அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2265

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏ ‏جَمِيعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2262

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفَاضَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَأُسَامَةُ ‏ ‏رِدْفُهُ ‏ ‏قَالَ ‏ ‏أُسَامَةُ ‏ ‏فَمَا زَالَ يَسِيرُ عَلَى هَيْئَتِهِ حَتَّى أَتَى ‏ ‏جَمْعًا

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து திரும்பியபோது, அதே நிலையில் (மிதமான வேகத்தில்) தொடர்ந்து பயணம் மேற்கொண்டு முஸ்தலிஃபா போய்ச்சேர்ந்தார்கள்” என்று அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) பயணித்த உஸாமா பின் ஸைத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2261

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ سِبَاعٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ: ‏

أَنَّهُ كَانَ ‏ ‏رَدِيفَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أَفَاضَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَلَمَّا جَاءَ ‏ ‏الشِّعْبَ ‏ ‏أَنَاخَ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏ثُمَّ ذَهَبَ إِلَى ‏ ‏الْغَائِطِ ‏ ‏فَلَمَّا رَجَعَ صَبَبْتُ عَلَيْهِ مِنْ ‏ ‏الْإِدَاوَةِ ‏ ‏فَتَوَضَّأَ ثُمَّ رَكِبَ ثُمَّ أَتَى ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏فَجَمَعَ بِهَا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பியபோது அவர்களுக்குப் பின்னால் நான் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்துசேர்ந்ததும் தமது வாகன ஒட்டகத்தைப் படுக்க வைத்துவிட்டுக் கழிப்பிடம் நோக்கிச் சென்றார்கள். (தமது தேவையை முடித்து) அவர்கள் திரும்பியபோது, அவர்களுக்கு நான் நீர் குவளையிலிருந்து தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்தார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (இஷா நேரத்தில்) அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2260

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا أَتَى ‏ ‏النَّقْبَ ‏ ‏الَّذِي يَنْزِلُهُ الْأُمَرَاءُ نَزَلَ فَبَالَ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏أَهَرَاقَ ‏ ‏ثُمَّ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ فَقَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தலைவர்கள் (தமது பயணத்தில்) இறங்கி இயற்கைக் கடன்களை நிறைவேற்றும் பள்ளத்தாக்கு வந்தபோது, (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள்$. பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லிச் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு, தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

$சிறுநீர் கழித்தபின் “நீர் ஊற்றிக் கழுவிக்கொண்டார்கள்” என்பதை இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் உஸாமா (ரலி) குறிப்பிடவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2259

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ أَبُو خَيْثَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏كُرَيْبٌ: ‏

أَنَّهُ سَأَلَ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏كَيْفَ صَنَعْتُمْ حِينَ ‏ ‏رَدِفْتَ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَشِيَّةَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَقَالَ جِئْنَا ‏ ‏الشِّعْبَ ‏ ‏الَّذِي ‏ ‏يُنِيخُ ‏ ‏النَّاسُ فِيهِ لِلْمَغْرِبِ ‏ ‏فَأَنَاخَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَاقَتَهُ وَبَالَ وَمَا قَالَ ‏ ‏أَهَرَاقَ ‏ ‏الْمَاءَ ثُمَّ دَعَا بِالْوَضُوءِ فَتَوَضَّأَ وُضُوءًا لَيْسَ بِالْبَالِغِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ فَقَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ حَتَّى جِئْنَا ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏فَأَقَامَ الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ النَّاسُ فِي مَنَازِلِهِمْ وَلَمْ ‏ ‏يَحُلُّوا ‏ ‏حَتَّى أَقَامَ الْعِشَاءَ الْآخِرَةَ فَصَلَّى ثُمَّ ‏ ‏حَلُّوا ‏ ‏قُلْتُ فَكَيْفَ فَعَلْتُمْ حِينَ أَصْبَحْتُمْ قَالَ ‏ ‏رَدِفَهُ ‏ ‏الْفَضْلُ بْنُ عَبَّاسٍ ‏ ‏وَانْطَلَقْتُ أَنَا فِي ‏ ‏سُبَّاقِ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏عَلَى رِجْلَيَّ

நான் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தபோது அரஃபா நாளின் மாலையில் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “மக்கள் மஃக்ரிப் தொழுகைக்காக (தங்கள் ஒட்டகங்களை) படுக்கவைக்கும் பள்ளத்தாக்கிற்குச் சென்றோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்தார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள்$. பிறகு உளூச் செய்வதற்காகத் தண்ணீர் கேட்டார்கள். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் அழகுற உளூச் செய்யவில்லை.

நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்றார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். நாங்கள் முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்ததும் மஃக்ரிப் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு மக்கள் தம் ஒட்டகங்களைத் தத்தமது கூடாரங்களில் படுக்கவைத்தார்கள்; இஷாத் தொழுகையை முடிக்கும்வரை அவற்றை அவிழ்த்துவிடவில்லை. இஷாத் தொழுத பிறகே ஒட்டகங்களை அவிழ்த்(துப் பயணத்தைத் தொடர்ந்)தனர்” என்று உஸாமா (ரலி) விடையளித்தார்கள்.

நான், “மறுநாள் காலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்தார்கள். நான் (மினாவிற்கு) முந்திச் சென்றுகொண்டிருந்த குறைஷியருடன் நடந்தேசென்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக குறைப் (ரஹ்)


குறிப்புகள் :

$சிறுநீர் கழித்தபின் “நீர் ஊற்றிக் கழுவிக்கொண்டார்கள்” என்பதை இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் உஸாமா (ரலி) குறிப்பிடவில்லை.

உளூவைச் சுருக்கமாகச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை கழுவுவதாகும். அழகுற உளூச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை நன்றாகக் கழுவுவதாகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2258

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏يَقُولُ: ‏

أَفَاضَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَلَمَّا انْتَهَى إِلَى ‏ ‏الشِّعْبِ ‏ ‏نَزَلَ فَبَالَ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏أُسَامَةُ ‏ ‏أَرَاقَ الْمَاءَ ‏ ‏قَالَ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وُضُوءًا لَيْسَ بِالْبَالِغِ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ قَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ قَالَ ثُمَّ سَارَ حَتَّى بَلَغَ ‏ ‏جَمْعًا ‏ ‏فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து திரும்பியபோது, (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை அடைந்ததும் (வாகனத்திலிருந்து) இறங்கி, சிறுநீர் கழித்தார்கள்$. பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சுருக்கமாக உளூச் செய்தார்களேயன்றி, அழகுறச் செய்யவில்லை. அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்றார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்து முஸ்தலிஃபா வந்ததும் மஃக்ரிபையும் இஷாவையும் (அடுத்தடுத்துத்) தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்புகள் :

$சிறுநீர் கழித்தபின் “நீர் ஊற்றிக் கழுவிக்கொண்டார்கள்” என்பதை இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் உஸாமா (ரலி) குறிப்பிடவில்லை.

உளூவைச் சுருக்கமாகச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை கழுவுவதாகும். அழகுற உளூச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை நன்றாகக் கழுவுவதாகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2256

‏‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: ‏

دَفَعَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏حَتَّى إِذَا كَانَ ‏ ‏بِالشِّعْبِ ‏ ‏نَزَلَ فَبَالَ ثُمَّ تَوَضَّأَ ‏ ‏وَلَمْ يُسْبِغْ ‏ ‏الْوُضُوءَ فَقُلْتُ لَهُ الصَّلَاةَ قَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ فَلَمَّا جَاءَ ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏نَزَلَ فَتَوَضَّأَ ‏ ‏فَأَسْبَغَ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ ثُمَّ أُقِيمَتْ الْعِشَاءُ فَصَلَّاهَا وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் 9ஆவது நாள்) அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் வழக்கம்போல் அழகுற உளூச் செய்யவில்லை (சுருக்கமாகவே செய்தார்கள்). நான் அவர்களிடம், “(மஃக்ரிப்) தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு, “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்று அவர்கள் கூறியபின், வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் அழகுற உளூச் செய்தார்கள். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத்தைத் தத்தமது கூடாரத்தில் படுக்க வைத்தனர். பிறகு இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் இஷாத் தொழுதார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே நபியவர்கள் (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

+ இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் அடுத்தடுத்துத் தொழுவதற்கு, ‘ஜம்உ’ என்று சொல்லப்படும். ‘ஜம்உ’ எனும் அரபுச் சொல்லுக்கு, இணைத்தல்/சேர்த்தல் என்று பொருளாகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2251

‏و حَدَّثَنِيهِ ‏ ‏يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زِيَادٌ يَعْنِي الْبَكَّائِيَّ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏كَثِيرِ بْنِ مُدْرِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏وَالْأَسْوَدِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَا سَمِعْنَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ ‏ ‏بِجَمْعٍ: ‏

سَمِعْتُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏هَاهُنَا يَقُولُ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ ثُمَّ لَبَّى وَلَبَّيْنَا مَعَهُ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), முஸ்தலிஃபாவில் “அல்பகரா அத்தியாயம் அருளப்பெற்றவர் (முஹம்மது – ஸல்) இந்த இடத்தில் ‘லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்’ என(தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் தல்பியாச் சொன்னார்கள்; அவர்களுடன் நாங்களும் தல்பியாச் சொன்னோம்.

அறிவிப்பாளர்கள் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) & அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2250

‏و حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُصَيْنٌ ‏ ‏عَنْ ‏ ‏كَثِيرِ بْنِ مُدْرِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ: ‏

أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏لَبَّى حِينَ ‏ ‏أَفَاضَ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏فَقِيلَ أَعْرَابِيٌّ هَذَا فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَنَسِيَ النَّاسُ أَمْ ضَلُّوا سَمِعْتُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏يَقُولُ فِي هَذَا الْمَكَانِ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும்போது தல்பியாச் சொன்னார்கள். அப்போது “இவர் ஒரு கிராமவாசியா?” என்று கேட்கப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “மக்கள் மறந்துவிட்டனரா, அல்லது வழிதவறி விட்டனரா? அல்பகரா அத்தியாயம் அருளப்பெற்றவர் (முஹம்மது – ஸல்) இந்த இடத்தில் ‘லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்’ என(தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2248

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏وَكَانَ ‏ ‏رَدِيفَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, أَنَّهُ قَالَ: ‏

فِي عَشِيَّةِ ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَغَدَاةِ ‏ ‏جَمْعٍ ‏ ‏لِلنَّاسِ حِينَ ‏ ‏دَفَعُوا ‏ ‏عَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَهُوَ ‏ ‏كَافٌّ ‏ ‏نَاقَتَهُ حَتَّى دَخَلَ مُحَسِّرًا وَهُوَ مِنْ ‏ ‏مِنًى ‏ ‏قَالَ عَلَيْكُمْ ‏ ‏بِحَصَى الْخَذْفِ ‏ ‏الَّذِي ‏ ‏يُرْمَى بِهِ ‏ ‏الْجَمْرَةُ ‏ ‏وَقَالَ لَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُلَبِّي حَتَّى رَمَى ‏ ‏الْجَمْرَةَ ‏

و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ وَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ وَزَادَ فِي حَدِيثِهِ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُشِيرُ بِيَدِهِ كَمَا ‏ ‏يَخْذِفُ ‏ ‏الْإِنْسَانُ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபா நாள் மாலையிலும் முஸ்தலிஃபா நாள் காலையிலும் திரும்பிக்கொண்டிருந்த மக்களிடம், ‘மெதுவாகச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒட்டகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மினாவிலுள்ள முஹஸ்ஸிர் பள்ளப் பாதையில் நுழைந்ததும், ‘ஜம்ராவில் எறிவதற்காக, சுண்டி எறியப்படும் சிறு கற்களை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்தவரான ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும் அதில், (‘சுண்டி எறியப்படும் சிறு கற்கள்’ என்று கூறும்போது) “ஒருவர், கல் சுண்டி விளையாடுவதைப் போன்று தமது கையால் சைகை செய்தார்கள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.