Tag: இஹ்ராம்

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2134

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مَعْمَرِ بْنِ رِبْعِيٍّ الْقَيْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هِشَامٍ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَجْعَلَهَا عُمْرَةً وَنَحِلَّ قَالَ وَكَانَ مَعَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً

நாங்கள் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமானவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவுக்கு) வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக் கொண்டு, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு உத்தரவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பலிப் பிராணி இருந்ததால் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ள அவர்களால் இயலவில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2133

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نُعَيْمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ نَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏قَدِمْتُ ‏ ‏مَكَّةَ ‏ ‏مُتَمَتِّعًا ‏ ‏بِعُمْرَةٍ قَبْلَ ‏ ‏التَّرْوِيَةِ ‏ ‏بِأَرْبَعَةِ أَيَّامٍ فَقَالَ النَّاسُ تَصِيرُ حَجَّتُكَ الْآنَ مَكِّيَّةً فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏فَاسْتَفْتَيْتُهُ ‏ ‏فَقَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّهُ حَجَّ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏مَعَهُ وَقَدْ ‏ ‏أَهَلُّوا ‏ ‏بِالْحَجِّ ‏ ‏مُفْرَدًا ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحِلُّوا مِنْ إِحْرَامِكُمْ فَطُوفُوا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَقَصِّرُوا وَأَقِيمُوا حَلَالًا حَتَّى إِذَا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏فَأَهِلُّوا ‏ ‏بِالْحَجِّ وَاجْعَلُوا الَّتِي قَدِمْتُمْ بِهَا ‏ ‏مُتْعَةً ‏ ‏قَالُوا كَيْفَ نَجْعَلُهَا ‏ ‏مُتْعَةً ‏ ‏وَقَدْ سَمَّيْنَا الْحَجَّ قَالَ افْعَلُوا مَا آمُرُكُمْ بِهِ فَإِنِّي لَوْلَا أَنِّي سُقْتُ ‏ ‏الْهَدْيَ ‏ ‏لَفَعَلْتُ مِثْلَ الَّذِي أَمَرْتُكُمْ بِهِ وَلَكِنْ لَا يَحِلُّ مِنِّي حَرَامٌ ” ‏حَتَّى يَبْلُغَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَحِلَّهُ “‏ ‏‏فَفَعَلُوا

நான் துல்ஹஜ் பிறை எட்டுக்கு நான்கு நாட்களுக்கு முன்னால் உம்ராவிற்குப் பின் ஹஜ் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். அப்போது மக்கள், “(இப்படி உம்ராவிற்குப் பின் ஹஜ் செய்தால்) உமது ஹஜ் தற்போது மக்காவாசிகளின் ஹஜ்ஜாக மாறிவிடுகிறது (குறைந்த நன்மையே உமக்குக் கிடைக்கும்)” என்று கூறினர். நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது தொடர்பாக விளக்கம் கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்ஸாரி (ரலி) என்னிடம் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்த ஆண்டில் நானும் அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். அப்போது (அவர்களுடன் வந்த) மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்கு மட்டும் முஹ்ரிமாகி இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் தோழர்களிடம்), “நீங்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா-மர்வா இடையே ஓடிவிட்டு, தலைமுடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகிக் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு முன்னால் (ஹஜ்ஜுக்கு எனச்) செய்துவந்த இஹ்ராமை (உம்ராவை நிறைவு செய்து ஹஜ்ஜுக்குச் செய்யும்) ‘தமத்துஉ’ ஆக மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ் எனக் குறிப்பிட்ட இஹ்ராமை எவ்வாறு உம்ராவாக ஆக்கிக் கொள்வது?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் கட்டளை இடுவதைச் செய்யுங்கள். ஏனெனில், நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வரவில்லையாயின், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்றே நானும் செய்திருப்பேன். பலிப் பிராணி(யைக் கொண்டுவந்ததால் அது) உரிய இடத்தை அடைவதற்கு முன் (பலியிடும்வரை) நான் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது (2:196)” என்றார்கள். உடனே தோழர்கள் அவ்வாறே செய்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூஷிஹாப் மூஸா பின் நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2132

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏أَهْلَلْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏أَمَرَنَا أَنْ نَحِلَّ وَنَجْعَلَهَا عُمْرَةً فَكَبُرَ ذَلِكَ عَلَيْنَا وَضَاقَتْ بِهِ صُدُورُنَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَمَا نَدْرِي أَشَيْءٌ بَلَغَهُ مِنْ السَّمَاءِ أَمْ شَيْءٌ مِنْ قِبَلِ النَّاسِ فَقَالَ أَيُّهَا النَّاسُ ‏ ‏أَحِلُّوا فَلَوْلَا ‏ ‏الْهَدْيُ ‏ ‏الَّذِي مَعِي فَعَلْتُ كَمَا فَعَلْتُمْ قَالَ فَأَحْلَلْنَا حَتَّى ‏ ‏وَطِئْنَا ‏ ‏النِّسَاءَ وَفَعَلْنَا مَا يَفْعَلُ الْحَلَالُ حَتَّى إِذَا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏وَجَعَلْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏بِظَهْرٍ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னோம். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அது எங்களுக்குச் சிரமத்தையும் மன வேதனையும் அளித்தது.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களுக்கு வானிலிருந்து ஏதேனும் செய்தி எட்டியதா, அல்லது மக்களின் தரப்பிலிருந்து போய்ச் சேர்ந்ததா என்று எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில் அவர்கள், “மக்களே! நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். என்னுடன் பலிப் பிராணி இருந்திராவிட்டால் நீங்கள் செய்ததைப் போன்றே நானும் செய்திருப்பேன்” என்றார்கள்.

ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; மனைவியருடன் கூடி மகிழ்ந்தோம். (சாதாரணமாக) இஹ்ராமிலிருந்து விடுபட்டவர் செய்வதையெல்லாம் செய்தோம். துல் ஹஜ் எட்டாவது நாளானபோது, மக்காவிலிருந்து (மினாவை நோக்கிப்) புறப்படும் வேளையில் நாங்கள் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2131

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏فِي نَاسٍ مَعِي قَالَ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏أَصْحَابَ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ خَالِصًا وَحْدَهُ قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَقَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صُبْحَ رَابِعَةٍ مَضَتْ مِنْ ذِي الْحِجَّةِ فَأَمَرَنَا أَنْ نَحِلَّ قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ حِلُّوا وَأَصِيبُوا النِّسَاءَ قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏وَلَمْ يَعْزِمْ ‏ ‏عَلَيْهِمْ وَلَكِنْ أَحَلَّهُنَّ لَهُمْ فَقُلْنَا لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏إِلَّا خَمْسٌ أَمَرَنَا أَنْ ‏ ‏نُفْضِيَ إِلَى نِسَائِنَا ‏ ‏فَنَأْتِيَ ‏ ‏عرَفَةَ ‏ ‏تَقْطُرُ ‏ ‏مَذَاكِيرُنَا الْمَنِيَّ قَالَ يَقُولُ ‏ ‏جَابِرٌ ‏ ‏بِيَدِهِ كَأَنِّي أَنْظُرُ إِلَى قَوْلِهِ بِيَدِهِ يُحَرِّكُهَا قَالَ فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِينَا فَقَالَ قَدْ عَلِمْتُمْ ‏ ‏أَنِّي أَتْقَاكُمْ لِلَّهِ وَأَصْدَقُكُمْ وَأَبَرُّكُمْ وَلَوْلَا ‏ ‏هَدْيِي ‏ ‏لَحَلَلْتُ كَمَا تَحِلُّونَ وَلَوْ ‏ ‏اسْتَقْبَلْتُ ‏ ‏مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ لَمْ أَسُقْ ‏ ‏الْهَدْيَ ‏ ‏فَحِلُّوا فَحَلَلْنَا وَسَمِعْنَا وَأَطَعْنَا قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَقَدِمَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏مِنْ ‏ ‏سِعَايَتِهِ ‏ ‏فَقَالَ بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَهْدِ ‏ ‏وَامْكُثْ حَرَامًا قَالَ وَأَهْدَى لَهُ ‏ ‏عَلِيٌّ ‏ ‏هَدْيًا ‏ ‏فَقَالَ ‏ ‏سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَلِعَامِنَا هَذَا أَمْ لِأَبَدٍ فَقَالَ لِأَبَدٍ

நான் மக்கள் சிலருடன் இருந்தபோது, “முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் தனியாக ஹஜ்ஜுக்காக மட்டும் முஹ்ரிமாகி ‘தல்பியா’ சொன்னோம். நபி (ஸல்) துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (ஹஜ்ஜுக்கு முஹ்ரிமானவர்களாக) வந்தார்கள். அப்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள்:

“இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (உங்கள்) மனைவியருடன் கூடி மகிழுங்கள்” என்றார்கள் எனும் தகவலை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூற நான் கேட்டேன். ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடுவதை நபி (ஸல்) கட்டாயமாக்க வில்லை. மாறாக, அதை அனுமதியாகக் கூறினார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

அப்போது நாங்கள், “நமக்கும் அரஃபாவுக்குமிடையே ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாம் நம் மனைவியருடன் கூடி மகிழ நபி (ஸல்) உத்தரவிடுகிறார்களே! நம் இன உறுப்புகளில் இந்திரியத் துளிகள் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் அரஃபாவுக்குச் செல்வதா?” என்று (வியப்புடன்) பேசிக் கொண்டோம்.

இதைக் கூறியபோது ஜாபிர் (ரலி) தமது கையை அசைத்து சைகை செய்து காட்டியதை இப்போதும் என் மனக்கண்களால் நான் காண்கின்றேன்.

நாங்கள் பேசிக்கொண்டதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) எங்களிடையே எழுந்து, “நான் உங்களையெல்லாம்விட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவனும், மிகவும் உண்மையானவனும், அதிகமாக நன்மை புரிபவனும் ஆவேன் என்பதை நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால், நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதைப் போன்று நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்.

(ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ராச் செய்யலாம் என) நான் பின்னர் அறிந்ததை முன்னரே அறிந்திருந்தால், எனது பலிப் பிராணியை நான் கொண்டு வந்திருக்கமாட்டேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்!” என்றார்கள். நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்.

அப்போது (யமன் நாட்டில்) ஸகாத் வசூலிக்கும் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அலீ (ரலி) (ஹஜ்ஜுக்கு) வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்), “நீர் எதற்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னீர்?” என்று கேட்டார்கள். அலீ (ரலி), “நபி (ஸல்) எதற்காக முஹ்ரிமாகியுள்ளாரோ அதற்காகவே முஹ்ரிமாகியுள்ளேன்” என்றார்கள்.

நபி (ஸல்), “நீர் இஹ்ராமிலேயே நீடித்து, (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடுவீராக!” என்று கூறினார்கள். அலீ (ரலி) நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்திருந்தார்கள். அப்போது ஸுராக்கா பின் மாலிக் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளும் இச்சலுகை) இவ்வாண்டிற்கு மட்டுமா? எல்லா ஆண்டுக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “(இனி வரும்) எல்லா ஆண்டுகளுக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2129

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏أَمَرَنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا أَحْلَلْنَا أَنْ نُحْرِمَ إِذَا تَوَجَّهْنَا إِلَى ‏ ‏مِنًى ‏ ‏قَالَ ‏ ‏فَأَهْلَلْنَا ‏ ‏مِنْ ‏ ‏الْأَبْطَحِ

நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (துல்ஹஜ் எட்டாவது நாளில்) மினாவை நோக்கிச் செல்லும் போது (ஹஜ்ஜுக்காக) முஹ்ரிமாகி, தல்பியா சொல்லுமாறு நபி (ஸல்) உத்தரவிட்டார்கள். எனவே, நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘அல்அப்த்தஹ்’ எனுமிடத்தில் (ஹஜ்ஜுக்காக) முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2128

