அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2357

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

لَمَّا أَرَادَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَنْفِرَ إِذَا ‏ ‏صَفِيَّةُ ‏ ‏عَلَى بَابِ ‏ ‏خِبَائِهَا ‏ ‏كَئِيبَةً حَزِينَةً فَقَالَ ‏ ‏عَقْرَى ‏ ‏حَلْقَى ‏ ‏إِنَّكِ لَحَابِسَتُنَا ثُمَّ قَالَ لَهَا أَكُنْتِ ‏ ‏أَفَضْتِ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏قَالَتْ نَعَمْ قَالَ ‏ ‏فَانْفِرِي ‏

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏الْحَكَمِ ‏ ‏غَيْرَ أَنَّهُمَا لَا يَذْكُرَانِ كَئِيبَةً حَزِينَةً

நபி (ஸல்) (தமது ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பியபோது, ஸஃபிய்யா (ரலி) (மாதவிடாய் ஏற்பட்டதால்) தமது கூடார வாசலில் கவலை அடைந்தவராகத் துக்கத்துடன் இருந்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவரிடம், “உனக்குத் தொண்டை வலி வரட்டும்!” என்று (செல்லமாகக்) கூறிவிட்டு, “நீ நஹ்ருடைய நாளில் தவாஃபுல் இஃபாளா செய்தாயா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) “ஆம்”  என்று கூற, நபி (ஸல்), “அப்படியானால் நீ புறப்படு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஸுஹைரிப்னு ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “கவலை அடைந்தவராகத் துக்கத்துடன் இருந்தார்” எனும் குறிப்பு இடம்பெற வில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2356

‏حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏لَعَلَّهُ قَالَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَادَ مِنْ ‏ ‏صَفِيَّةَ ‏ ‏بَعْضَ مَا يُرِيدُ الرَّجُلُ مِنْ أَهْلِهِ فَقَالُوا إِنَّهَا حَائِضٌ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏وَإِنَّهَا لَحَابِسَتُنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا قَدْ زَارَتْ يَوْمَ النَّحْرِ قَالَ فَلْتَنْفِرْ مَعَكُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜ்ஜை முடித்த பின் தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களிடம், ஓர் ஆண் தன் மனைவியிடம் நாடுகின்ற(தாம்பத்தியத்)தை நாடினார்கள். அப்போது, “அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் நம்மை (புறப்படவிடாமல்) தடுத்து விட்டாரா?” என்று கேட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் நஹ்ருடைய நாளில் தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டார்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறாயின், அவர் உங்களுடன் புறப்படட்டும்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2355

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ ‏ ‏قَدْ حَاضَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَعَلَّهَا تَحْبِسُنَا أَلَمْ تَكُنْ قَدْ طَافَتْ مَعَكُنَّ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏قَالُوا بَلَى قَالَ فَاخْرُجْنَ

நான் (விடைபெறும் ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் நம்மை (புறப்படவிடாமல்) தடுத்துவிடுவார் போலிருக்கிறதே! அவர் உங்களுடன் தவாஃப் (இஃபாளா) செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம் (செய்துவிட்டார்)” என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால் நீங்களெல்லாரும் புறப்படலாம்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2354

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَفْلَحُ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

كُنَّا نَتَخَوَّفُ أَنْ تَحِيضَ ‏ ‏صَفِيَّةُ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏تُفِيضَ ‏ ‏قَالَتْ فَجَاءَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَحَابِسَتُنَا ‏ ‏صَفِيَّةُ ‏ ‏قُلْنَا قَدْ ‏ ‏أَفَاضَتْ ‏ ‏قَالَ فَلَا إِذَنْ

தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு முன்பு ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமோ என நாங்கள் அஞ்சிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, “ஸஃபிய்யா நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “அவர் தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டார்” என்று கூறினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால் பிரச்சினையில்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2353

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏وَعُرْوَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

حَاضَتْ ‏ ‏صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ ‏ ‏بَعْدَ مَا ‏ ‏أَفَاضَتْ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَذَكَرْتُ حِيضَتَهَا لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَابِسَتُنَا هِيَ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا قَدْ كَانَتْ ‏ ‏أَفَاضَتْ ‏ ‏وَطَافَتْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ حَاضَتْ بَعْدَ ‏ ‏الْإِفَاضَةِ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلْتَنْفِرْ ‏

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَ ‏ ‏أَحْمَدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ قَالَتْ ‏ ‏طَمِثَتْ ‏ ‏صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ ‏ ‏زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ بَعْدَ مَا ‏ ‏أَفَاضَتْ ‏ ‏طَاهِرًا ‏ ‏بِمِثْلِ

حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ ‏ ‏صَفِيَّةَ ‏ ‏قَدْ حَاضَتْ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏الزُّهْرِيِّ

அன்னை ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) தவாஃபுல் இஃபாளா செய்த பின்பு அவர்களுக்கு, மாதவிடாய் ஏற்பட்டது. அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அவர் தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டார், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூற, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால் அவர் புறப்படலாம் (தவாஃபுல் வதா செய்ய வேண்டியதில்லை)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

அஹ்மது பின் ஈஸா (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு, விடைபெறும் ஹஜ்ஜின்போது, அவர் தூய்மையான நிலையில் தவாஃபுல் இஃபாளா செய்த பின்பு மாதவிடாய் ஏற்பட்டது …” என்று தொடங்குகிறது.

அப்துர் ரஹ்மான் அல் காஸிம் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றிக் கூறினேன் …” என அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாகத் தொடங்குகின்றது.

அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2352

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏قَالَ: ‏

كُنْتُ مَعَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏إِذْ قَالَ ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ ‏ ‏تُفْتِي أَنْ تَصْدُرَ الْحَائِضُ قَبْلَ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهَا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏إِمَّا لَا فَسَلْ فُلَانَةَ الْأَنْصَارِيَّةَ هَلْ أَمَرَهَا بِذَلِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَرَجَعَ ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ ‏ ‏إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏يَضْحَكُ وَهُوَ يَقُولُ مَا أَرَاكَ إِلَّا قَدْ صَدَقْتَ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி), “மாதவிடாய் ஏற்பட்ட பெண் இறுதியாக இறையில்லம் கஅபாவைச் சந்தித்(து தவாஃபுல் வதா செய்)திடாமலேயே புறப்பட்டுச் செல்லலாம் என நீங்கள் தீர்ப்பு வழங்குகின்றீர்களா? (இது சரியா?)” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அவ்வாறில்லை என நீங்கள் கருதினால், இன்ன அன்ஸாரிப் பெண்ணிடம் (சென்று) இவ்வாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்களா (இல்லையா) எனக் கேளுங்கள்” என்றார்கள். அவ்வாறே ஸைத் பின் ஸாபித் (ரலி) (சென்று, கேட்டுவிட்டுத்) திரும்பிவந்து, “நீங்கள் சொன்னது உண்மை என்று கண்டுகொண்டேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2351

‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنْ الْمَرْأَةِ الْحَائِضِ

இறையில்லம் கஅபாவைத் தரிசித்(து தவாஃபுல் வதாஉ செய்)தலே (ஹஜ்ஜின்) இறுதிச் செயலாக அமைய வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு மட்டும் (தவாஃபுல் வதாவை விட்டுவிட) சலுகை அளிக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2350

‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

كَانَ النَّاسُ يَنْصَرِفُونَ فِي كُلِّ وَجْهٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَنْفِرَنَّ ‏ ‏أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ ‏ ‏بِالْبَيْتِ

‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏يَنْصَرِفُونَ كُلَّ وَجْهٍ وَلَمْ يَقُلْ :فِي

மக்கள் (ஹஜ்ஜை முடித்ததும்) பல்வேறு முனைகளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஹஜ் செய்த) எவரும் இறையில்லம் கஅபாவை இறுதியாகச் சந்தித்(து தவாஃப் செய்)திடாமல் மக்காவிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டாம்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)