அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2143

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏

‏قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏مُنِيخٌ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏أَحَجَجْتَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ قُلْتُ لَبَّيْكَ ‏ ‏بِإِهْلَالٍ ‏ ‏كَإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَقَدْ أَحْسَنْتَ طُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَأَحِلَّ قَالَ فَطُفْتُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ ‏ ‏بَنِي قَيْسٍ ‏ ‏فَفَلَتْ رَأْسِي ثُمَّ ‏ ‏أَهْلَلْتُ ‏ ‏بِالْحَجِّ قَالَ فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ حَتَّى كَانَ فِي خِلَافَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ يَا ‏ ‏أَبَا مُوسَى ‏ ‏أَوْ يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ‏ ‏رُوَيْدَكَ بَعْضَ فُتْيَاكَ فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي ‏ ‏النُّسُكِ ‏ ‏بَعْدَكَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ فُتْيَا ‏ ‏فَلْيَتَّئِدْ ‏ ‏فَإِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَبِهِ فَأْتَمُّوا قَالَ فَقَدِمَ ‏ ‏عُمَرُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّ كِتَابَ اللَّهِ يَأْمُرُ بِالتَّمَامِ وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَحِلَّهُ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம், “ஹஜ் செய்வதற்காகவா வந்துள்ளீர்?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “நீர் எதற்காக இஹ்ராம் பூண்டீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் பூண்டேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நன்றே செய்தீர். நீர் (சென்று) இறையில்லம் கஅபாவை (தவாஃப்) சுற்றி, ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி(தொங்கோட்டம் ஓடி)விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க” என்றார்கள்.

அவ்வாறே நான் (சென்று) இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவுக்கிடையேயும் சுற்றிவிட்டுப் பின்னர் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் சென்றேன். அவர் எனது தலையில் பேன் பார்த்து விட்டார். பின்னர் (துல்ஹஜ் எட்டாவது நாளில்) நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னேன். இவ்வாறு (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான் மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கி வந்தேன்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒருவர் வந்து, “அபூமூஸா! (அல்லது) அப்துல்லாஹ் பின் கைஸ்! உங்களது தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) ஹஜ்ஜின் செயல்முறைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறினார்.

அதன் பின்னர் நான், “மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செயல்படுத்துவதை) அவர் நிறுத்தி வைக்கட்டும். ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்” என்று கூறினேன்.

உமர் (ரலி) வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) “நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டளையிடுகிறது. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பலிப் பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.10, ஹதீஸ் எண்: 2086

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَصْبَهَانِيِّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَعْقِلٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏كَعْبُ بْنُ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُحْرِمًا فَقَمِلَ رَأْسُهُ وَلِحْيَتُهُ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرْسَلَ إِلَيْهِ فَدَعَا الْحَلَّاقَ فَحَلَقَ رَأْسَهُ ثُمَّ قَالَ لَهُ ‏ ‏هَلْ عِنْدَكَ نُسُكٌ قَالَ مَا أَقْدِرُ عَلَيْهِ فَأَمَرَهُ أَنْ يَصُومَ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ يُطْعِمَ سِتَّةَ مَسَاكِينَ لِكُلِّ مِسْكِينَيْنِ صَاعٌ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِ خَاصَّةً ”: ‏ ‏فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ “‏ ‏ثُمَّ كَانَتْ لِلْمُسْلِمِينَ عَامَّةً

நான் (ஹுதைபியாவின்போது) இஹ்ராம் பூண்டவனாக நபி (ஸல்) அவர்களுடன் (உம்ராவிற்காகச்) சென்றேன். அப்போது எனது தலையிலும் தாடியிலும் பேன்கள் நிறைந்திருந்தன.

இத்தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் (என்னை அழைத்து வருமாறு) என்னிடம் ஆளனுப்பினார்கள்; நாவிதரையும் அழைத்தார்கள். அவர் (வந்து) எனது தலையை மழித்தார். பிறகு, “உன்னிடம் ஏதேனும் குர்பானிப் பிராணி உண்டா?” என்று நபியவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், “எனக்கு அதற்கான வசதி இல்லை” என்றேன்.

அவ்வாறாயின், மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு ஒரு ‘ஸாஉ’ வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளி” என்று கூறினார்கள். வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் “உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்” எனும் (2:196ஆவது) வசனத்தைக் குறிப்பாக என் தொடர்பாக அருளினான். பின்னர் முஸ்லிம்கள் அனைவருக்கும் (அதன் சட்டம்) பொதுவானதாக அமைந்தது.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.10, ஹதீஸ் எண்: 2084

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِهِ زَمَنَ ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏آذَاكَ ‏ ‏هَوَامُّ ‏ ‏رَأْسِكَ قَالَ نَعَمْ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏احْلِقْ رَأْسَكَ ثُمَّ اذْبَحْ شَاةً نُسُكًا أَوْ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ أَطْعِمْ ثَلَاثَةَ ‏ ‏آصُعٍ مِنْ تَمْرٍ عَلَى سِتَّةِ مَسَاكِينَ

ஹுதைபியாவின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னிடம், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன்.

