அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 384

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرٌ مِنْ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الْأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الْإِبِطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ قَالَ زَكَرِيَّاءُ قَالَ مُصْعَبٌ وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ
زَادَ قُتَيْبَةُ قَالَ وَكِيعٌ انْتِقَاصُ الْمَاءِ يَعْنِي الِاسْتِنْجَاءَ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ أَبِيهِ عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ فِي هَذَا الْإِسْنَادِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ أَبُوهُ وَنَسِيتُ الْعَاشِرَةَ

“மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மறையுறுப்பின் முடிகளை மழிப்பது, (மல, ஜலம் கழித்தப் பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது ஆகிய பத்தும் இயற்கை மரபுவழியைச் சார்ந்தவை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸை முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) கூறச் செவியுற்ற ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்), “பத்தாவது என்ன என்பதை நான் மறந்து விட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று முஸ்அப் (ரஹ்) ஐயத்துடன் கூறினார்” எனக் குறிப்பிடுகிறார்.

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘இன்த்திகாஸுல் மாஇ’ எனும் சொற்றொடருக்கு ‘(மல-ஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல்’ என்று பொருள்” எனக் கூடுதல் விளக்கம் இடம் பெற்றுள்ளது.

அபூ குரைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தப் பத்தாவது என்ன என்பதை மறந்து விட்டேன்” எனக் கூறியவர் தம் தந்தை அபூ ஸாயிதா (ரஹ்)தாம் என ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 383

حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ مَوْلَى الْحُرَقَةِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ

“மீசையைக் கத்தரியுங்கள்; தாடியை வளர விடுங்கள். தீவணங்கி(மஜூசி)களுக்கு மாறு செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 382

حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ حَدَّثَنَا نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى

“இணைவைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்; மீசையை நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 381

و حَدَّثَنَاه قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عُمَرَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحْيَةِ

மீசையை நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 380

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ح و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى

“மீசையை நறுக்குங்கள்; தாடியை (வளர) விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 379

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ كِلَاهُمَا عَنْ جَعْفَرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ أَنَسٌ وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبِطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً

மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மறையுறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றின் உயரெல்லைக் காலவரையறையான நாற்பது இரவுகளுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 378

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏الْفِطْرَةُ خَمْسٌ ‏ ‏الِاخْتِتَانُ ‏ ‏وَالِاسْتِحْدَادُ ‏ ‏وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَنَتْفُ الْإِبِطِ ‏

“இயற்கை மரபுகள் ஐந்தாகும்: விருத்த சேதனம் செய்வது, மறைவான உறுப்பின் முடிகளை நீக்குவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றிக் கொள்வது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 377

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْفِطْرَةُ خَمْسٌ أَوْ ‏ ‏خَمْسٌ مِنْ الْفِطْرَةِ ‏ ‏الْخِتَانُ ‏ ‏وَالِاسْتِحْدَادُ ‏ ‏وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَنَتْفُ الْإِبِطِ وَقَصُّ الشَّارِبِ ‏

“இயற்கை மரபுகள் என்பன ஐந்தாகும்/இயற்கை மரபுகளைச் சார்ந்தவை ஐந்தாகும்:

(1) விருத்த சேதனம் செய்வது,

(2) மறைவான உறுப்பின் முடிகளை நீக்குவது,

(3) நகங்களை வெட்டிக் கொள்வது,

(4) அக்குள் முடிகளை அகற்றுவது,

(5) மீசையைக் கத்தரித்துக் கொள்வது”.

என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)