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ مَعَنَا النِّسَاءُ وَالْوِلْدَانُ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏طُفْنَا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالمَرْوَةِ ‏ ‏فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلْيَحْلِلْ قَالَ قُلْنَا أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ قَالَ فَأَتَيْنَا النِّسَاءَ وَلَبِسْنَا الثِّيَابَ وَمَسِسْنَا الطِّيبَ فَلَمَّا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ وَكَفَانَا الطَّوَافُ الْأَوَّلُ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي ‏ ‏بَدَنَةٍ

ஹஜ்ஜுக்காக முஹ்ரிம் ஆகி, ‘தல்பியா’ சொன்னவர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் இறையில்லத்தைச் சுற்றி வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே (ஸயீ) ஓடினோம்.

அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு(ஹலால் ஆகி)க் கொள்ளட்டும்” என்றார்கள். நாங்கள், “எந்த வகையில் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எல்லா வகையிலும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

ஆகவே, நாங்கள் மனைவியரிடம் கூடி மகிழ்தோம்; (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்; நறுமணம் பூசிக் கொண்டோம். துல்ஹஜ் எட்டாவது நாள் (யவ்முத் தர்வியா) வந்தபோது, ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறினோம். (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து முஹ்ரிமாகியிருந்த) நாங்கள் ஏற்கெனவே ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடியதே எங்களுக்குப் போதுமானதாக அமைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்)கொள்ள உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2122

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ الْحُسَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏ذَكْوَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ أَوْ خَمْسٍ فَدَخَلَ عَلَيَّ وَهُوَ غَضْبَانُ فَقُلْتُ مَنْ أَغْضَبَكَ يَا رَسُولَ اللَّهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ قَالَ ‏ ‏أَوَمَا شَعَرْتِ أَنِّي أَمَرْتُ النَّاسَ بِأَمْرٍ فَإِذَا هُمْ يَتَرَدَّدُونَ ‏ ‏قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏كَأَنَّهُمْ يَتَرَدَّدُونَ أَحْسِبُ ‏ ‏وَلَوْ أَنِّي اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا سُقْتُ الْهَدْيَ مَعِي حَتَّى أَشْتَرِيَهُ ثُمَّ ‏ ‏أَحِلُّ ‏ ‏كَمَا ‏ ‏حَلُّوا ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ الْحُسَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏ذَكْوَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏قَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَرْبَعٍ أَوْ خَمْسٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ الشَّكَّ مِنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏فِي قَوْلِهِ يَتَرَدَّدُونَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துல்ஹஜ் மாதம் நான்காவது நாள், அல்லது ஐந்தாவது நாள் அன்று (மக்காவிற்கு) வந்தார்கள். நானிருந்த இடத்திற்குக் கோபத்துடன் வந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கோபப் படுத்தியவர் யார்? அவரை, அல்லாஹ் நரகத்தில் நுழைவிப்பானாக!” என்று சொன்னேன்.

அதற்கு, “உனக்குத் தெரியுமா? நான் மக்களிடம் (பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக் கொள்ளட்டும் என) ஓர் உத்தரவு பிறப்பித்தேன். ஆனால், அவர்களோ தயக்கம் காட்டுகிறார்கள். நான் இப்போது அறிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால், (என்னுடன்) பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்க மாட்டேன்; இங்கு வந்த பிறகு வாங்கியிருப்பேன்; பின்னர் மக்கள் (தம் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி) இஹ்ராமிலிருந்து விடுபட்டதைப் போன்று நானும் விடுபட்டிருப்பேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு : “ஹகம் பின் உதைபா (ரஹ்) அறிவிப்பில், “…அவர்கள் தயக்கம் காட்டுவதைப் போல் தெரிகின்றது …” என நபி (ஸல்) கூறினார்கள் என்று நான் எண்ணுகிறேன் என இடம்பெற்றுள்ளது.

