அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1575

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏فَإِنْ شَهِدَ دَفْنَهَا فَلَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏الْقِيرَاطُ ‏ ‏مِثْلُ ‏ ‏أُحُدٍ ‏
‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَ وَحَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَهِشَامٍ ‏ ‏سُئِلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْقِيرَاطِ ‏ ‏فَقَالَ مِثْلُ ‏ ‏أُحُدٍ

“ஜனாஸாத் தொழுகை (மட்டும்) தொழுதவருக்கு ஒரு ‘கீராத்’ (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு ‘கீராத்’ (நன்மை) உண்டு; ’கீராத்’ என்பது உஹுத் மலை அளவாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி).

குறிப்பு : ஸயீத் மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களிடம் ‘கீராத்’ பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘உஹுத் மலையளவு’ என்று பதிலளித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1574

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَيْوَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو صَخْرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ أَنَّ ‏ ‏دَاوُدَ بْنَ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ ‏

‏كَانَ قَاعِدًا عِنْدَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏إِذْ طَلَعَ ‏ ‏خَبَّابٌ ‏ ‏صَاحِبُ الْمَقْصُورَةِ فَقَالَ يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏أَلَا تَسْمَعُ مَا يَقُولُ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ خَرَجَ مَعَ جَنَازَةٍ مِنْ بَيْتِهَا وَصَلَّى عَلَيْهَا ثُمَّ تَبِعَهَا حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏مِنْ أَجْرٍ كُلُّ ‏ ‏قِيرَاطٍ ‏ ‏مِثْلُ ‏ ‏أُحُدٍ ‏ ‏وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ ‏ ‏أُحُدٍ ‏

‏فَأَرْسَلَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏خَبَّابًا ‏ ‏إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏يَسْأَلُهَا عَنْ قَوْلِ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ فَيُخْبِرُهُ مَا قَالَتْ وَأَخَذَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏قَبْضَةً ‏ ‏مِنْ ‏ ‏حَصْبَاءِ ‏ ‏الْمَسْجِدِ يُقَلِّبُهَا فِي يَدِهِ حَتَّى رَجَعَ إِلَيْهِ الرَّسُولُ فَقَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏صَدَقَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَضَرَبَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏بِالْحَصَى الَّذِي كَانَ فِي يَدِهِ الْأَرْضَ ثُمَّ قَالَ ‏ ‏لَقَدْ فَرَّطْنَا فِي ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةٍ

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பண்ணை வீட்டுக் கப்பாப் அல்மதனீ (ரலி) அங்கு வந்து, “அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத் தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின்தொடர்கின்றவருக்கு இரண்டு ‘கீராத்’ நன்மை உண்டு; ஒவ்வொரு ‘கீராத்’தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுது விட்டுத் திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு ‘கீராத்’) நன்மை உண்டு’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றாரே?” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்துவிட்டு, போனவர் திரும்பி வரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளித் தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.

(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி), “அபூஹுரைரா சொன்னது உண்மையே” என்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தமது கையிலிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, “நாம் ஏராளமான ‘கீராத்'(நன்மை)களைத் தவற விட்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஆமிர் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்).

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1573

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ يَعْنِي ابْنَ حَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏نَافِعٌ ‏ ‏قَالَ قِيلَ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏إِنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏مِنْ الْأَجْرِ ‏

‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏أَكْثَرَ عَلَيْنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَبَعَثَ إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَسَأَلَهَا ‏ ‏فَصَدَّقَتْ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏لَقَدْ فَرَّطْنَا فِي ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةٍ

“ஜனாஸாவைப் பின்தொடர்பவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறிவருகின்றாரே!” என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு “அபூஹுரைரா நம்மிடம் அதிகம் சொல்கின்றார்” என்று இப்னு உமர் (ரலி) கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை ஆயிஷா (ரலி) உறுதிப்படுத்தினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி), “(அப்படியாயின்) நாம் ஏராளமான ‘கீராத்’களைத் தவறவிட்டுவிட்டோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்).

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1572

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ كَيْسَانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏وَمَنْ اتَّبَعَهَا حَتَّى تُوضَعَ فِي الْقَبْرِ ‏ ‏فَقِيرَاطَانِ ‏
‏قَالَ قُلْتُ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَمَا ‏ ‏الْقِيرَاطُ ‏ ‏قَالَ مِثْلُ ‏ ‏أُحُدٍ

“ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்றவருக்கு ஒரு ‘கீராத்’ (நன்மை) உண்டு. மண்ணறையில் வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்தவருக்கு இரண்டு ‘கீராத்’ (நன்மை) உண்டு” என்று நபி (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். நான், “அபூஹுரைரா (ரலி) அவர்களே! ‘கீராத்’ என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “உஹுத் மலை அளவு” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஹாஸிம் ஸல்மான் (ரஹ்).

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1571

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُهَيْلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يَتْبَعْهَا فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏فَإِنْ تَبِعَهَا فَلَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏قِيلَ وَمَا ‏ ‏الْقِيرَاطَانِ ‏ ‏قَالَ أَصْغَرُهُمَا مِثْلُ ‏ ‏أُحُدٍ

“ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையானால், அவருக்கு ஒரு ‘கீராத்’ (நன்மையே) உண்டு; அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு ‘கீராத்’ (நன்மை) உண்டு” என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது “இரண்டு ‘கீராத்’ என்றால் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு, “இரண்டு ‘கீராத்’களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1570

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏وَحَرْمَلَةَ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الْأَعْرَجُ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏قِيلَ وَمَا ‏ ‏الْقِيرَاطَانِ ‏ ‏قَالَ مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ ‏

‏انْتَهَى حَدِيثُ ‏ ‏أَبِي الطَّاهِرِ ‏ ‏وَزَادَ الْآخَرَانِ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏قَالَ ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏وَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يُصَلِّي عَلَيْهَا ثُمَّ يَنْصَرِفُ فَلَمَّا بَلَغَهُ حَدِيثُ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ لَقَدْ ضَيَّعْنَا ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةً ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى قَوْلِهِ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ وَلَمْ يَذْكُرَا مَا بَعْدَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَتَّى يُفْرَغَ مِنْهَا ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏حَتَّى تُوضَعَ فِي ‏ ‏اللَّحْدِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ حَدَّثَنِي ‏ ‏رِجَالٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏وَقَالَ وَمَنْ اتَّبَعَهَا حَتَّى تُدْفَنَ

“ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்பவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு ‘கீராத்’ நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போது “இரண்டு ‘கீராத்’ என்றால் என்ன?” என வினவப்பட்டது. அதற்கு, “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்று நபி (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்புகள் :

“(என் தந்தை) இப்னு உமர் (ரலி), ஜனாஸாத் தொழுகை தொழுவித்(து முடித்)ததும் திரும்பிச் சென்றுவிடுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் அவர்களுக்கு எட்டியபோது, “நாம் ஏராளமான ‘கீராத்’ (நன்மை)களை வீணாக்கி (இழந்து)விட்டோம்’ என்று கூறினார்கள்” என்று வருந்தியதாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறினார்கள் என்பதாக இப்னு ஷிஹாப் (ரஹ்) அறிவித்தார்கள் என்று ஹர்மலா பின் யஹ்யா மற்றும் ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) ஆகியோரது வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அப்துல் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் முழு வடிவமும் இடம்பெற்றுள்ளது. மற்ற இரு அறிவிப்பாளர் தொடர்களில் “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்பதற்குப் பின்னுள்ள தகவல் இடம்பெறவில்லை.

அப்துல் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பில் “அடக்கம் முடியும்வரை கலந்துகொள்பவருக்கு” என்ற வாசகமும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) வழி அறிவிப்பில் “குழியில் வைக்கப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.

அப்துல் மலிக் பின் ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அடக்கப்படும்வரை அ(ந்த பிரேதத்)தைப் பின்தொடர்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு” என இடம்பெற்றுள்ளது. பிற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.