அத்தியாயம்: 18, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2695

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ فَكَانَ إِذَا صَلَّى الْعَصْرَ دَارَ عَلَى نِسَائِهِ فَيَدْنُو مِنْهُنَّ فَدَخَلَ عَلَى ‏ ‏حَفْصَةَ ‏ ‏فَاحْتَبَسَ عِنْدَهَا أَكْثَرَ مِمَّا كَانَ يَحْتَبِسُ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ فَقِيلَ لِي أَهْدَتْ لَهَا امْرَأَةٌ مِنْ قَوْمِهَا ‏ ‏عُكَّةً ‏ ‏مِنْ عَسَلٍ فَسَقَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْهُ شَرْبَةً فَقُلْتُ أَمَا وَاللَّهِ لَنَحْتَالَنَّ لَهُ فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِسَوْدَةَ ‏ ‏وَقُلْتُ إِذَا دَخَلَ عَلَيْكِ فَإِنَّهُ سَيَدْنُو مِنْكِ فَقُولِي لَهُ يَا رَسُولَ اللَّهِ أَكَلْتَ ‏ ‏مَغَافِيرَ ‏ ‏فَإِنَّهُ سَيَقُولُ لَكِ لَا فَقُولِي لَهُ مَا هَذِهِ الرِّيحُ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَشْتَدُّ عَلَيْهِ أَنْ يُوجَدَ مِنْهُ الرِّيحُ فَإِنَّهُ سَيَقُولُ لَكِ سَقَتْنِي ‏ ‏حَفْصَةُ ‏ ‏شَرْبَةَ عَسَلٍ فَقُولِي لَهُ ‏ ‏جَرَسَتْ ‏ ‏نَحْلُهُ ‏ ‏الْعُرْفُطَ ‏ ‏وَسَأَقُولُ ذَلِكِ لَهُ وَقُولِيهِ أَنْتِ يَا ‏ ‏صَفِيَّةُ ‏ ‏فَلَمَّا دَخَلَ عَلَى ‏ ‏سَوْدَةَ ‏ ‏قَالَتْ تَقُولُ ‏ ‏سَوْدَةُ ‏ ‏وَالَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ لَقَدْ كِدْتُ أَنْ أُبَادِئَهُ بِالَّذِي قُلْتِ لِي وَإِنَّهُ لَعَلَى الْبَابِ ‏ ‏فَرَقًا ‏ ‏مِنْكِ فَلَمَّا دَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَكَلْتَ ‏ ‏مَغَافِيرَ ‏ ‏قَالَ لَا قَالَتْ فَمَا هَذِهِ الرِّيحُ قَالَ ‏ ‏سَقَتْنِي ‏ ‏حَفْصَةُ ‏ ‏شَرْبَةَ عَسَلٍ قَالَتْ ‏ ‏جَرَسَتْ ‏ ‏نَحْلُهُ ‏ ‏الْعُرْفُطَ ‏ ‏فَلَمَّا دَخَلَ عَلَيَّ قُلْتُ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ دَخَلَ عَلَى ‏ ‏صَفِيَّةَ ‏ ‏فَقَالَتْ بِمِثْلِ ذَلِكَ فَلَمَّا دَخَلَ عَلَى ‏ ‏حَفْصَةَ ‏ ‏قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلَا أَسْقِيكَ مِنْهُ قَالَ لَا حَاجَةَ لِي بِهِ قَالَتْ تَقُولُ ‏ ‏سَوْدَةُ ‏ ‏سُبْحَانَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ حَرَمْنَاهُ قَالَتْ قُلْتُ لَهَا اسْكُتِي


قَالَ ‏ ‏أَبُو إِسْحَقَ إِبْرَاهِيمُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ بِشْرِ بْنِ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏بِهَذَا سَوَاءً ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்பமானவையாக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருத் தொழுகையை முடித்ததும் தம் மனைவியரிடம் சென்று அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தபோது, ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு(த்தாயிஃப் நகர)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.

உடனே நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(து தொடர்வதைத் தடுப்ப)தற்காக ஒரு தந்திரம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் மனைவியரில் ஒருவரான) ஸவ்தா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். இல்லை என்று கூறுவார்கள். இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்மிடமிருந்து (துர்)வாடை வீசுவதைக் கடுமையாக வெறுப்பார்கள்) அப்போது அவர்கள், எனக்கு ஹஃப்ஸா தேன் (கலந்த) பானம் புகட்டினார் என்று உங்களிடம் கூறுவார்கள். நீங்கள், தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு வந்திருக்கலாம். (அதனால்தான் வாடை வருகிறது) என்று சொல்லுங்கள். நானும் அவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் அவ்வாறே சொல்லுங்கள்” என்று (மற்றொரு மனைவியான) ஸஃபிய்யாவிடமும் சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது, (நான் சொன்னபடி கேட்டுவிட்டு) ஸவ்தா (என்னிடம்), “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் வீட்டு வாசலுக்கு வந்தபோதே, உனக்குப் பயந்து நீ என்னிடம் சொன்னபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க முனைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை நெருங்கியதும் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இல்லையே! என்று பதிலளித்தார்கள். அப்படியானால் இது என்ன வாடை? என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஹஃப்ஸா எனக்குத் தேன் (கலந்த) பானம் புகட்டினார் என்று சொன்னார்கள். நான், தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு வந்திருக்கலாம். (அதனால்தான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)” என்று கூறினேன்” என்று விளக்கினார்.

(தொடர்ந்து ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தபோது, அவர்களிடம் நானும் அவ்வாறே கேட்டேன். பிறகு அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவரும் அவ்வாறே கேட்டார். பின்னர் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்றபோது, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குச் சிறிதளவு தேன் தரட்டுமா?” என்று கேட்டார். அவர்கள் “தேவையில்லை” என்றார்கள்.

(இது குறித்து) ஸவ்தா (ரலி),  “அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நாம் தடுத்துவிட்டோமே!” என்று (வருத்தத்துடன்) கூறுவார். நான் அவரிடம், “சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)” என்று சொல்வேன்.

அறிவிப்பாளர் :அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2694

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عُبَيْدَ بْنَ عُمَيْرٍ ‏ ‏يُخْبِرُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تُخْبِرُ: ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَمْكُثُ عِنْدَ ‏ ‏زَيْنَبَ بِنْتِ جَحْشٍ ‏ ‏فَيَشْرَبُ عِنْدَهَا عَسَلًا قَالَتْ ‏ ‏فَتَوَاطَيْتُ أَنَا ‏ ‏وَحَفْصَةُ ‏ ‏أَنَّ أَيَّتَنَا مَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلْتَقُلْ إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ ‏ ‏مَغَافِيرَ ‏ ‏أَكَلْتَ ‏ ‏مَغَافِيرَ ‏ ‏فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏بَلْ شَرِبْتُ عَسَلًا عِنْدَ ‏ ‏زَيْنَبَ بِنْتِ جَحْشٍ ‏ ‏وَلَنْ أَعُودَ لَهُ فَنَزَلَ ‏

          ‏لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏إِنْ تَتُوبَا ‏

‏لِعَائِشَةَ ‏ ‏وَحَفْصَةَ ‏

          ‏وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا ‏

‏لِقَوْلِهِ بَلْ شَرِبْتُ عَسَلًا

நபி (ஸல்) (தம் மனைவி) ஸைனப் பின்த்தி ஜஹ்ஷு (ரலி) அவர்களிடம் (அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களின் மனைவியரான) நானும் ஹஃப்ஸாவும் நபி (ஸல்) (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் “தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேட்க வேண்டும்” எனக் எங்களுக்குள் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்.

அவ்வாறே எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) வந்தபோது, முன்பு பேசி வைத்திருந்தபடி கேட்டோம். அதற்கு நபி (ஸல்), “(அப்படியெல்லாம் இல்லை.) மாறாக, ஸைனப் பின்த்தி ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவு தான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். ஆகவே, “நபியே! உங்களுடைய மனைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக்கொள்கின்றீர்கள்?” என்று தொடங்கி “ … நீங்கள் இருவரும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே) நன்று” என முடியும் (66:1-4) வசனங்கள் அருளப்பெற்றன.

அறிவிப்பாளர் :அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

(இந்த 66:4ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) “நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும் ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது.

(66:3ஆவது வசனத்தில்) “நபி தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்” என்று அல்லாஹ் கூறியிருப்பது, “இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக ஒருபோதும் அதை நான் அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)” என்று நபி (ஸல்) கூறியதையே குறிக்கிறது.

அத்தியாயம்: 18, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2693

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ بِشْرٍ الْحَرِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏أَنَّ ‏ ‏يَعْلَى بْنَ حَكِيمٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

‏إِذَا حَرَّمَ الرَّجُلُ عَلَيْهِ امْرَأَتَهُ فَهِيَ يَمِينٌ يُكَفِّرُهَا وَقَالَ : ‏ ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

இப்னு அப்பாஸ் (ரலி), “ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தடை செய்யப்பட்டவள்’ எனக் கூறி(த் தமக்கு ஹலாலை ஹராமானதாக ஆக்கி)னால், அது பரிகாரம் செய்ய வேண்டிய சத்தியமாகும்” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2692

‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ يَعْنِي الدَّسْتَوَائِيَّ ‏ ‏قَالَ كَتَبَ إِلَيَّ ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏يَعْلَى بْنِ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏فِي الْحَرَامِ يَمِينٌ يُكَفِّرُهَا وَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ : ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

(ஒருவர் தம் ஹலாலான மனைவியை நோக்கி ‘நீ எனக்கு ஹராமானவள்‘  எனக் கூறி) ஹலாலை, ஹராமாக்கிக் கொள்வதானது பரிகாரம் செய்ய வேண்டிய சத்தியம் ஆகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (33:21ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)