அத்தியாயம்: 1, பாடம்: 73, ஹதீஸ் எண்: 233

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى ‏ ‏يَقُولُ سَأَلْتُ ‏ ‏أَبَا سَلَمَةَ ‏
‏أَيُّ الْقُرْآنِ أُنْزِلَ قَبْلُ قَالَ ‏
‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ‏

‏فَقُلْتُ أَوْ اقْرَأْ فَقَالَ سَأَلْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَيُّ الْقُرْآنِ أُنْزِلَ قَبْلُ قَالَ ‏
‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ‏

‏فَقُلْتُ أَوْ اقْرَأْ قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏أُحَدِّثُكُمْ مَا حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏جَاوَرْتُ ‏ ‏بِحِرَاءٍ ‏ ‏شَهْرًا فَلَمَّا قَضَيْتُ ‏ ‏جِوَارِي ‏ ‏نَزَلْتُ ‏ ‏فَاسْتَبْطَنْتُ ‏ ‏بَطْنَ الْوَادِي فَنُودِيتُ فَنَظَرْتُ أَمَامِي وَخَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي فَلَمْ أَرَ أَحَدًا ثُمَّ نُودِيتُ فَنَظَرْتُ فَلَمْ أَرَ أَحَدًا ثُمَّ نُودِيتُ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا هُوَ عَلَى الْعَرْشِ فِي الْهَوَاءِ ‏ ‏يَعْنِي ‏ ‏جِبْرِيلَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَأَخَذَتْنِي رَجْفَةٌ شَدِيدَةٌ فَأَتَيْتُ ‏ ‏خَدِيجَةَ ‏ ‏فَقُلْتُ ‏ ‏دَثِّرُونِي ‏ ‏فَدَثَّرُونِي فَصَبُّوا عَلَيَّ مَاءً فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏
‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ ‏

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَإِذَا هُوَ جَالِسٌ عَلَى عَرْشٍ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ

(யஹ்யா பின் அபீகஸீர் ஆகிய) நான் அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், “முன்னதாக அருளப்பட்ட குர்ஆன் வசனம் எது?” என்று கேட்டேன். அதற்கு, “போர்த்திக் கொண்டிருப்பவரே! எனும் (74:1ஆவது) வசனம்” என்றார்கள். நான், “ஓதுவீராக! (என்று தொடங்கும் 96:1ஆவது) வசனம் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அபூஸலமா (ரஹ்) பதில் கூறும்போது, “நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், எந்த வசனம் முன்னதாக அருளப்பட்டது? என்று (இதே கேள்வியைக்) கேட்டபோது அதற்கு அவர்கள், போர்த்திக் கொண்டிருப்பவரே! எனும் (74:1ஆவது) வசனம் என்றே பதிலளித்தார்கள். (நீங்கள் என்னிடம் வினவியது போலவே) ஓதுவீராக! எனும் (96:1ஆவது) வசனம் இல்லையா?” என்று (மீண்டும்) வினவினேன். அதற்கு ஜாபிர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதையே உங்களுக்கு நான் சொல்கிறேன்:

நான் ஹிரா மலைக்குகையில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கி, அங்கிருந்த ‘பத்னுல் வாதீ’ பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்தேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு, என் முன்னும் பின்னும் வலமும் இடமும் பார்வையைச் செலுத்தி(த்தேடி)ப் பார்த்தேன். அங்கு யாரையும் நான் காணவில்லை. பிறகு (மீண்டும்) அழைக்கப்பட்டு, பார்வையைச் செலுத்தினேன். யாரையும் நான் காணவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக) அழைக்கப்பட்டபோது தலை நிமிர்ந்து பார்த்தேன். அப்போது அவர் (வானவர் ஜிப்ரீல்) ஆகாயவெளியில் ஓர் ஆசனத்தில் (அமர்ந்து) இருந்தார். அப்போது நான் கடுமையாக நடுக்கமுற்றேன். உடனே நான் (என் துணைவியார்) கதீஜாவிடம் வந்து, என்னைப் போர்த்துங்கள் என்று கூறினேன். அவ்வாறே எனக்குப் போர்த்தி விட்டார். என் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அப்போது மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ், போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுவீராக! (எழுந்து) எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப் படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! எனும் (74:1-4) வசனங்களை அருளினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்”.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு:

முதன் முதலில் வஹீயாக இறங்கியவை, “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக” எனத்தொடங்கி, “மனிதன் அறியாத அனைத்தையும் கற்பித்தான்” என்று முடியும் 96:1-5 வசனங்கள் ஆகும். அதற்குப் பிறகு வஹீ வருவது சிறிது காலம் நின்று போயிருந்தது. வஹீ நின்றுபோன பிறகு தொடக்கமாக அருளப்பட்டவை, “போர்த்திக் கொண்டிருப்பவரே!” என்று தொடங்கி “அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக” எனும் (74:1-5) வசனங்களாகும்.

இதே ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) பற்றி யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) வழியாக அலீ பின் அல்-முபாரக் (ரஹ்) அறிவிக்கும்போது, “வானவர் ஜிப்ரீல் வானுக்கும் பூமிக்கும் இடையில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 73, ஹதீஸ் எண்: 232

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيَّ ‏ ‏وَكَانَ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يُحَدِّثُ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يُحَدِّثُ عَنْ ‏ ‏فَتْرَةِ ‏ ‏الْوَحْيِ قَالَ فِي حَدِيثِهِ ‏ ‏فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنْ السَّمَاءِ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا ‏ ‏الْمَلَكُ ‏ ‏الَّذِي جَاءَنِي ‏ ‏بِحِرَاءٍ ‏ ‏جَالِسًا عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَجُئِثْتُ ‏ ‏مِنْهُ ‏ ‏فَرَقًا ‏ ‏فَرَجَعْتُ فَقُلْتُ ‏ ‏زَمِّلُونِي ‏ ‏زَمِّلُونِي ‏ ‏فَدَثَّرُونِي ‏ ‏فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ‏
‏يَا أَيُّهَا ‏ ‏الْمُدَّثِّرُ ‏ ‏قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ ‏

‏وَهِيَ الْأَوْثَانُ قَالَ ثُمَّ تَتَابَعَ الْوَحْيُ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ثُمَّ ‏ ‏فَتَرَ ‏ ‏الْوَحْيُ عَنِّي ‏ ‏فَتْرَةً ‏ ‏فَبَيْنَا أَنَا أَمْشِي ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏فَجُئِثْتُ ‏ ‏مِنْهُ فَرَقًا حَتَّى هَوَيْتُ إِلَى الْأَرْضِ ‏ ‏قَالَ ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏وَالرُّجْزُ الْأَوْثَانُ قَالَ ثُمَّ حَمِيَ الْوَحْيُ بَعْدُ وَتَتَابَعَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏وَقَالَ فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ‏
‏يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏وَالرُّجْزَ فَاهْجُرْ ‏

‏قَبْلَ أَنْ تُفْرَضَ الصَّلَاةُ وَهِيَ الْأَوْثَانُ وَقَالَ فَجُئِثْتُ مِنْهُ كَمَا قَالَ ‏ ‏عُقَيْلٌ ‏

“நான் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது வானிலிருந்து வந்த ஒரு குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன். (குகை) ஹிராவில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததில் அஞ்சி அதிர்ந்து போனேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி வந்து (என் மனைவியிடம்), “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்” என்று சொன்னேன். அவர்களும் போர்த்தி விட்டார்கள். அப்போது, “போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுவீராக! (எழுந்து) எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப் படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக” எனும் (74:1-5) வசனங்களை, நற்பேறுகளுக்கு உரியவனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் அருளினான். பின்னர் வஹீ தொடர்ந்து வரலாயிற்று” என்று தமக்கு வஹீ தடைப்பட்ட (இடைவெளி) காலகட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு:

மேற்கண்ட (74:5ஆவது) வசனத்திலுள்ள ‘அர்ருஜ்ஸு’ (அசுத்தம்) என்பது வணங்கப்படும் சிலைகளைக் குறிப்பதாகும்.

இதே ஹதீஸ், அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… பின்னர் சிறிது காலம் எனக்கு வஹீ நின்று போயிருந்தது. (ஒருநாள்) நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன் …” என்பதைத் தொடர்ந்து “அவரைப் பார்த்ததில் அஞ்சி அதிர்ந்து போய்த் தரையில் விழுந்து விட்டேன் …” என்றும் “பின்னர் வேத அறிவிப்புத் தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று” என்றும் நபி (ஸல்) கூறியதாக ஜாபிர் (ரலி)அறிவித்தார் என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் “அர்ருஜ்ஸு என்பது வணங்கப்படும் சிலைகளைக் குறிக்கும்” என்ற விளக்கம் இடம் பெறுகிறது.

