அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2428

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَبِي طَلْحَةَ ‏ ‏الْتَمِسْ لِي غُلَامًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي فَخَرَجَ بِي ‏ ‏أَبُو طَلْحَةَ ‏ ‏يُرْدِفُنِي وَرَاءَهُ فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُلَّمَا نَزَلَ وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ أَقْبَلَ حَتَّى إِذَا بَدَا لَهُ ‏ ‏أُحُدٌ ‏ ‏قَالَ ‏ ‏هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ فَلَمَّا أَشْرَفَ عَلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏قَالَ اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ جَبَلَيْهَا مِثْلَ مَا حَرَّمَ بِهِ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي ‏ ‏مُدِّهِمْ ‏ ‏وَصَاعِهِمْ ‏


و حَدَّثَنَاه ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கைபருக்குப் புறப்படுமுன்) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், “உங்கள் சிறுவர்களுள் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தேடித் தாருங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமரவைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நான் பணிவிடைகள் செய்துவந்தேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவுக்குத் திரும்பி) வந்துகொண்டிருந்தபோது, ‘உஹுத் மலை’ அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இந்த மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கின்றோம்” என்று சொன்னார்கள். பிறகு மதீனா தென்பட்டபோது, “இறைவா! இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று, இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித(நகர)மாக நான் அறிவிக்கின்றேன். இறைவா! மதீனாவாசிகளின் (முகத்தல் அளவைகளான) ‘முத்’துவிலும் ‘ஸாஉ’விலும் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

யாகூப் பின் அப்திர்ரஹ்மான் அல் காரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை …“ என்பதற்குப் பதிலாக “இந்த இரு கருங்கல் மலைகளுக்கிடையே உள்ள பகுதியை …“ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2427

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْعَقَدِيِّ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدٍ: ‏

أَنَّ ‏ ‏سَعْدًا ‏ ‏رَكِبَ إِلَى قَصْرِهِ ‏ ‏بِالْعَقِيقِ ‏ ‏فَوَجَدَ عَبْدًا يَقْطَعُ شَجَرًا أَوْ يَخْبِطُهُ فَسَلَبَهُ فَلَمَّا رَجَعَ ‏ ‏سَعْدٌ ‏ ‏جَاءَهُ أَهْلُ الْعَبْدِ فَكَلَّمُوهُ أَنْ يَرُدَّ عَلَى غُلَامِهِمْ أَوْ عَلَيْهِمْ مَا أَخَذَ مِنْ غُلَامِهِمْ فَقَالَ ‏ ‏مَعَاذَ اللَّهِ أَنْ أَرُدَّ شَيْئًا ‏ ‏نَفَّلَنِيهِ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبَى أَنْ يَرُدَّ عَلَيْهِمْ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) (மதீனாவிற்கு அருகில்) ‘அகீக்’ எனுமிடத்திலிருந்த தமது பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் புறப்பட்டார்கள். (வழியில்) அடிமையொருவர் ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருப்பதையோ இலைகளைப் பறித்துக்கொண்டிருப்பதையோ கண்டார்கள். உடனே (அவரைப் பிடித்து) அவரது மேலாடையைக் கழற்றிக்கொண்டார்கள். அவர்கள் (தமது பண்ணை வீட்டிற்கு) வந்துசேர்ந்தபோது அந்த அடிமையின் குடும்பத்தினர் அவர்களிடம் வந்து, தங்கள் அடிமையிடமிருந்து கைப்பற்றியதை அந்த அடிமையிடமோ தங்களிடமோ திரும்பித் தருமாறு கேட்டார்கள். அப்போது ஸஅத் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு வெகுமதியாக வழங்கிய எதையும் திருப்பித் தருவதிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” எனக் கூறி, அவர்களிடம் அதைத் தர மறுத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அன்னாரின் மகன் ஆமிர் பின் ஸஅத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2426

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ حَكِيمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَامِرُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏أَنْ يُقْطَعَ عِضَاهُهَا أَوْ يُقْتَلَ صَيْدُهَا وَقَالَ ‏ ‏الْمَدِينَةُ ‏ ‏خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ لَا يَدَعُهَا أَحَدٌ رَغْبَةً عَنْهَا إِلَّا أَبْدَلَ اللَّهُ فِيهَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَلَا يَثْبُتُ أَحَدٌ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏وَجَهْدِهَا إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ حَكِيمٍ الْأَنْصَارِيُّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ثُمَّ ذَكَرَ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏وَزَادَ فِي الْحَدِيثِ وَلَا يُرِيدُ أَحَدٌ أَهْلَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏بِسُوءٍ إِلَّا أَذَابَهُ اللَّهُ فِي النَّارِ ذَوْبَ الرَّصَاصِ أَوْ ذَوْبَ الْمِلْحِ فِي الْمَاءِ

“மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியின் மரங்களை வெட்டுவதற்கும் அதன் வேட்டைப் பிராணிகளைக் கொல்வதற்கும் நான் தடை விதிக்கின்றேன். மக்கள் அறிபவர்களாயிருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். எவரும் அதை வெறுத்து அதை விட்டுச் சென்றால், அவரைவிடச் சிறந்தவரை அதில் அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அங்கு ஏற்படும் பசி பட்டினியையும் கடினமான வாழ்க்கையையும் சகித்துக்கொண்டு, அங்கு நிலைத்திருப்பவருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக அல்லது சாட்சியம் அளிப்பவனாக இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு :

