அத்தியாயம்: 17, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2616

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو مَعْمَرٍ إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ الْبَرِيدِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحْرُمُ مِنْ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنْ الْوِلَادَةِ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “பிறப்பால் ஏற்பட்ட உறவால் மணமுடிக்கக் கூடாதவர்களை, பால்குடி உறவாலும் மணமுடிக்கக் கூடாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2615

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهَا: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ عِنْدَهَا وَإِنَّهَا سَمِعَتْ صَوْتَ رَجُلٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ ‏ ‏حَفْصَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُرَاهُ فُلَانًا لِعَمِّ ‏ ‏حَفْصَةَ ‏ ‏مِنْ الرَّضَاعَةِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ لَوْ كَانَ فُلَانٌ حَيًّا لِعَمِّهَا مِنْ الرَّضَاعَةِ دَخَلَ عَلَيَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلَادَةُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் இருந்த ஒரு நாளில், ஹஃப்ஸா (ரலி) வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். எனவே நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (துணைவி ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல யாரோ ஒருவர் அனுமதி கேட்கின்றார்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் இன்னவராக இருப்பார் என நான் கருதுகின்றேன்” என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துச் சொன்னார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இன்னவர் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே!” என்று என்னுடைய பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம் (முடியும்); பிறப்பு, மணமுடிக்கத் தடை செய்யும் உறவுகளை, பால்குடியும் தடை செய்யும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)