அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 47

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏
‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَمُعَاذُ بْنُ جَبَلٍ ‏ ‏رَدِيفُهُ ‏ ‏عَلَى ‏ ‏الرَّحْلِ ‏ ‏قَالَ يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏قَالَ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏قَالَ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏قَالَ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ ‏ ‏مَا مِنْ عَبْدٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏ ‏إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا أُخْبِرُ بِهَا النَّاسَ فَيَسْتَبْشِرُوا قَالَ إِذًا يَتَّكِلُوا ‏
‏فَأَخْبَرَ بِهَا ‏ ‏مُعَاذٌ ‏ ‏عِنْدَ مَوْتِهِ ‏ ‏تَأَثُّمًا

நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை “முஆத்!” என்று அழைத்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்று முஆத் (ரலி) வேண்டினார். மீண்டும், “முஆத்!” என்று அழைத்தார்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்று முஆத் (ரலி) வேண்டினார். மீண்டும், “முஆத்!” என்று அழைத்தார்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்று முஆத் (ரலி) வேண்டினார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.

முஆத் (ரலி) அவர்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” (வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் மக்கள் இந்த ஒன்றையே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்” என்று கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தருவாயில்தான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 45

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَصِينٍ ‏ ‏وَالْأَشْعَثِ بْنِ سُلَيْمٍ ‏ ‏أَنَّهُمَا سَمِعَا ‏ ‏الْأَسْوَدَ بْنَ هِلَالٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ جَبَلٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَنْ يُعْبَدَ اللَّهُ وَلَا يُشْرَكَ بِهِ شَيْءٌ قَالَ أَتَدْرِي مَا حَقُّهُمْ عَلَيْهِ إِذَا فَعَلُوا ذَلِكَ فَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَنْ لَا يُعَذِّبَهُمْ ‏
‏حَدَّثَنَا ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَصِينٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ بْنِ هِلَالٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُعَاذًا ‏ ‏يَقُولُا ‏ ‏دَعَانِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَجَبْتُهُ فَقَالَ ‏ ‏هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى النَّاسِ نَحْوَ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “முஆத்! அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள்.

நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதில் அளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையே வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்று கூறினார்கள்.

பின்பு, “அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கு இணை கற்பிக்காமல்) செயல்பட்டு வரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதான உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதில் அளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் ஜபல் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 12

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ حَدَّثَنَا مُوسَى بْنُ طَلْحَةَ قَالَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ :‏

أَنَّ أَعْرَابِيًّا عَرَضَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي سَفَرٍ فَأَخَذَ بِخِطَامِ نَاقَتِهِ أَوْ بِزِمَامِهَا ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَوْ يَا مُحَمَّدُ أَخْبِرْنِي بِمَا يُقَرِّبُنِي مِنْ الْجَنَّةِ وَمَا يُبَاعِدُنِي مِنْ النَّارِ قَالَ فَكَفَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَظَرَ فِي أَصْحَابِهِ ثُمَّ قَالَ لَقَدْ وُفِّقَ أَوْ لَقَدْ هُدِيَ قَالَ كَيْفَ قُلْتَ قَالَ فَأَعَادَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْبُدُ اللَّهَ لا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ دَعْ النَّاقَةَ

ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடைமறித்து அவர்களது ஒட்டகத்தின் ‘கடிவாளத்தை’ அல்லது ‘மூக்கணாங் கயிற்றைப்’ பிடித்துக் கொண்டார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே” அல்லது “முஹம்மதே” என விளித்து, “என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்க வல்லதொரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு பதில் கூறாமல்) நிதானமாகத் தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் “நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்” என்றோ அல்லது “நேர்வழி நடத்தப்பட்டுவிட்டார்'” என்றோ கூறிவிட்டுப் பின்னர் அவரிடம் திரும்பி, “நீங்கள் என்ன கேட்டீர்கள்?” என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார்.

அப்போது நபி (ஸல்), “அல்லாஹ்வை (மட்டுமே) நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைபிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறிவிட்டு, “எனது ஒட்டகத்தை விடுங்கள் (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்).” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி)