அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2192

‏حَدَّثَنِي ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ عِنْدَ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏فَأَتَاهُ آتٍ فَقَالَ إِنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏وَابْنَ الزُّبَيْرِ ‏ ‏اخْتَلَفَا فِي ‏ ‏الْمُتْعَتَيْنِ ‏ ‏فَقَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَعَلْنَاهُمَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ نَهَانَا عَنْهُمَا ‏ ‏عُمَرُ ‏ ‏فَلَمْ نَعُدْ لَهُمَا

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் (இடைக்காலத் திருமணம், இடைக்காலப் பயனடையும் ஹஜ் ஆகிய) இரு ‘முத்ஆ’க்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கின்றது” என்றார்.

அதற்கு ஜாபிர் (ரலி), “நாங்கள் அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யக் கூடாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, அதற்குப் பின்னர் நாங்கள் அவ்விரண்டையும் செய்யவில்லை” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூநள்ரா (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2178

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الْأَرْضِ وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا
‏ ‏بَرَأَ ‏ ‏الدَّبَرْ وَعَفَا ‏ ‏الْأَثَرْ ‏ ‏وَانْسَلَخَ ‏ ‏صَفَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ ‏ ‏اعْتَمَرْ فَقَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً ‏ ‏فَتَعَاظَمَ ‏ ‏ذَلِكَ عِنْدَهُمْ
فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ

அ(றியாமைக் காலத்த)வர்கள், ஹஜ்ஜுப் பருவ மாதங்களில் உம்ராச் செய்வது
பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் எனக் கருதியிருந்தனர்.
(துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை
விதிக்கப்பட்ட புனித மாதங்களாக வழக்கில் இருந்ததால்) முஹர்ரம்
மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றிக் கொள்வார்கள். (ஹஜ்
பயணத்திற்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்) வடு மறைந்து,
காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதம் கழிந்தால் உம்ராவை நாடியவர், உம்ராச் செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர்.

நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காவது நாள்
காலை, ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வந்தபோது, (தம் தோழர்களிடம்) அவர்களது
இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
இது நபித்தோழர்களுக்கு மிகக் கடினமாகத் தெரிந்தது.

இதனால், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்), “எல்லாமும் அனுமதிக்கப்படும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 874

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏كَثِيرُ بْنُ هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ الدَّسْتَوَائِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏

نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ أَكْلِ الْبَصَلِ وَالْكُرَّاثِ فَغَلَبَتْنَا الْحَاجَةُ فَأَكَلْنَا مِنْهَا فَقَالَ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْمُنْتِنَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسُ

வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்து விட்டதால், அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம்.

அப்போது அவர்கள், “துர்நாற்றமுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில் மனிதர்களுக்குத் தொல்லை தருபவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)