அத்தியாயம்: 7, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1445

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏

‏دَخَلَ ‏ ‏رَجُلٌ ‏ ‏الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ ‏ ‏أَصَلَّيْتَ قَالَ لَا قَالَ قُمْ فَصَلِّ الرَّكْعَتَيْنِ ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏قَالَ صَلِّ رَكْعَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒருவர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் தொழுதீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். “எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு: இந்த ஹதீஸின் குதைபா (ரஹ்) வழி அறிவிப்பிலும், ’இரண்டு ரக்அத்‘ எனும் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment