و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ الزُّبَيْرِ بْنِ الْخِرِّيتِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ :
خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ يَوْمًا بَعْدَ الْعَصْرِ حَتَّى غَرَبَتْ الشَّمْسُ وَبَدَتْ النُّجُومُ وَجَعَلَ النَّاسُ يَقُولُونَ الصَّلَاةَ الصَّلَاةَ قَالَ فَجَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ لَا يَفْتُرُ وَلَا يَنْثَنِي الصَّلَاةَ الصَّلَاةَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ أَتُعَلِّمُنِي بِالسُّنَّةِ لَا أُمَّ لَكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ فَحَاكَ فِي صَدْرِي مِنْ ذَلِكَ شَيْءٌ فَأَتَيْتُ أَبَا هُرَيْرَةَ فَسَأَلْتُهُ فَصَدَّقَ مَقَالَتَهُ
ஒரு நாள் இப்னு அப்பாஸ் (ரலி) அஸ்ரு தொழுகைக்குப் பிறகு, சூரியன் மறைந்து நட்சத்திரங்கள் தோன்றும்வரை எங்களிடையே (நீண்ட) உரையாற்றினார்கள். மக்கள், “தொழுகை, தொழுகை” என்று கூறலாயினர். அப்போது பனூதமீம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து (நின்ற இடத்தைவிட்டும்) நகராமல் இடையறாமல், “தொழுகை தொழுக” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “நீ எனக்கு நபிவழியைக் கற்றுத் தருகிறாயா? தாயில்லாமல் போவாய்!” என்று (கடிந்து) கூறினார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரேநேரத்திலும் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து ஒரேநேரத்திலும் தொழுததை நான் பார்த்திருக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)
குறிப்பு :
இப்னு அப்பாஸ் (ரலி) அவ்வாறு கூறியதைக் கேட்டு என் மனத்தில் நெருடல் ஏற்பட்டது. உடனே நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அபூஹுரைரா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள் என்று அப்துல்லாஹ் பின் ஷகீக் குறிப்பிடுகின்றார்.