அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1469

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏أَوَّلَ مَا بُويِعَ لَهُ ‏ ‏أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ فَلَا تُؤَذِّنْ لَهَا قَالَ فَلَمْ يُؤَذِّنْ لَهَا ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلَاةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ قَالَ فَصَلَّى ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏قَبْلَ الْخُطْبَةِ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) (மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்று) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்” என்ற செய்தியை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், ‘பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது’ எனும் செய்தியையும் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1466

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ ‏

‏إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ النَّاسَ فَلَمَّا فَرَغَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَزَلَ وَأَتَى النِّسَاءَ فَذَكَّرَهُنَّ وَهُوَ ‏ ‏يَتَوَكَّأُ ‏ ‏عَلَى يَدِ ‏ ‏بِلَالٍ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏بَاسِطٌ ثَوْبَهُ يُلْقِينَ النِّسَاءُ صَدَقَةً ‏

‏قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏زَكَاةَ يَوْمِ الْفِطْرِ قَالَ لَا وَلَكِنْ صَدَقَةً يَتَصَدَّقْنَ بِهَا حِينَئِذٍ تُلْقِي الْمَرْأَةُ ‏ ‏فَتَخَهَا ‏ ‏وَيُلْقِينَ وَيُلْقِينَ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏أَحَقًّا عَلَى الْإِمَامِ الْآنَ أَنْ يَأْتِيَ النِّسَاءَ حِينَ يَفْرُغُ فَيُذَكِّرَهُنَّ قَالَ إِي لَعَمْرِي إِنَّ ذَلِكَ لَحَقٌّ عَلَيْهِمْ وَمَا لَهُمْ لَا يَفْعَلُونَ ذَلِكَ

நபி (ஸல்) நோன்புப் பெருநாளன்று உரையாற்றுவதற்கு முன் எழுந்து தொழுதார்கள். அதற்குப் பிறகே மக்களுக்கு உரையாற்றினார்கள். நபி (ஸல்) உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) மீது சாய்ந்து நின்றுகொண்டு, பெண்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அப்போது பிலால் (ரலி) தமது ஆடையொன்றை விரித்துப் பிடிக்க, அதில் பெண்கள் தர்மப் பொருட்களைப் போட்டனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறுகிறார்:

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் “நோன்புப் பெருநாள் (ஸதக்கத்துல் ஃபித்ரு) தர்மத்தையா (அப்பெண்கள் இட்டார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை; அப்போதைக்குத் தாமாகவே முன்வந்து தர்மப் பொருட்களை அவர்கள் ஈந்தனர். பெண்கள் தம் மெட்டிகளையும் இன்னும் பிறவற்றையும் போட்டனர்” என்று அதாஉ (ரஹ்) கூறினார்கள்.

மேலும், நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “உரை நிகழ்த்திய பின் பெண்கள் பகுதிக்குச் சென்று உபதேசம் செய்வது இன்றைக்கும் தலைவர்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு, “நிச்சயம். சத்தியமாக! அது அவர்களுக்குக் கடமைதான். அதை அவர்கள் எவ்வாறு செய்யாமலிருக்க முடியும்?” என்று அதாஉ (ரஹ்) கேட்டார்கள்.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1465

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏

‏أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ قَالَ ثُمَّ خَطَبَ فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعْ النِّسَاءَ فَأَتَاهُنَّ فَذَكَّرَهُنَّ وَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏قَائِلٌ بِثَوْبِهِ فَجَعَلَتْ الْمَرْأَةُ تُلْقِي الْخَاتَمَ ‏ ‏وَالْخُرْصَ ‏ ‏وَالشَّيْءَ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பெருநாள் அன்று) உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள். (தொழுகைக்குப்) பிறகு உரையாற்றினார்கள் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.

தமது உரை, பெண்கள் பகுதிக்கு எட்டியிருக்காது என்று நினைத்துப் பெண்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டவிதிகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அவற்றைப் பெறுவதற்காக) பிலால் (ரலி), தமது ஆடையை விரித்து பிடித்துக் கொண்டிருந்தார். பெண்கள் தங்களுடைய மோதிரங்களையும் காதணிகளையும் பிறவற்றையும் (கழற்றிப்) போடலானார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)