தக்வான் (ரஹ்) வழி அறிவிப்பில் “… மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள் …” எனும் வாசகத்தைப் பற்றி ஹகம் பின் உதைபா (ரஹ்) வெளியிட்ட ஐயம் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2121

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا نَرَى إِلَّا أَنَّهُ الْحَجُّ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏تَطَوَّفْنَا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَأَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْيَ أَنْ ‏ ‏يَحِلَّ ‏ ‏قَالَتْ فَحَلَّ مَنْ لَمْ يَكُنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏وَنِسَاؤُهُ لَمْ يَسُقْنَ الْهَدْيَ فَأَحْلَلْنَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَحِضْتُ فَلَمْ أَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَلَمَّا كَانَتْ ‏ ‏لَيْلَةُ الْحَصْبَةِ ‏ ‏قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَرْجِعُ النَّاسُ بِعُمْرَةٍ وَحَجَّةٍ وَأَرْجِعُ أَنَا بِحَجَّةٍ قَالَ ‏ ‏أَوْ مَا كُنْتِ طُفْتِ ‏ ‏لَيَالِيَ قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَتْ قُلْتُ لَا قَالَ فَاذْهَبِي مَعَ أَخِيكِ إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏فَأَهِلِّي بِعُمْرَةٍ ثُمَّ مَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا قَالَتْ ‏ ‏صَفِيَّةُ ‏ ‏مَا ‏ ‏أُرَانِي إِلَّا حَابِسَتَكُمْ قَالَ ‏ ‏عَقْرَى ‏ ‏حَلْقَى ‏ ‏أَوْ مَا كُنْتِ طُفْتِ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏قَالَتْ بَلَى قَالَ لَا بَأْسَ ‏ ‏انْفِرِي ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَلَقِيَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏مُصْعِدٌ ‏ ‏مِنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَأَنَا ‏ ‏مُنْهَبِطَةٌ ‏ ‏عَلَيْهَا ‏ ‏أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهُوَ مُنْهَبِطٌ مِنْهَا ‏

‏و قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏مُتَهَبِّطَةٌ وَمُتَهَبِّطٌ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُلَبِّي لَا نَذْكُرُ حَجًّا وَلَا عُمْرَةً ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَنْصُورٍ

ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றும் எண்ணத்துடன் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். நாங்கள் மக்கா சென்றடைந்ததும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, பலிப் பிராணியை (தம்முடன்) கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்டார்கள். அவ்வாறே பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பலிப் பிராணியைக் கொண்டு வராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொண்டனர்.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் நான் இறையில்லத்தைச் சுற்றிவரவில்லை. (ஹஜ் முடிந்து) ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தங்கும் இரவு வந்தபோது, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துத் திரும்புகின்றனர். நான் ஹஜ்ஜை மட்டுமே முடித்துவிட்டுத் திரும்புகிறேனே?” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாம் மக்கா வந்தடைந்த இரவுகளில் நீ இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். “அவ்வாறாயின், நீ உன் சகோதரர் (அப்துர் ரஹ்மான்) உடன் ‘தன்யீமு’க்குச் சென்று அங்கிருந்து உம்ராவிற்காக தல்பியா கூறி(உம்ராவை நிறைவேற்றி)க்கொள். பிறகு இன்னின்ன இடத்தில் நாம் சந்திப்போம்” என்று கூறினார்கள்.

“நான் உங்களைப் புறப்படவிடாமல் தடுத்துவிடுவேன் என எண்ணுகிறேன்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (செல்லமாக), “உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வரவில்லையா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். பரவாயில்லை நீ புறப்படு!” என்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக் கொண்டிருந்தபோது (உம்ராவை முடித்துத் திரும்பிய) என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் குன்றிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு : “அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் எண்ணமோ உம்ராவை நிறைவேற்றும் எண்ணமோ கொள்ளாமல் (பொதுவாக) ‘தல்பியா’ சொன்னவர்களாக (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம் …” என ஆயிஷா (ரலி) கூறினார்கள் என்று தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2115

حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ أَبُو أَيُّوبَ الْغَيْلَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏
‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا نَذْكُرُ إِلَّا الْحَجَّ حَتَّى جِئْنَا ‏ ‏سَرِفَ ‏ ‏فَطَمِثْتُ ‏ ‏فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا أَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ فَقُلْتُ وَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ خَرَجْتُ الْعَامَ قَالَ مَا لَكِ لَعَلَّكِ ‏ ‏نَفِسْتِ ‏ ‏قُلْتُ نَعَمْ قَالَ ‏ ‏هَذَا شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ ‏ ‏آدَمَ ‏ ‏افْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى تَطْهُرِي قَالَتْ فَلَمَّا قَدِمْتُ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَصْحَابِهِ اجْعَلُوهَا عُمْرَةً فَأَحَلَّ النَّاسُ إِلَّا مَنْ كَانَ مَعَهُ الْهَدْيُ قَالَتْ فَكَانَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَذَوِي ‏ ‏الْيَسَارَةِ ‏ ‏ثُمَّ أَهَلُّوا حِينَ رَاحُوا قَالَتْ فَلَمَّا كَانَ ‏ ‏يَوْمُ النَّحْرِ ‏ ‏طَهَرْتُ فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَفَضْتُ قَالَتْ فَأُتِيَنَا بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا فَقَالُوا أَهْدَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ نِسَائِهِ الْبَقَرَ فَلَمَّا كَانَتْ ‏ ‏لَيْلَةُ الْحَصْبَةِ ‏ ‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَرْجِعُ النَّاسُ بِحَجَّةٍ وَعُمْرَةٍ وَأَرْجِعُ بِحَجَّةٍ قَالَتْ فَأَمَرَ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏فَأَرْدَفَنِي عَلَى جَمَلِهِ قَالَتْ فَإِنِّي لَأَذْكُرُ وَأَنَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ أَنْعَسُ فَيُصِيبُ وَجْهِي ‏ ‏مُؤْخِرَةَ الرَّحْلِ حَتَّى جِئْنَا إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏فَأَهْلَلْتُ مِنْهَا بِعُمْرَةٍ جَزَاءً بِعُمْرَةِ النَّاسِ الَّتِي اعْتَمَرُوا ‏

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو أَيُّوبَ الْغَيْلَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏لَبَّيْنَا بِالْحَجِّ حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِسَرِفَ ‏ ‏حِضْتُ فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا أَبْكِي وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏الْمَاجِشُونِ ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏حَمَّادًا ‏ ‏لَيْسَ فِي حَدِيثِهِ فَكَانَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَذَوِي ‏ ‏الْيَسَارَةِ ‏ ‏ثُمَّ أَهَلُّوا حِينَ رَاحُوا وَلَا قَوْلُهَا وَأَنَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ أَنْعَسُ فَيُصِيبُ وَجْهِي ‏ ‏مُؤْخِرَةَ ‏ ‏الرَّحْلِ

நாங்கள் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றும் எண்ணத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘ஸரிஃப்’ எனும் இடத்திற்கு நாங்கள் வந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள்.

அழுதுகொண்டிருந்த என்னிடம் “உன் அழுகைக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஆண்டு நான் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டு வந்திருக்கக் கூடாது என்று கருதுகிறேன்” என்று கூறினேன். அவர்கள், “உனக்கு என்ன நேர்ந்தது? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்றார்கள். நான், “ஆம்” என்றேன். அப்போது, “இது ஆதமுடைய பெண்மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய ஒன்றாகும். எனவே, நீ தூய்மையாகும்வரை, இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்யும் மற்றெல்லாச் செயல்களையும் செய்துகொள்” என்று சொன்னார்கள்.

நான் மக்காவை அடைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களிடம், “உங்கள் இஹ்ராமை உம்ராவிற்காக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். உடனே தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொண்டனர். அப்போது நபி (ஸல்), அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) மற்றும் வசதி படைத்த இன்னும் சிலரிடம் பலிப் பிராணிகள் இருந்தன.

