அத்தியாயம்: 16, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2490

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏يَقُولُ: ‏

أَرَادَ ‏ ‏عُثْمَانُ بْنُ مَظْعُونٍ ‏ ‏أَنْ ‏ ‏يَتَبَتَّلَ ‏ ‏فَنَهَاهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَوْ أَجَازَ لَهُ ذَلِكَ ‏ ‏لَاخْتَصَيْنَا

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) துறவறம் மேற்கொள்ள விரும்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரைத் தடுத்துவிட்டார்கள். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்திருந்தால், (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக்கொண்டிருப்போம்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2489

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو عِمْرَانَ مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعْدًا ‏ ‏يَقُولُ: ‏

رُدَّ عَلَى ‏ ‏عُثْمَانَ بْنِ مَظْعُونٍ ‏ ‏التَّبَتُّلُ ‏ ‏وَلَوْ أُذِنَ لَهُ ‏ ‏لَاخْتَصَيْنَا

துறவறம் மேற்கொள்ள உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக்கொண்டிருப்போம்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2488

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏قَالَ: ‏

رَدَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏عُثْمَانَ بْنِ مَظْعُونٍ ‏ ‏التَّبَتُّلَ ‏ ‏وَلَوْ أَذِنَ لَهُ ‏ ‏لَاخْتَصَيْنَا

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) துறவறம் மேற்கொள்ள (விரும்பி, அனுமதி கேட்டபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதி மறுத்தார்கள். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2487

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ: ‏

أَنَّ ‏ ‏نَفَرًا ‏ ‏مِنْ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَأَلُوا أَزْوَاجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ عَمَلِهِ فِي السِّرِّ فَقَالَ بَعْضُهُمْ لَا أَتَزَوَّجُ النِّسَاءَ وَقَالَ بَعْضُهُمْ لَا آكُلُ اللَّحْمَ وَقَالَ بَعْضُهُمْ لَا أَنَامُ عَلَى فِرَاشٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ فَقَالَ ‏ ‏مَا بَالُ أَقْوَامٍ قَالُوا كَذَا وَكَذَا لَكِنِّي أُصَلِّي وَأَنَامُ وَأَصُومُ وَأُفْطِرُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். அவர்களில் ஒருவர், “நான் பெண்களை மணமுடிக்கமாட்டேன்” என்று சொன்னார். மற்றொருவர் “நான் புலால் உண்ண மாட்டேன்” என்றார். இன்னொருவர், “நான் படுக்கையில் உறங்கமாட்டேன்” என்றார். (இதை அறிந்த) நபி (ஸல்), அல்லாஹ்வை வாழ்த்திப் போற்றிவிட்டு, “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகின்றேன்; உறங்கவும் செய்கின்றேன். நோன்பு நோற்கின்றேன்; நோன்பை நோற்காமல் விடுகின்றேன். பெண்களை மணந்து கொண்டுமிருக்கின்றேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2486

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏مَعْشَرَ ‏ ‏الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ ‏ ‏الْبَاءَةَ ‏ ‏فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ ‏ ‏وِجَاءٌ ‏


حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْتُ أَنَا وَعَمِّي ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏وَالْأَسْوَدُ ‏ ‏عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ وَأَنَا شَابٌّ يَوْمَئِذٍ فَذَكَرَ حَدِيثًا رُئِيتُ أَنَّهُ حَدَّثَ بِهِ مِنْ أَجْلِي قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَزَادَ قَالَ فَلَمْ أَلْبَثْ حَتَّى تَزَوَّجْتُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْنَا عَلَيْهِ وَأَنَا ‏ ‏أَحْدَثُ ‏ ‏الْقَوْمِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمْ وَلَمْ يَذْكُرْ فَلَمْ أَلْبَثْ حَتَّى تَزَوَّجْتُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம், “இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பொன்றில், “நானும் என் தந்தையின் சகோதரர் அல்கமா (ரஹ்) அவர்களும் அஸ்வத் (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அன்று நான் இளைஞனாக இருந்தேன். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் …“ என மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள். அதை எனக்காகவே அவர்கள் அறிவித்திருந்தார்கள் என்றே நான் கருதினேன். எனவே, நான் தாமதியாமல் மணமுடித்துக் கொண்டேன்” என்று அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

மேலும்,

“நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். நானே (அங்கு சென்ற) மக்களில் இளவயதினனாக இருந்தேன் …” எனத் தொடங்கும் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) வழி மற்றோர் அறிவிப்பில் பிற தகவல்கள் மேற்காணும் ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், “நான் தாமதியாமல் மணமுடித்துக்கொண்டேன்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 16, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2485

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ: ‏

كُنْتُ أَمْشِي مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏بِمِنًى ‏ ‏فَلَقِيَهُ ‏ ‏عُثْمَانُ ‏ ‏فَقَامَ مَعَهُ يُحَدِّثُهُ فَقَالَ لَهُ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَلَا نُزَوِّجُكَ ‏ ‏جَارِيَةً ‏ ‏شَابَّةً لَعَلَّهَا تُذَكِّرُكَ بَعْضَ مَا مَضَى مِنْ زَمَانِكَ قَالَ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَئِنْ قُلْتَ ذَاكَ لَقَدْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏مَعْشَرَ ‏ ‏الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ ‏ ‏الْبَاءَةَ ‏ ‏فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ ‏ ‏وِجَاءٌ ‏


حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي ‏ ‏لَأَمْشِي مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏بِمِنًى ‏ ‏إِذْ لَقِيَهُ ‏ ‏عُثْمَانُ بْنُ عَفَّانَ ‏ ‏فَقَالَ ‏ ‏هَلُمَّ ‏ ‏يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ ‏ ‏فَاسْتَخْلَاهُ ‏ ‏فَلَمَّا رَأَى ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَنْ لَيْسَتْ لَهُ حَاجَةٌ قَالَ قَالَ لِي تَعَالَ يَا ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏قَالَ فَجِئْتُ فَقَالَ لَهُ ‏ ‏عُثْمَانُ ‏ ‏أَلَا نُزَوِّجُكَ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏جَارِيَةً ‏ ‏بِكْرًا لَعَلَّهُ يَرْجِعُ إِلَيْكَ مِنْ نَفْسِكَ مَا كُنْتَ تَعْهَدُ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَئِنْ قُلْتَ ذَاكَ ‏ ‏فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நான் மினாவில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்களை உஸ்மான் (ரலி) சந்தித்து, அவர்களுடன் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போது உஸ்மான் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! தங்களுக்கு நான் ஓர் இளம் பெண்ணை மணமுடித்து வைக்கட்டுமா? உங்கள் கடந்தகால (இளமை) நிகழ்வுகளை அவள் உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும்” என்றார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்’ என்று கூறினார்கள்”.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக அல்கமா பின் கைஸ் (ரஹ்)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நான் மினாவில் நடந்துகொண்டிருந்தபோது அவர்களை உஸ்மான் (ரலி) சந்தித்து, ‘அபூஅப்திர் ரஹ்மானே! இங்கே வாருங்கள்’ என்று கூறி, தனியான இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்கள்”. (திருமணத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர வேறு) தேவை உஸ்மான் (ரலி) அவர்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “அல்கமா இங்கே வா” என என்னை அழைத்தார்கள். நான் சென்றேன். அப்போது அவர்களிடம் உஸ்மான் (ரலி), “அபூஅப்திர் ரஹ்மான்! தங்களுக்கு நான் ஒரு கன்னிப் பெண்ணை மணமுடித்து வைக்கட்டுமா? நீங்கள் அனுபவித்த இளமைக் காலத்தை உங்களுக்கு அவள் மீட்டுத் தரக்கூடும்” என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “நீங்கள் இப்படிச் சொல்லி விட்டீர்கள்…” என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று குறிப்பிட்டார்கள் என்பதாக இடம்பெற்றுள்ளது.