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “போர்த்திக் கொண்டிருப்பவரே! … என்பதில் தொடங்கி, … அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக எனும் (74:1-5) வசனங்கள் முடிய நற்பேறுகளுக்கு உரியவனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் அருளினான். அவை, முறையான தொழுகை கடமையாக்கப் படுவதற்கு முன்னர் அருளப்பட்ட வசனங்களாகும்” என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் ‘வணங்கப்படும் சிலைகள்’ பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 73, ஹதீஸ் எண்: 231

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏
‏أَنَّهَا قَالَتْ كَانَ ‏ ‏أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةَ فِي النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلَاءُ فَكَانَ يَخْلُو ‏ ‏بِغَارِ حِرَاءٍ ‏ ‏يَتَحَنَّثُ فِيهِ ‏ ‏وَهُوَ التَّعَبُّدُ ‏ ‏اللَّيَالِيَ أُوْلَاتِ الْعَدَدِ ‏ ‏قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى أَهْلِهِ وَيَتَزَوَّدُ لِذَلِكَ ثُمَّ يَرْجِعُ إِلَى ‏ ‏خَدِيجَةَ ‏ ‏فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا حَتَّى فَجِئَهُ الْحَقُّ وَهُوَ فِي ‏ ‏غَارِ حِرَاءٍ ‏ ‏فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ اقْرَأْ قَالَ مَا أَنَا بِقَارِئٍ قَالَ فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي ‏ ‏الْجَهْدَ ‏ ‏ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ قَالَ قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ قَالَ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ أَقْرَأْ فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ ‏
‏اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ ‏

‏فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَرْجُفُ ‏ ‏بَوَادِرُهُ ‏ ‏حَتَّى دَخَلَ عَلَى ‏ ‏خَدِيجَةَ ‏ ‏فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ ثُمَّ قَالَ ‏ ‏لِخَدِيجَةَ ‏ ‏أَيْ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏مَا لِي وَأَخْبَرَهَا الْخَبَرَ قَالَ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي قَالَتْ لَهُ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏كَلَّا أَبْشِرْ فَوَاللَّهِ لَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا وَاللَّهِ إِنَّكَ ‏ ‏لَتَصِلُ ‏ ‏الرَّحِمَ ‏ ‏وَتَصْدُقُ الْحَدِيثَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ فَانْطَلَقَتْ بِهِ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏حَتَّى أَتَتْ بِهِ ‏ ‏وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى ‏ ‏وَهُوَ ابْنُ عَمِّ ‏ ‏خَدِيجَةَ ‏ ‏أَخِي أَبِيهَا وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ وَيَكْتُبُ مِنْ الْإِنْجِيلِ بِالْعَرَبِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ فَقَالَتْ لَهُ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏أَيْ عَمِّ اسْمَعْ مِنْ ابْنِ أَخِيكَ قَالَ ‏ ‏وَرَقَةُ بْنُ نَوْفَلٍ ‏ ‏يَا ‏ ‏ابْنَ أَخِي مَاذَا ‏ ‏تَرَى فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَبَرَ مَا رَآهُ فَقَالَ لَهُ ‏ ‏وَرَقَةُ ‏ ‏هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا لَيْتَنِي فِيهَا ‏ ‏جَذَعًا ‏ ‏يَا لَيْتَنِي أَكُونُ حَيًّا حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوَ مُخْرِجِيَّ هُمْ قَالَ ‏ ‏وَرَقَةُ ‏ ‏نَعَمْ لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا ‏

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْوَحْيِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَوَاللَّهِ لَا يُحْزِنُكَ اللَّهُ أَبَدًا وَقَالَ قَالَتْ ‏ ‏خَدِيجَةُ ‏ ‏أَيْ ابْنَ عَمِّ اسْمَعْ مِنْ ابْنِ أَخِيكَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏يَقُولُ قَالَتْ ‏ ‏عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَجَعَ إِلَى ‏ ‏خَدِيجَةَ ‏ ‏يَرْجُفُ فُؤَادُهُ وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏وَمَعْمَرٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ أَوَّلَ حَدِيثِهِمَا مِنْ قَوْلِهِ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ وَتَابَعَ ‏ ‏يُونُسَ ‏ ‏عَلَى قَوْلِهِ فَوَاللَّهِ لَا ‏ ‏يَخْزِيكَ اللَّهُ أَبَدًا وَذَكَرَ قَوْلَ ‏ ‏خَدِيجَةَ ‏ ‏أَيْ ابْنَ عَمِّ اسْمَعْ مِنْ ابْنِ أَخِيكَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத வெளிப்பாடுகளின் தொடக்கம், அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்ற (தெளிவான), தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அதற்குப் பின்னர் தனித்திருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் ஹிரா (எனும்) குகையில் தனித்திருந்து எண்ணற்ற இரவுகளில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். அதற்காகத் தம் இல்லத்தார் (கதீஜா ரலி) இடம் சென்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைப் பெற்றுச் செல்வார்கள். இது, ‘ஹிரா’ குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வெளிப்படும்வரைக்கும் நீடித்தது. (ஒருநாள்) வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நான் ஓதத்தெரிந்தவனில்லையே!” என்று சொன்னார்கள். (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:

“நான் திணறும் அளவிற்கு வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து இறுகத் தழுவினார். பிறகு என்னை விடுவித்து விட்டு ‘ஓதுவீராக!’ என்றார். “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். (மீண்டும்) நான் திணறும் அளவிற்கு என்னைப் பிடித்து இறுகத் தழுவினார். பிறகு என்னை விடுவித்து விட்டு ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மூன்றாவது முறையாக என்னைப் பிடித்து, என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகத் தழுவினார். பின்னர் என்னை விடுவித்து விட்டு, “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன்தான் கருவின் நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் பெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் கற்பித்தான். மனிதன் அறியாத அனைத்தையும் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.

பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அந்த வசனங்களுடன், (அச்சத்தால்) தம் கழுத்து நரம்புகள் புடைத்து, படபடப்புடன் திரும்பி(த்தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் சென்று, “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர்களுக்குப் போர்த்திவிட, படபடப்பு அவர்களை விட்டு அகன்றது. பின்னர் கதீஜா (ரலி) அவர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்து விட்டு “எனக்கு என்ன ஆயிற்று? எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்!” என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா(ரலி) அவர்கள், “அமைதியடையுங்கள்; உங்களுக்கு அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சோதனைக்குள்ளானோருக்கு உதவி செய்கின்றீர்கள்” என்று (பலவாறு ஆறுதல்) சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் சென்றார்கள்.

வரக்கா, அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி (மற்றும் எபிரேய) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இஞ்சீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு (எபிரேய மொழியிலிருந்து) அரபு மொழியில் (மொழிபெயர்த்து) எழுதுபவராகவும் கண்பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், “என் தந்தையின் சகோதரரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்” என்றார்கள். அப்போது வரக்கா பின் நவ்ஃபல், “என் சகோதரர் மைந்தரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் விவரித்தார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, “(நீர் கண்ட) இவர்தாம் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கு அனுப்பப்பட்ட வானவர் (நாமூஸ் என்ற ஜிப்ரீல்) ஆவார்” என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, ” உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும்போது நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(என் சமூக) மக்கள் என்னை (நாட்டைவிட்டு) வெளியேற்றுவார்களா?” என்று கேட்க, வரக்கா, “ஆம், நீங்கள் பெற்றுள்ள(உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுத்துவப் பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்கு உறுதியான உதவி புரிவேன்” என்று கூறினார்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், அன்னை கதீஜா (ரலி) அவர்களின் கூற்றான “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்” என்பதற்குப் பதிலாக, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் கவலையுறச் செய்ய மாட்டான்” என்றும் “என் தந்தையின் சகோதரரே!” என்று வராக்காவை விளித்தது, “என் தந்தையின் சகோதரின் புதல்வரே!” என்றும் இடம் பெற்றுள்ளது.

உக்கைல் பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “(அச்சத்தால்) தம் கழுத்து நரம்புகள் புடைத்து, படபடப்புடன் திரும்பி(த்தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் சென்று …” என்பதற்குப் பதிலாக “(அச்சத்தால்) இதயம் படபடக்க (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பிச் சென்று …” என்று மட்டும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் தொடக்கமான, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத வெளிப்பாடுகளின் தொடக்கம், அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்ற (தெளிவான), தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது” என்பது இடம்பெறவில்லை.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் கவலையுறச் செய்ய மாட்டான்” என்றே அன்னை கதீஜா (ரலி) ஆறுதல் கூறியதாகவும் வராக்காவிடம், “என் தந்தையின் சகோதரரின் புதல்வரே! உங்கள் சகோதரரின் மகனிடம் கேளுங்கள்” என்று வேண்டியதாகவும் இடம் பெற்றுள்ளது.

தம் மகனையொத்தவர்களை, “என் சகோதரரின் மகனே!” என்று விளிப்பதும் குறிப்பதும் அரபியரின் பொது வழக்கமாகும்.