(உம்ராவிற்காக தல்பியா கூறியிருந்த) அவர்கள் (துல்ஹஜ் எட்டாவது நாளில் மினாவிற்குச்) சென்றபோது ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி, தல்பியா கூறினர். ‘நஹ்ரு’டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நான் (மாதவிடாயிலிருந்து) தூய்மையானபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உத்தரவின் பேரில், நான் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்தேன். பின்னர் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான் “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் துணைவியருக்காகக் குர்பானி கொடுத்தது” என்று கூறினர்.

முஹஸ்ஸபில் தங்கும் (துல்ஹஜ் பதினான்காவது) இரவில் நான், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றி விட்டுத் திரும்பிச் செல்ல, நானோ ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றிச் செல்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்), (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களிடம் (என்னைத் தன்யீமுக்கு அழைத்துச் சென்று, அங்கு உம்ராவிற்காக தல்பியா கூறுமாறு) உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது ஒட்டகத்தில் அமர்த்திக் கொண்டு சென்றார். நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் இளவயதுப் பெண்ணாக இருந்தேன். (ஒட்டகத்தில் அமர்ந்து சென்றபோது) நான் குட்டித் தூக்கம் போடுவேன். அப்போது எனது முகம் (ஒட்டகத்தின் சேணத்திலுள்ள) சாய்வுக் கட்டையில் இடித்துக்கொள்ளும். நாங்கள் இருவரும் தன்யீமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கு நான் உம்ராவிற்காக ‘தல்பியா’ கூறினேன். அது, மக்கள் முன்பே நிறைவேற்றிய உம்ராவிற்குப் பகரமாக அமைந்தது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு : ஹம்மாத் பின் ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் ஹஜ்ஜுக்காக ‘தல்பியா’ கூறி(ப் புறப்பட்டுச் செல்லலா)னோம். நாங்கள் ‘ஸரிஃப்’ எனுமிடத்தில் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருந்தேன் …” என்று தொடங்குகிறது. ஆனால், “நபி (ஸல்), அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) மற்றும் வசதி படைத்த இன்னும் சிலரிடம் பலிப் பிராணிகள் இருந்தன. (உம்ராவிற்காக தல்பியா கூறிய) அவர்கள் (துல்ஹஜ் எட்டாவது நாளில் மினாவிற்குச்) சென்றபோது ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி, தல்பியா’ கூறினர்” எனும் குறிப்பும், “நான் இளவயதுப் பெண்ணாக இருந்தேன். (ஒட்டகத்தில் அமர்ந்து சென்றபோது) நான் குட்டித் தூக்கம் போடுவேன். அப்போது எனது முகம் (ஒட்டகத்தின் சேணத்திலுள்ள) சாய்வுக் கட்டையில் இடித்துக் கொள்ளும்” எனும் குறிப்பும் இதில் இடம் பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2114

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا نَرَى إِلَّا الْحَجَّ حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِسَرِفَ ‏ ‏أَوْ قَرِيبًا مِنْهَا حِضْتُ فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا أَبْكِي فَقَالَ ‏ ‏أَنَفِسْتِ ‏ ‏يَعْنِي الْحَيْضَةَ ‏ ‏قَالَتْ قُلْتُ نَعَمْ قَالَ ‏ ‏إِنَّ هَذَا شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ ‏ ‏آدَمَ ‏ ‏فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى تَغْتَسِلِي قَالَتْ وَضَحَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ

நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் ‘ஸரிஃப்’ எனுமிடத்தில், அல்லது அதற்கு அருகில் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) நானிருந்த இடத்திற்கு வந்தார்கள்.

அழுது கொண்டிருந்த என்னிடம், “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர்கள், “இது ஆதமுடைய பெண்மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளித்துத் தூய்மையாகும் வரை, இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாச் செயல்களையும் செய்துகொள்” என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் துணைவியர் சார்பாக ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)