அத்தியாயம்: 12, பாடம்: 21, ஹதீஸ் எண்: 1692

حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ مَعِينٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏بِشْرُ بْنُ خَالِدٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ ‏ ‏قَالَ ‏

‏أُمِرْنَا بِالصَّدَقَةِ قَالَ كُنَّا نُحَامِلُ قَالَ فَتَصَدَّقَ ‏ ‏أَبُو عَقِيلٍ ‏ ‏بِنِصْفِ ‏ ‏صَاعٍ ‏ ‏قَالَ وَجَاءَ ‏ ‏إِنْسَانٌ ‏ ‏بِشَيْءٍ أَكْثَرَ مِنْهُ فَقَالَ الْمُنَافِقُونَ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ صَدَقَةِ هَذَا وَمَا فَعَلَ هَذَا الْآخَرُ إِلَّا رِيَاءً فَنَزَلَتْ ‏” ‏الَّذِينَ ‏ ‏يَلْمِزُونَ ‏ ‏الْمُطَّوِّعِينَ مِنْ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ “

‏وَلَمْ يَلْفِظْ بِشْرٌ بِالْمُطَّوِّعِينَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الرَّبِيعِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏سَعِيدِ بْنِ الرَّبِيعِ ‏ ‏قَالَ كُنَّا نُحَامِلُ عَلَى ظُهُورِنَا

தர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, நாங்கள் (சுமை தூக்கி) கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ரலி) (கூலி வேலை செய்து) அரை ’ஸாஉ’ பேரீச்சம் பழம் (கொண்டு வந்து) தர்மம் செய்தார். மற்றொருவர் அதைவிடச் சிறிது அதிகமாகக் கொண்டுவந்(து தர்மம் செய்)தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், “இவரது (அரை ‘ஸாஉ’) தர்மமெல்லாம் அல்லாஹ்விற்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொருவர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே (தர்மம்) செய்தார்” என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான் “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்கள் என்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தர்மங்களைப் பற்றியும் குறைபேசுகின்றார்கள்; தங்கள் உழைப்பைத் தவிர (இறை வழியில் தருவதற்காக) வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல்அன்ஸாரி (ரலி)

குறிப்பு : பிஷ்ர் பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில் ”மனமுவந்து வாரி வழங்குவோர்” எனும் சொல் குறிப்பிடப்படவில்லை.

ஸயீத் பின் அர்ரபீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் எங்களுடைய முதுகுகளில் (சுமை) தூக்கி கூலி வேலை செய்யலானோம்” என்று அபூமஸ்ஊத் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.