அத்தியாயம்: 22, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2959

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏
لَمَّا أُنْزِلَتْ الْآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏فِي الرِّبَا قَالَتْ خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى الْمَسْجِدِ فَحَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ

‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275 – 281) வட்டி தொடர்பாக அருளப் பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசலை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, (அவற்றை ஓதிக்காட்டி, வட்டியையும்) மதுபான வியாபாரத்தை(யும்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2958

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الضُّحَى ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏
لَمَّا نَزَلَتْ الْآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاقْتَرَأَهُنَّ عَلَى النَّاسِ ثُمَّ نَهَى عَنْ التِّجَارَةِ فِي الْخَمْرِ

‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டி தொடர்பான) இறுதி வசனங்கள் (2:275 – 281) அருளப் பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்பட்டுச் சென்று அவற்றை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தை(யும்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2957

‏حَدَّثَنَا ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ ‏ ‏رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏مِصْرَ ‏ ‏أَنَّهُ جَاءَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏وَغَيْرُهُ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ السَّبَإِيِّ ‏ ‏مِنْ أَهْلِ ‏ ‏مِصْرَ: ‏
أَنَّهُ سَأَلَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏عَمَّا يُعْصَرُ مِنْ الْعِنَبِ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏إِنَّ رَجُلًا أَهْدَى لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَاوِيَةَ ‏ ‏خَمْرٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ عَلِمْتَ أَنَّ اللَّهَ قَدْ حَرَّمَهَا قَالَ لَا فَسَارَّ إِنْسَانًا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَ سَارَرْتَهُ فَقَالَ أَمَرْتُهُ بِبَيْعِهَا فَقَالَ ‏ ‏إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا قَالَ فَفَتَحَ ‏ ‏الْمَزَادَةَ ‏ ‏حَتَّى ذَهَبَ مَا فِيهَا ‏


حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ

எகிப்தியரான அப்துல்லாஹ் பின் வஅலா அஸ்ஸபயீ (ரஹ்), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (வந்து) திராட்சையிலிருந்து பிழியப்படும் (மது)பானம் குறித்துக் கேட்டார். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல்பை (நிரம்ப) மதுவை ஒருவர் அன்பளிப்பாக  வழங்கினார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இல்லை’ என்று கூறிவிட்டு, பிறகு (தம் அருகிலிருந்த) ஒருவரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அதை விற்றுவிடச் சொன்னேன்’ என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த(இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்’ என்றார்கள். உடனே அவர் தோல் பையைத் திறந்துவிட, அதிலிருந்த(ம)து (வழிந்தோடிப்) போனது” என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக ஸைத் பின் அஸ்லம் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2956

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى أَبُو هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ الْجُرَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ: ‏
سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏قَالَ يَا أَيُّهَا النَّاسُ ‏ ‏إِنَّ اللَّهَ تَعَالَى ‏ ‏يُعَرِّضُ بِالْخَمْرِ ‏ ‏وَلَعَلَّ اللَّهَ سَيُنْزِلُ فِيهَا أَمْرًا فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهَا شَيْءٌ فَلْيَبِعْهُ وَلْيَنْتَفِعْ بِهِ قَالَ فَمَا لَبِثْنَا إِلَّا يَسِيرًا حَتَّى قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ تَعَالَى حَرَّمَ الْخَمْرَ فَمَنْ أَدْرَكَتْهُ هَذِهِ الْآيَةُ وَعِنْدَهُ مِنْهَا شَيْءٌ فَلَا يَشْرَبْ وَلَا يَبِعْ قَالَ فَاسْتَقْبَلَ النَّاسُ بِمَا كَانَ عِنْدَهُ مِنْهَا فِي طَرِيقِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَسَفَكُوهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் (முழு மதுவிலக்கு வருவதற்கு முன்பு, மக்களுக்கு ஒரு நாள்) உரை யாற்றினார்கள். அப்போது “மக்களே! அல்லாஹ் மது(விலக்குப்) பற்றி, குறிப்புக் காட்டியுள்ளான். விரைவில் அது தொடர்பாக (தீர்க்கமான) ஓர் ஆணையை அல்லாஹ் அருளக்கூடும். எனவே, தம்மிடம் மதுவில் மீதம் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று, அதன் மூலம் பயனடைந்துகொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

நாங்கள் சிறிதே காலத்தைக் கடந்தபோது, நபி (ஸல்), “அல்லாஹ் மதுவை(முற்றாக)த் தடை செய்துவிட்டான். எனவே, தம்மிடம் மதுவில் மீதம் வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால், மதுவை அவர் அருந்தவும் வேண்டாம்; விற்கவும் வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே, மக்கள் தங்களிடமிருந்த மதுவை மதீனாவின் தெருக்களில் கொட்டிவிட்டனர்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)