அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1464

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏شَهِدْتُ صَلَاةَ الْفِطْرِ مَعَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَعُثْمَانَ ‏ ‏فَكُلُّهُمْ يُصَلِّيهَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُ قَالَ فَنَزَلَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ ثُمَّ أَقْبَلَ ‏ ‏يَشُقُّهُمْ ‏ ‏حَتَّى جَاءَ النِّسَاءَ وَمَعَهُ ‏ ‏بِلَالٌ ‏ ‏فَقَالَ” ‏ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا “
‏فَتَلَا هَذِهِ الْآيَةَ حَتَّى فَرَغَ مِنْهَا ثُمَّ قَالَ حِينَ فَرَغَ مِنْهَا أَنْتُنَّ عَلَى ذَلِكِ فَقَالَتْ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ يُجِبْهُ غَيْرُهَا مِنْهُنَّ نَعَمْ يَا نَبِيَّ اللَّهِ لَا يُدْرَى حِينَئِذٍ مَنْ هِيَ قَالَ فَتَصَدَّقْنَ فَبَسَطَ ‏ ‏بِلَالٌ ‏ ‏ثَوْبَهُ ثُمَّ قَالَ هَلُمَّ فِدًى لَكُنَّ أَبِي وَأُمِّي فَجَعَلْنَ يُلْقِينَ ‏ ‏الْفَتَخَ ‏ ‏وَالْخَوَاتِمَ فِي ثَوْبِ ‏ ‏بِلَالٍ

நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ரு) தொழுகையில் பங்கேற்றுள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்; தொழுகைக்குப் பிறகு உரை நிகழ்த்துவார்கள்.

நபி (ஸல்) (ஒரு பெருநாள் உரையை முடித்துக்கொண்டு) அங்கிருந்து புறப்பட்டு ஆண்களை அமரும்படி தமது கையால் சைகை செய்தார்கள். அந்நிகழ்வு இன்றும் என் கண்களில் நிற்கின்றது! பிறகு அ(ங்கிருந்த ஆட)வர்களின் வரிசைகளை விலக்கிக்கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது, “நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் …” என்று தொடங்கும் (60:12ஆவது) இறைவசனத்தை நபி (ஸல்) முழுமையாக ஓதி முடித்துவிட்டு (பெண்களிடம்), “இந்த உறுதிமொழியில் நீங்கள் (நிலையாக) இருக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். ஒரேயொரு பெண்மணி மட்டும் “ஆம்; இறைத்தூதரே! (இருக்கின்றோம்)” என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. அந்தப் பெண்மணி யாரென்று அப்போது தெரியவில்லை. அப் பெண்களை நோக்கி நபி (ஸல்), “(பெண்களே!) தர்மம் செய்யுங்கள்” என்று சொன்னார்கள். பிலால் (ரலி) தமது மடியை ஏந்தியபடி, “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், வாருங்கள்” என்று கூறினார்கள். அப்பெண்கள் மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் மடியில் போடலாயினர்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment