِعُهُمْ ‏

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ أَتَى ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏الشَّامَ ‏ ‏فَدَخَلَ مَسْجِدًا فَصَلَّى فِيهِ ثُمَّ قَامَ إِلَى حَلْقَةٍ فَجَلَسَ فِيهَا ‏ ‏قَالَ ‏ ‏فَجَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏فَعَرَفْتُ فِيهِ ‏ ‏تَحَوُّشَ ‏ ‏الْقَوْمِ وَهَيْئَتَهُمْ قَالَ فَجَلَسَ إِلَى جَنْبِي ثُمَّ قَالَ أَتَحْفَظُ كَمَا كَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏يَقْرَأُ فَذَكَرَ بِمِثْلِهِ

(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்களான) நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தோம். (செய்தியறிந்து) எங்களிடம் அபுத்தர்தா (ரலி) வந்து, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி ஓதத் தெரிந்தவர் எவரேனும் உங்களிடையே உண்டா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்; நான் (இருக்கிறேன்)” என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி), “வல்லைலி இஃதா யக்க்ஷா” எனும் இந்த (92:3ஆவது) வசனத்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) எவ்வாறு ஓத செவியுற்றீர்கள்?” என்று வினவினார்கள். நான் “வல்லைலி இஃதா யக்க்ஷா, வன்னஹாரி இஃதா ஜல்லா, வத்தகரி வல் உன்ஸா” என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் செவியுற்றுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) “வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா” என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால், இவர்களை நான் பின்பற்றமாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்)

குறிப்புகள்:

இபுராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில்,
அல்கமா (ரஹ்) கூறியிருப்பதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்குப் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதேன். பின்னர் எழுந்து ஒரு சபைக்குச் சென்று அதில் அமர்ந்தேன். அப்போது ஒருவர் (அபுத்தர்தா-ரலி) வந்து என் அருகே அமர்ந்தார். அவரிடம் (அக்கால) மக்களின் எளிமையையும் தோற்றத்தையும் கண்டேன். அவர் (என்னிடம்), “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஓதுகின்ற முறையை நீங்கள் மனனமிட்டுள்ளீர்களா?” என்று வினவினார். என்று இடம்பெற்றுள்ளது.

“வமா ஃகலக்க தகர வல் உன்ஸா“ என்று நாம் தற்போது ஓதுகின்ற (92:3) வசனம் தொடக்கத்தில் “வத்தகரி வல் உன்ஸா” என்று அருளப்பட்டிருந்ததாகக் குறிப்புகள் உள்ளன.

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1363

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏كَانَ يَقْرَأُ هَذَا الْحَرْفَ ‏ :‏‏فَهَلْ مِنْ ‏ ‏مُدَّكِرٍ

நபி (ஸல்) அவர்கள் (54:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) “ஃபஹல் மின்(ம்) முத்தகிர்” என்றே ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1362

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ رَجُلًا ‏ ‏سَأَلَ ‏ ‏الْأَسْوَدَ بْنَ يَزِيدَ ‏ ‏وَهُوَ يُعَلِّمُ الْقُرْآنَ فِي الْمَسْجِدِ ‏ ‏فَقَالَ ‏‏كَيْفَ تَقْرَأُ هَذِهِ الْآيَةَ :‏‏فَهَلْ مِنْ ‏ ‏مُدَّكِرٍ ‏ (54:32) ‏أَدَالًا أَمْ ذَالًا؟ قَالَ بَلْ دَالًا سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏مُدَّكِرٍ ‏ “‏دَالًا”

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) பள்ளிவாசலில் குர்ஆன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “நீங்கள் இந்த (54:32ஆவது) வசனத்தை எவ்வாறு ஓதுகின்றீர்கள்? ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என ‘தால்’ د எனும் எழுத்துடனா? அன்றி (ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என) ‘ஃதால்’ ذ எனும் எழுத்துடனா?” என்று கேட்டார். அதற்கு ‘தால்’ (د எனும் எழுத்து) கொண்டே (ஓதுகின்றேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முத்தகிர்’ என ‘தால்’ (د எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் செவியுற்றேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள் என்று அஸ்வத் (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் (ரஹ்)