அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3693

وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، أَخْبَرَنَا عَبْثَرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى، – وَهُوَ الْقَطَّانُ – حَدَّثَنَا سُفْيَانُ، وَشُعْبَةُ، قَالاَ حَدَّثَنَا مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، وَحَمَّادٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏

நபி (ஸல்), சுரைக்குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3692

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ جَرِيرٍ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ قَالَ :‏

قُلْتُ لِلأَسْوَدِ هَلْ سَأَلْتَ أُمَّ الْمُؤْمِنِينَ عَمَّا يُكْرَهُ أَنْ يُنْتَبَذَ فِيهِ قَالَ نَعَمْ ‏.‏ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَخْبِرِينِي عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُنْتَبَذَ فِيهِ ‏.‏ قَالَتْ نَهَانَا أَهْلَ الْبَيْتِ أَنْ نَنْتَبِذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏.‏ قَالَ قُلْتُ لَهُ أَمَا ذَكَرَتِ الْحَنْتَمَ وَالْجَرَّ قَالَ إِنَّمَا أُحَدِّثُكَ بِمَا سَمِعْتُ أَأُحَدِّثُكَ مَا لَمْ أَسْمَعْ

நான் அஸ்வது பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம், “குடிபானங்களை எந்தப் பாத்திரத்தில் ஊற்றி வைப்பது வெறுக்கப்பட்டது என நீங்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா- ரலி) அவர்களிடம் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள் “ஆம்; இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரங்களில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்? என்று நான் கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி), ‘நபி (ஸல்) தம் இல்லத்தாராகிய எங்களிடம் சுரைக் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்’ என்று விடையளித்தார்கள்” என்றார்கள்.

நான் (மீண்டும்) “மண் சாடியையும் சுட்ட களிமண் பாத்திரத்தையும் ஆயிஷா (ரலி) குறிப்பிடவில்லையா?” என அஸ்வத் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்), “நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் கேட்காதவற்றை உங்களுக்கு அறிவிப்பேனா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3691

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، أَخْبَرَنَا عَبْثَرٌ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – عَنْ شُعْبَةَ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَلِيٍّ قَالَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُنْتَبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏


هَذَا حَدِيثُ جَرِيرٍ ‏.‏ وَفِي حَدِيثِ عَبْثَرٍ وَشُعْبَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)


குறிப்பு :

ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது. அப்ஸர் பின் அல்காசிம் (ரஹ்) மற்றும் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “நபி (ஸல்) சுரைக்குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3690

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَخْبَرَنَا نُوحُ بْنُ قَيْسٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِوَفْدِ عَبْدِ الْقَيْسِ ‏ “‏ أَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُقَيَّرِ – وَالْحَنْتَمُ الْمَزَادَةُ الْمَجْبُوبَةُ – وَلَكِنِ اشْرَبْ فِي سِقَائِكَ وَأَوْكِهِ ‏”‏

நபி (ஸல்), அப்துல் கைஸ் தூதுக் குழுவினரிடம், “சுரைக்குடுவை, மண் சாடி, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உங்களுக்குத் தடை விதிக்கின்றேன். வேண்டுமானால், தோல் பைகளிலிருந்து (அனுமதிக்கப்பட்ட பானங்களை) அருந்திக்கொள்க. அதன் வாய்ப் பகுதியில் சுருக்கிட்டுக்கொள்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3689

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ:‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الْمُزَفَّتِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ ‏


قَالَ قِيلَ لأَبِي هُرَيْرَةَ مَا الْحَنْتَمُ قَالَ الْجِرَارُ الْخُضْرُ

நபி (ஸல்), தார் பூசப்பட்ட பாத்திரம், ‘ஹன்த்தம்’, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ‘ஹன்த்தம்’ என்பது என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “சுட்ட களிமண்ணாலான பச்சைநிற சாடிகள்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3688

وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ أَنْ يُنْتَبَذَ فِيهِ ‏‏


قَالَ وَأَخْبَرَهُ أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ وَلاَ فِي الْمُزَفَّتِ ‏”‏ ‏.‏ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاجْتَنِبُوا الْحَنَاتِمَ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்தித்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கின்றார்.

மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) வழியாகவும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்)  அறிவித்துள்ளார்.

அதில்,  “சுரைக்குடுவையில் பானங்களை ஊற்றிவைக்காதீர்கள். தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் ஊற்றிவைக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். கூடுதலாக, “மண் சாடிகளையும் தவிர்த்துவிடுங்கள்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3687

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ أَخْبَرَهُ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ أَنْ يُنْبَذَ فِيهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ

அத்தியாயம்: 36, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3686

وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ :‏

قَدْ نُهِيَ أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا وَالتَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا

நன்கு கனியாத, நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சை செங்காய்களும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்கப்படுவதும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதும் தடுக்கப்பட்டுவிட்டது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3685

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ :‏

قَدْ نُهِيَ أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا وَالتَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا

நன்கு கனியாத, நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சை செங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதும் தடுக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3684

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ حَبِيبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُخْلَطَ التَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا وَأَنْ يُخْلَطَ الْبُسْرُ وَالتَّمْرُ جَمِيعًا وَكَتَبَ إِلَى أَهْلِ جُرَشَ يَنْهَاهُمْ عَنْ خَلِيطِ التَّمْرِ وَالزَّبِيبِ ‏‏


وَحَدَّثَنِيهِ وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، – يَعْنِي الطَّحَّانَ – عَنِ الشَّيْبَانِيِّ، بِهَذَا الإِسْنَادِ فِي التَّمْرِ وَالزَّبِيبِ وَلَمْ يَذْكُرِ الْبُسْرَ وَالتَّمْرَ

நபி (ஸல்), பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்று சேர்(த்து ஊறவை)க்கப்படுவதற்கும் நன்கு கனியாத, நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சம் பழங்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் தடை விதித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) (யமன் நாட்டிலுள்ள) ‘ஜுரஷ்’வாசிகளுக்குப் பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் எனத் தடை செய்து கடிதம் எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

காலித் அத்தஹ்ஹான் (ரஹ்) வழி அறிவிப்பில், “பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கலந்து ஊறவைக்க வேண்டாம்” என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது.