அத்தியாயம்: 13, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1850

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏نَهَاهُمْ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْوِصَالِ رَحْمَةً لَهُمْ فَقَالُوا إِنَّكَ ‏ ‏تُوَاصِلُ ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي

“தொடர்நோன்பு நோற்கலாகாது” என நபி (ஸல்) மக்களுக்குத் தடை விதித்தார்கள். மக்கள் மீது கொண்ட கருணையே அதற்குக் காரணம். அப்போது “நீங்கள் தொடர்நோன்பு நோற்கின்றீர்களே!” என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்), “நான் (இவ்விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்றான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1849

حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏وَاصَلَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي أَوَّلِ شَهْرِ رَمَضَانَ ‏ ‏فَوَاصَلَ ‏ ‏نَاسٌ مِنْ الْمُسْلِمِينَ فَبَلَغَهُ ذَلِكَ فَقَالَ لَوْ ‏ ‏مُدَّ ‏ ‏لَنَا الشَّهْرُ لَوَاصَلْنَا وِصَالًا يَدَعُ ‏ ‏الْمُتَعَمِّقُونَ ‏ ‏تَعَمُّقَهُمْ إِنَّكُمْ لَسْتُمْ مِثْلِي أَوْ قَالَ ‏ ‏إِنِّي لَسْتُ مِثْلَكُمْ إِنِّي أَظَلُّ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர் நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) முஸ்லிம்கள் சிலரும் தொடர்நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “எனக்கு இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டிருந்தாலும் என்னால் தொடர்நோன்பு நோற்றிருக்க முடியும். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுபவர்கள் தங்களது போக்கைக் வைவிட்டிருப்பர். நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர் அல்லது நான் உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்கும் நிலையில் நான் பகல் நேரத்தைக் கழிக்கின்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1848

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي رَمَضَانَ فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ وَجَاءَ رَجُلٌ آخَرُ فَقَامَ أَيْضًا حَتَّى كُنَّا ‏ ‏رَهْطًا ‏ ‏فَلَمَّا حَسَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّا خَلْفَهُ جَعَلَ ‏ ‏يَتَجَوَّزُ ‏ ‏فِي الصَّلَاةِ ثُمَّ دَخَلَ ‏ ‏رَحْلَهُ ‏ ‏فَصَلَّى صَلَاةً لَا يُصَلِّيهَا عِنْدَنَا قَالَ قُلْنَا لَهُ حِينَ أَصْبَحْنَا أَفَطَنْتَ لَنَا اللَّيْلَةَ قَالَ فَقَالَ نَعَمْ ذَاكَ الَّذِي حَمَلَنِي عَلَى الَّذِي صَنَعْتُ قَالَ فَأَخَذَ ‏ ‏يُوَاصِلُ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَذَاكَ فِي آخِرِ الشَّهْرِ فَأَخَذَ رِجَالٌ مِنْ أَصْحَابِهِ يُوَاصِلُونَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا بَالُ رِجَالٍ يُوَاصِلُونَ إِنَّكُمْ لَسْتُمْ مِثْلِي أَمَا وَاللَّهِ لَوْ تَمَادَّ لِي الشَّهْرُ لَوَاصَلْتُ وِصَالًا يَدَعُ ‏ ‏الْمُتَعَمِّقُونَ ‏ ‏تَعَمُّقَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்றுகொண்டேன். அடுத்து இன்னொருவரும் வந்து நின்றுகொண்டார். (அடுத்து இன்னொருவர் … இவ்வாறு) இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாக ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நிறைய பேர் நிற்பதை நபி (ஸல்) உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள். பிறகு தமது இல்லத்திற்குள் சென்று, எங்களுடன் தொழாத விதத்தில் (நீளமாகத்) தொழுதார்கள். காலையில் நாங்கள் அவர்களிடம் “நேற்றைய இரவு (உங்களுக்குப் பின்னால் இருந்த) எங்களை நீங்கள் அறிந்தீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “ஆம். அதனால்தான் நான் சுருக்கிக் கொண்டேன்” என்று சொன்னார்கள். அந்த மாதத்தின் இறுதியில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொடர்நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய தோழர்களுள் சிலரும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்கலாயினர். அப்போது நபி (ஸல்), “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொடர்நோன்பு நோற்கிறார்கள்! நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர். கவனத்தில் வையுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த மாதம் இன்னும் தள்ளிப்போயிருந்தால் (உங்களால் இயலாத அளவிற்கு) இன்னும் பல நாட்கள் நான் தொடர்நோன்பு நோற்றிருப்பேன். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுவோர் தங்கள் போக்கைக் கைவிட்டிருப்பர்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1847

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِيَّاكُمْ ‏ ‏وَالْوِصَالَ ‏ ‏قَالُوا فَإِنَّكَ ‏ ‏تُوَاصِلُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّكُمْ لَسْتُمْ فِي ذَلِكَ مِثْلِي ‏ ‏إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي فَاكْلَفُوا مِنْ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُغِيرَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَاكْلَفُوا مَا لَكُمْ بِهِ طَاقَةٌ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْوِصَالِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தொடர்நோன்பு நோற்பதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். “நீங்கள் தொடர்நோன்பு நோற்கின்றீர்களே, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டார்கள். “இவ்விஷயத்தில் நீங்கள் என்னைப் போன்றவர்கள் அல்லர். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன். எனவே, நற்செயல்களில் உங்களால் இயன்ற சுமையை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு : அல் அஃரஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களால் இயன்ற சுமையை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1846

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْوِصَالِ ‏ ‏فَقَالَ رَجُلٌ مِنْ الْمُسْلِمِينَ فَإِنَّكَ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏تُوَاصِلُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَيُّكُمْ مِثْلِي إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنْ الْوِصَالِ ‏ ‏وَاصَلَ ‏ ‏بِهِمْ يَوْمًا ثُمَّ يَوْمًا ثُمَّ رَأَوْا الْهِلَالَ فَقَالَ لَوْ تَأَخَّرَ الْهِلَالُ لَزِدْتُكُمْ ‏ ‏كَالْمُنَكِّلِ ‏ ‏لَهُمْ حِينَ أَبَوْا أَنْ يَنْتَهُوا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொடர்நோன்பிற்குத் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவர், “தாங்கள் தொடர்நோன்பு நோற்கின்றீர்களே, அல்லாஹ்வின் தூதரே?“ என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் என்னைப் போன்றவர் யார்? எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்”’ என்று சொன்னார்கள். ஆனால், தொடர்நோன்பு நோற்பதிலிருந்து விலகிக்கொள்ள மக்கள் மறுத்தபோது, தம்முடன் ஒரு நாள் தொடர்நோன்பு நோற்க மக்களையும் நபியவர்கள் அனுமதித்தார்கள். பின்னர் அடுத்த நாளும் அனுமதித்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) தலைப் பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “தலைப் பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால் மேலும் நான் உங்களுக்கு அதிகப் படுத்தியிருப்பேன்” என்று சொன்னார்கள். மக்கள் தொடர்நோன்பு நோற்பதிலிருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்திலேயே இவ்வாறு கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1845

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاصَلَ ‏ ‏فِي رَمَضَانَ ‏ ‏فَوَاصَلَ ‏ ‏النَّاسُ فَنَهَاهُمْ قِيلَ لَهُ أَنْتَ ‏ ‏تُوَاصِلُ ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي لَسْتُ مِثْلَكُمْ إِنِّي أُطْعَمُ وَأُسْقَى ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ وَلَمْ يَقُلْ فِي رَمَضَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு ரமளான் மாதத்தில் தொடர்நோன்பு நோற்றார்கள். மக்களும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்றனர். ஆனால், மக்களுக்குத் தடை விதித்தார்கள். “நீங்கள் தொடர்நோன்பு நோற்கின்றீர்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு (என் இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

குறிப்பு : அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘ஒரு ரமளான் மாதத்தில்’ என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1844

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْوِصَالِ ‏ ‏قَالُوا إِنَّكَ تُوَاصِلُ قَالَ ‏ ‏إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أُطْعَمُ وَأُسْقَى

நபி (ஸல்), “தொடர்நோன்பு நோற்கலாகாது” எனத் தடை விதித்தார்கள். “நீங்கள் தொடர்நோன்பு நோற்கின்றீர்களே?” என்று மக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்), “நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)