அத்தியாயம்: 16, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2551

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِزُهَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي شَوَّالٍ ‏ ‏وَبَنَى بِي ‏ ‏فِي شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي قَالَ وَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ


و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِعْلَ ‏ ‏عَائِشَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை மணந்துகொண்டது ஷவ்வால் மாதத்தில்; பின்னர் அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கியதும் ஒரு ஷவ்வாலில்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருள் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் எவருமிலர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“அன்னை ஆயிஷா (ரலி), தங்கள் (குடும்பப்) பெண்களை ஷவ்வால் மாதத்தில் (மணமுடித்து) அனுப்பிவைப்பதையே விரும்புவார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்.