அத்தியாயம்: 11, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1577

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَالْوَلِيدُ بْنُ شُجَاعٍ السَّكُونِيُّ ‏ ‏قَالَ ‏ ‏الْوَلِيدُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو صَخْرٍ ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏أَوْ ‏ ‏بِعُسْفَانَ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏كُرَيْبُ ‏ ‏انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنْ النَّاسِ قَالَ فَخَرَجْتُ فَإِذَا نَاسٌ قَدْ اجْتَمَعُوا لَهُ فَأَخْبَرْتُهُ فَقَالَ تَقُولُ هُمْ أَرْبَعُونَ قَالَ نَعَمْ قَالَ أَخْرِجُوهُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلَّا شَفَّعَهُمْ اللَّهُ فِيهِ ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ مَعْرُوفٍ ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஒருவர் ‘குதைத்’ அல்லது ‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், “குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அவர்களின் வேலைக்காரர் குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்)