அதற்கு நபி (ஸல்), “நீ உனது தலையை மழித்துக் கொள். பிறகு ஓர் ஆட்டை அறுத்துப் பலியிடு. அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது மூன்று ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்தை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.10, ஹதீஸ் எண்: 2083

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي نَجِيحٍ ‏ ‏وَأَيُّوبَ ‏ ‏وَحُمَيْدٍ ‏ ‏وَعَبْدِ الْكَرِيمِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِهِ وَهُوَ ‏ ‏بِالْحُدَيْبِيَةِ ‏ ‏قَبْلَ أَنْ يَدْخُلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ وَهُوَ يُوقِدُ تَحْتَ قِدْرٍ وَالْقَمْلُ يَتَهَافَتُ عَلَى وَجْهِهِ فَقَالَ ‏ ‏أَيُؤْذِيكَ ‏ ‏هَوَامُّكَ ‏ ‏هَذِهِ قَالَ نَعَمْ قَالَ فَاحْلِقْ رَأْسَكَ وَأَطْعِمْ فَرَقًا بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ وَالْفَرَقُ ثَلَاثَةُ ‏ ‏آصُعٍ أَوْ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ ‏ ‏انْسُكْ ‏ ‏نَسِيكَةً ‏
‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي نَجِيحٍ ‏ ‏أَوْ اذْبَحْ شَاةً

நான் (உம்ராவிற்குச் சென்றபோது) மக்காவிற்குள் நுழைவதற்கு முன் இஹ்ராம் பூண்டவனாக ஹுதைபியாவில் ஒரு பாத்திரத்தின் கீழ் தீ மூட்டி(சமைத்து)க் கொண்டிருந்தேன். (எனது தலையிலிருந்த) பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது என்னைக் கடந்து சென்ற நபி (ஸல்), “உன் தலையிலுள்ள இப் பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன்.

“அப்படியானால், நீ உனது தலையை மழித்துக் கொள். (அதற்குப் பரிகாரமாக) ஒரு ‘ஃபரக்’ உணவை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி. அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2082

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَيْفٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏كَعْبُ بْنُ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَفَ عَلَيْهِ وَرَأْسُهُ يَتَهَافَتُ قَمْلًا فَقَالَ ‏ ‏أَيُؤْذِيكَ ‏ ‏هَوَامُّكَ ‏ ‏قُلْتُ نَعَمْ قَالَ فَاحْلِقْ رَأْسَكَ قَالَ فَفِيَّ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ

”‏ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ ‏ ‏نُسُكٍ ‏“‏ ‏

‏فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ تَصَدَّقْ ‏ ‏بِفَرَقٍ ‏ ‏بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ أَوْ ‏ ‏انْسُكْ ‏ ‏مَا تَيَسَّرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹுதைபியா பயணத்தில்) என் அருகில் (வந்து) நின்றார்கள். அப்போது எனது தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் என்றேன்”. “அப்படி எனில் நீ உனது தலையை மழித்துக் கொள்” என்றார்கள்.

இதையடுத்து “உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தால் (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்” எனும் இந்த (2:196ஆவது) வசனம் என் தொடர்பாக அருளப்பெற்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு ஒரு ‘ஃபரக்’ அளவு தர்மம் செய். அல்லது உன்னால் இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)


குறிப்பு : ‘ஃபரக்’ என்பது தற்கால அளவுக்குத் தோராயமாக 6.5 கிலோவாகும். ஒரு “ஃபரக்’ என்பது மூன்று ‘ஸாஉ’கள் கொண்டது; ஒரு ‘ஸாஉ’ என்றால் நடுத்தரமான ஒருவரின் இரு கை நிறைய நான்கு முறை அள்ளிப் போடும் அளவைக் குறிக்கும். ஒரு ‘ஸாஉ’ = 2 கிலோ 176 கிராம் அளவாகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2081

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏فِيَّ أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ ”‏ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ ‏ ‏نُسُكٍ ‏“‏

‏قَالَ فَأَتَيْتُهُ فَقَالَ ‏ ‏ادْنُهْ فَدَنَوْتُ فَقَالَ ‏ ‏ادْنُهْ فَدَنَوْتُ فَقَالَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُؤْذِيكَ ‏ ‏هَوَامُّكَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏وَأَظُنُّهُ ‏ ‏قَالَ نَعَمْ قَالَ فَأَمَرَنِي بِفِدْيَةٍ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ مَا تَيَسَّرَ

“உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது பலியிட வேண்டும்” எனும் இந்த (2:196ஆவது) வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது.

நான் (ஹுதைபியாவின்போது முஹ்ரிமாக) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “அருகில் வா!” என்றார்கள். நான் அருகில் சென்றேன். “இன்னும் நெருங்கி வா!” என்றார்கள். நான் இன்னும் நெருங்கினேன். பிறகு நபி (ஸல்), “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்), (தலைமுடியை மழித்துவிட்டு) அதற்குப் பரிகாரமாக (மூன்று) நோன்புகள் நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2080

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَمَنَ ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏وَأَنَا أُوقِدُ تَحْتَ ‏ ‏قَالَ ‏ ‏الْقَوَارِيرِيُّ ‏ ‏قِدْرٍ لِي ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏بُرْمَةٍ ‏ ‏لِي ‏ ‏وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ ‏ ‏أَيُؤْذِيكَ ‏ ‏هَوَامُّ ‏ ‏رَأْسِكَ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَاحْلِقْ وَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ أَوْ ‏ ‏انْسُكْ ‏ ‏نَسِيكَةً ‏

‏قَالَ ‏ ‏أَيُّوبُ ‏ ‏فَلَا أَدْرِي بِأَيِّ ذَلِكَ بَدَأَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ

ஹுதைபியா உடன்படிக்கை நடந்த காலகட்டத்தில் (உம்ராவிற்காக நான் இஹ்ராம் பூண்டிருந்தபோது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது (கற்)பாத்திரத்தின் கீழே நெருப்பை மூட்டி(சமைத்து)க் கொண்டிருந்தேன். (அப்போது எனது தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்’ என்று கூறினேன். அதற்கு, “உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)


குறிப்பு : மூன்று நோன்பு நோற்றல், ஆறு ஏழைகளுக்கு உணவளித்தல், குர்பானி கொடுத்தல் ஆகிய இம்மூன்றில் எதை முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டார்கள் என்று எனக்கு நினைவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அய்யூப் (ரஹ்) கூறுகின்றார்.