அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2128

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ مَعَنَا النِّسَاءُ وَالْوِلْدَانُ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏طُفْنَا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالمَرْوَةِ ‏ ‏فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلْيَحْلِلْ قَالَ قُلْنَا أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ قَالَ فَأَتَيْنَا النِّسَاءَ وَلَبِسْنَا الثِّيَابَ وَمَسِسْنَا الطِّيبَ فَلَمَّا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ وَكَفَانَا الطَّوَافُ الْأَوَّلُ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي ‏ ‏بَدَنَةٍ

ஹஜ்ஜுக்காக முஹ்ரிம் ஆகி, ‘தல்பியா’ சொன்னவர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் இறையில்லத்தைச் சுற்றி வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே (ஸயீ) ஓடினோம்.

அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு(ஹலால் ஆகி)க் கொள்ளட்டும்” என்றார்கள். நாங்கள், “எந்த வகையில் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எல்லா வகையிலும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

ஆகவே, நாங்கள் மனைவியரிடம் கூடி மகிழ்தோம்; (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்; நறுமணம் பூசிக் கொண்டோம். துல்ஹஜ் எட்டாவது நாள் (யவ்முத் தர்வியா) வந்தபோது, ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறினோம். (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து முஹ்ரிமாகியிருந்த) நாங்கள் ஏற்கெனவே ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடியதே எங்களுக்குப் போதுமானதாக அமைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்)கொள்ள உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2125

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ ‏ ‏حَدَّثَتْنَا ‏ ‏صَفِيَّةُ بِنْتُ شَيْبَةَ ‏ ‏قَالَتْ ‏

‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَيَرْجِعُ النَّاسُ بِأَجْرَيْنِ وَأَرْجِعُ بِأَجْرٍ ‏ ‏فَأَمَرَ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏أَنْ يَنْطَلِقَ بِهَا إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏قَالَتْ فَأَرْدَفَنِي خَلْفَهُ عَلَى جَمَلٍ لَهُ قَالَتْ فَجَعَلْتُ أَرْفَعُ ‏ ‏خِمَارِي ‏ ‏أَحْسُرُهُ ‏ ‏عَنْ عُنُقِي فَيَضْرِبُ رِجْلِي بِعِلَّةِ الرَّاحِلَةِ قُلْتُ لَهُ وَهَلْ ‏ ‏تَرَى مِنْ أَحَدٍ قَالَتْ فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ ثُمَّ أَقْبَلْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِالْحَصْبَةِ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரு நற்பலன்களுடன் திரும்பிச் செல்ல, நான் மட்டும் (ஹஜ்ஜை மாத்திரம் நிறைவேற்றி, அதற்குரிய) ஒரேயொரு நற்பலனுடன் திரும்பிச் செல்வதா?” என்று கேட்டேன்.

எனவே, நபி (ஸல்) (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களிடம் என்னைத் ‘தன்யீமு’க்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அவர் என்னைத் தமது ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்(டு, தன்யீமை நோக்கிப் பயணம் மேற்கொண்)டார்.

அப்போது நான் எனது முகத்திரையை உயர்த்தி, கழுத்து வழியாக அதைக் கழற்றலானேன். உடனே அவர் தமது ஒட்டகத்தை அடிப்பதைப் போல எனது காலில் அடித்தார். நான் அவரிடம், “எவரேனும் என்னைப் பார்க்கின்றனரா?” என்று கேட்டேன். பிறகு நான் (தன்யீமில்) உம்ராவிற்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னேன். (உம்ரா முடிந்த பிறகு) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்துசேர்ந்தோம். அப்போது அவர்கள் ‘முஹஸ்ஸபி’ல் தங்கியிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2118

حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْمُؤْمِنِينَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏مِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ ‏ ‏مُفْرَدًا ‏ ‏وَمِنَّا مَنْ ‏ ‏قَرَنَ ‏ ‏وَمِنَّا مَنْ ‏ ‏تَمَتَّعَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏حَاجَّةً

எங்களில் சிலர் ஹஜ்(இஃப்ராது)க்கு மட்டும் முஹ்ரிமாகி இருந்தனர். வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) முஹ்ரிமாகி இருந்தனர். இன்னும் சிலர் உம்ராச் செய்து முடித்துவிட்டு, ஹஜ்(ஜுத் தமத்து) செய்வதற்காக முஹ்ரிமாகி இருந்தனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2116

حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏خَالِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفْرَدَ الْحَجَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) முஹ்ரிமாகி இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2113

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ ‏ ‏وَأَهَلَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ فَأَمَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ ‏ ‏فَحَلَّ ‏ ‏وَأَمَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَلَمْ يَحِلُّوا حَتَّى كَانَ ‏ ‏يَوْمُ النَّحْرِ

நாங்கள், ‘விடைபெறும் ஹஜ்’ ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) முஹ்ரிம் ஆகியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) முஹ்ரிம் ஆகியிருந்தனர்; இன்னும் சிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) முஹ்ரிம் ஆகியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி இருந்தார்கள். உம்ராவிற்கு மட்டும் முஹ்ரிமானவர்கள் (உம்ராவை முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொண்டார்கள். ஹஜ்ஜுக்கு மட்டுமே முஹ்ரிமானவர்களும் அல்லது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து முஹ்ரிமானவர்களும் ‘நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாள்’ வரும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2111

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَأَهَلَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِحَجٍّ وَأَهَلَّ بِهِ نَاسٌ مَعَهُ وَأَهَلَّ نَاسٌ بِالْعُمْرَةِ وَالْحَجِّ وَأَهَلَّ نَاسٌ بِعُمْرَةٍ وَكُنْتُ فِيمَنْ أَهَلَّ بِالْعُمْرَةِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டோம். அப்போது, “உங்களில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! ஹஜ்ஜுக்கு மட்டும் (தமத்துஉ) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! உம்ராவிற்கு மட்டும் (இஃப்ராத்) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்!” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் பூண்டு, ‘தல்பியா’ கூறினார்கள். அவ்வாறே அவர்களுடன் மக்களில் சிலரும் இஹ்ராம் பூண்டு முஹ்ரிமாயினர். வேறுசிலர் உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டிற்கும் இஹ்ராம் பூண்டு முஹ்ரிமாயினர். இன்னும் சிலர் உம்ராவிற்கு மட்டும் பூண்டு முஹ்ரிமாயினர்.

நான் உம்ராவிற்காக மட்டும் முஹ்ரிமானவர்களுள் ஒருத்தியாக இருந்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2110

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ وَلَمْ أَكُنْ سُقْتُ ‏ ‏الْهَدْيَ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيُهْلِلْ بِالْحَجِّ مَعَ عُمْرَتِهِ ثُمَّ لَا يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا قَالَتْ فَحِضْتُ فَلَمَّا دَخَلَتْ لَيْلَةُ عَرَفَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أَهْلَلْتُ بِعُمْرَةٍ فَكَيْفَ أَصْنَعُ بِحَجَّتِي قَالَ ‏ ‏انْقُضِي رَأْسَكِ ‏ ‏وَامْتَشِطِي وَأَمْسِكِي عَنْ الْعُمْرَةِ وَأَهِلِّي بِالْحَجِّ قَالَتْ فَلَمَّا قَضَيْتُ حَجَّتِي أَمَرَ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏فَأَرْدَفَنِي فَأَعْمَرَنِي مِنْ ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏مَكَانَ عُمْرَتِي الَّتِي أَمْسَكْتُ عَنْهَا

நாங்கள், ‘விடைபெறும் ஹஜ்’ ஆண்டில் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக நான் முஹ்ரிமாகி இருந்தேன். நான் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்கவில்லை. அப்போது நபி (ஸல்), “தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்காகவும் முஹ்ரிமாகட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராம் நிலையிலிருந்து விடுபடவேண்டும்” என்று சொன்னார்கள்.

அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் இரவை நான் அடைந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக (மட்டும்) முஹ்ரிமாகியிருந்தேன். (இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது) நான் எவ்வாறு ஹஜ் செய்வது?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “உனது தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டுக்கொள். உம்ராவை நிறுத்திவை; ஹஜ் செய்துகொள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் ஹஜ்ஜை நிறைவேற்றியதும் நபி (ஸல்) (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமர்த்திக்கொண்டு, நான் நிறுத்திவைத்திருந்த உம்ராவிற்காக முஹ்ரிமாவதற்கு ‘தன்யீம்’ எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2109

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ حَتَّى قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ ‏ ‏وَلَمْ يُهْدِ ‏ ‏فَلْيَحْلِلْ وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ ‏ ‏وَأَهْدَى ‏ ‏فَلَا يَحِلُّ حَتَّى يَنْحَرَ هَدْيَهُ وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَلَمْ أُهْلِلْ إِلَّا بِعُمْرَةٍ فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏أَنْقُضَ رَأْسِي ‏ ‏وَأَمْتَشِطَ وَأُهِلَّ بِحَجٍّ وَأَتْرُكَ الْعُمْرَةَ قَالَتْ فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى إِذَا قَضَيْتُ حَجَّتِي بَعَثَ مَعِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مِنْ ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏مَكَانَ عُمْرَتِي الَّتِي أَدْرَكَنِي الْحَجُّ وَلَمْ أَحْلِلْ مِنْهَا

நாங்கள், ‘விடைபெறும் ஹஜ்’ ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் உம்ரா(வைத் தனியாக)ச் செய்வதற்கு முஹ்ரிம் ஆனவர்களும் இருந்தனர். ஹஜ்ஜுக்காக (மட்டும்) முஹ்ரிம் ஆனவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்),

“பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராத, உம்ராவிற்கான (‘தமத்துஉ’) முஹ்ரிம், (உம்ராவை நிறைவேற்றி) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும்”,

“தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருப்பதோடு, உம்ராவுடன் சேர்த்து ஹஜ்ஜுக்குமான (‘கிரான்’) முஹ்ரிமானவர் (துல்ஹஜ் பத்தாம் நாளில்) தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராம் நிலையிலிருந்து விடுபடவேண்டாம்”, “ஹஜ்ஜுக்காக மட்டும் (‘இஃப்ராத்’) முஹ்ரிமானவர் தமது ஹஜ்ஜை முழுமையாக்கட்டும்” என்று கூறினார்கள்.

அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் வரும்வரை மாதவிடாயுடனேயே நான் இருந்தேன். நான் உம்ராவிற்காக மட்டுமே முஹ்ரிம் ஆகியிருந்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிடுமாறும், உம்ராவை விடுத்து, ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன். நான் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களை என்னுடன் தன்யீமுக்கு அனுப்பி, நான் உம்ராவை நிறைவேற்ற முடியாமல் ஹஜ்ஜை அடைந்து கொண்டதால், (தவறிய) உம்ராவுக்கான தல்பியா கூறிய முஹ்ரிமாகி வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)