உஸ்மான் பின் ஹகீம் அல் அன்ஸாரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “மதீனாவாசிகளுக்குத் தீங்கிழைக்க எவரேனும் விரும்பினால், நெருப்பில் ஈயம் கரைவதைப் போன்று அல்லது நீரில் உப்பு கரைவதைப் போன்று அவரை அல்லாஹ் கரைத்துவிடுவான்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2425

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَحْمَدَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَسْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏حَرَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَإِنِّي حَرَّمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏ ‏لَا يُقْطَعُ عِضَاهُهَا وَلَا يُصَادُ صَيْدُهَا

“இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். அதன் முள் மரங்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2424

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عُتْبَةَ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعِ بْنِ جُبَيْرٍ: ‏

أَنَّ ‏ ‏مَرْوَانَ بْنَ الْحَكَمِ ‏ ‏خَطَبَ النَّاسَ فَذَكَرَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَأَهْلَهَا وَحُرْمَتَهَا وَلَمْ يَذْكُرْ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَأَهْلَهَا وَحُرْمَتَهَا فَنَادَاهُ ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ ‏ ‏فَقَالَ مَا لِي أَسْمَعُكَ ذَكَرْتَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَأَهْلَهَا وَحُرْمَتَهَا وَلَمْ تَذْكُرْ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَأَهْلَهَا وَحُرْمَتَهَا ‏ ‏وَقَدْ حَرَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏
‏وَذَلِكَ عِنْدَنَا فِي ‏ ‏أَدِيمٍ ‏ ‏خَوْلَانِيٍّ إِنْ شِئْتَ أَقْرَأْتُكَهُ قَالَ فَسَكَتَ ‏ ‏مَرْوَانُ ‏ ‏ثُمَّ قَالَ قَدْ سَمِعْتُ بَعْضَ ذَلِكَ

மர்வான் பின் அல்ஹகம் மக்களிடையே உரையாற்றியபோது மக்காவைப் பற்றியும், மக்காவாசிகள் பற்றியும் மக்காவின் புனிதம் பற்றியும் குறிப்பிட்டார். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகளைப் பற்றியோ மதீனாவின் புனிதம் பற்றியோ குறிப்பிடவில்லை. அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) மர்வானை அழைத்து, “நீர் மக்காவைப் பற்றியும் மக்காவாசிகள் பற்றியும் மக்காவின் புனிதம் பற்றியும் கூறினீர். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகளைப் பற்றியோ மதீனாவின் சிறப்பு பற்றியோ கூறவில்லையே ஏன்? மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புனிதமானதாக அறிவித்து உள்ளார்கள். இந்த விஷயம் எங்களிடமுள்ள ஒரு ‘கவ்லானீ’ (குலத்தாரின் மெல்லிய) தோல் ஏட்டில் பதிவாகி உள்ளது. நீர் விரும்பினால் அதை உமக்கு நான் வாசித்துக்காட்டுவேன்” என்று கூறினார்கள். மர்வான் (சிறிது நேரம்) அமைதியாக இருந்தார். பிறகு, “அதில் சிலவற்றை நானும் செவியுற்றுள்ளேன்” என்றார்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2423

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ يَعْنِي ابْنَ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏حَرَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏ ‏يُرِيدُ ‏ ‏الْمَدِينَةَ

“இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான், இந்த இரு மலைகளுக்கு இடைப்பட்ட (மதீனா) நகரப் பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி).

அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2422

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏حَرَّمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَدَعَا لِأَهْلِهَا وَإِنِّي حَرَّمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏كَمَا حَرَّمَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَإِنِّي دَعَوْتُ فِي ‏ ‏صَاعِهَا ‏ ‏وَمُدِّهَا ‏ ‏بِمِثْلَيْ مَا دَعَا بِهِ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏لِأَهْلِ ‏ ‏مَكَّةَ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ الْمُخْتَارِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمَخْزُومِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى هُوَ الْمَازِنِيُّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا حَدِيثُ ‏ ‏وُهَيْبٍ ‏ ‏فَكَرِوَايَةِ ‏ ‏الدَّرَاوَرْدِيِّ ‏ ‏بِمِثْلَيْ مَا دَعَا بِهِ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَأَمَّا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏وَعَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ‏ ‏فَفِي رِوَايَتِهِمَا مِثْلَ مَا دَعَا بِهِ ‏ ‏إِبْرَاهِيمُ

“இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்து, மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கின்றேன். இப்ராஹீம் (அலை) மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவின் (முகத்தல் அளவைகளான) ‘ஸாஉ’ மற்றும் ‘முத்’து ஆகியவற்றில் இரு மடங்கு (வளம் ஏற்படப்) பிரார்த்திக்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)


குறிப்புகள் :

உஹைப் பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே “இப்ராஹீம் (அலை) மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று இரு மடங்கு (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கின்றேன்” என்று இடம்பெற்றுள்ளது.

சுலைமான் பின் பிலால் (ரஹ்) மற்றும் அப்துல் அஸீஸ் பின் அல்முக்தார் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “இப்ராஹீம் (அலை) பிரார்த்தித்ததைப் போன்றே …” என இடம்பெற்றுள்ளது.