அத்தியாயம்: 22, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3025

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، – يَعْنِي ابْنَ عَبْدِ الْوَارِثِ – حَدَّثَنَا حَرْبٌ، – وَهُوَ ابْنُ شَدَّادٍ – حَدَّثَنَا يَحْيَى، – وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ – عَنْ مُحَمَّدِ بْنِ، إِبْرَاهِيمَ أَنَّ أَبَا سَلَمَةَ :‏ ‏

حَدَّثَهُ وَكَانَ، بَيْنَهُ وَبَيْنَ قَوْمِهِ خُصُومَةٌ فِي أَرْضٍ وَأَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ ذَلِكَ لَهَا فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ‏”‏ ‏


وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، أَخْبَرَنَا أَبَانٌ، حَدَّثَنَا يَحْيَى، أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ أَنَّهُ، دَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ مِثْلَهُ ‏‏

எனக்கும் என் கூட்டத்தாருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். ஆயிஷா (ரலி), “அபூஸலமா! மண்ணாசையைத் தவிர்த்துக் கொள்க! ஏனெனில், ’அநியாயமாக ஒரு சாண் அளவு நிலத்தை ஆக்கிரமித்தவரது கழுத்தில் ஏழு பூமிகள் மாலையாக மாட்டப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா அப்துல்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3024

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَأْخُذُ أَحَدٌ شِبْرًا مِنَ الأَرْضِ بِغَيْرِ حَقِّهِ إِلاَّ طَوَّقَهُ اللَّهُ إِلَى سَبْعِ أَرَضِينَ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏

“முறையின்றி ஒரு சாண் நிலத்தை அபகரித்தவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் ஏழு பூமிகளை மாலையாக மாட்டாமல் விடுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3023

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ قَالَ :‏ ‏

سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا فَإِنَّهُ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ ‏”‏

“ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தவரது கழுத்தில் மறுமை நாளில் ஏழு பூமிகள்  மாலையாக மாட்டப்படும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3022

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ:‏ ‏

أَنَّ أَرْوَى بِنْتَ أُوَيْسٍ، ادَّعَتْ عَلَى سَعِيدِ بْنِ زَيْدٍ أَنَّهُ أَخَذَ شَيْئًا مِنْ أَرْضِهَا فَخَاصَمَتْهُ إِلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ ‏.‏ فَقَالَ سَعِيدٌ أَنَا كُنْتُ آخُذُ مِنْ أَرْضِهَا شَيْئًا بَعْدَ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا طُوِّقَهُ إِلَى سَبْعِ أَرَضِينَ ‏”‏ ‏‏ فَقَالَ لَهُ مَرْوَانُ لاَ أَسْأَلُكَ بَيِّنَةً بَعْدَ هَذَا ‏.‏ فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَعَمِّ بَصَرَهَا وَاقْتُلْهَا فِي أَرْضِهَا ‏.‏ قَالَ فَمَا مَاتَتْ حَتَّى ذَهَبَ بَصَرُهَا ثُمَّ بَيْنَا هِيَ تَمْشِي فِي أَرْضِهَا إِذْ وَقَعَتْ فِي حُفْرَةٍ فَمَاتَتْ

‘எனது நிலத்தில் ஒரு பகுதியை ஸயீத் பின் ஸைத் (ரலி) ஆக்கிரமித்துக் கொண்டார்’ என அர்வா பின்தி உவைஸ் என்பவள் குற்றம் சாட்டி, (அப்போதைய மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமிடம் ஸயீதுக்கு எதிராக வழக்குத் தொடுத்தாள். (விசாரணையின்போது) ஸயீத் பின் ஸைத் (ரலி), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு ஹதீஸை) செவியுற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?” என்று கேட்டார்கள்.

அதற்கு மர்வான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற(ஹதீஸான)து யாது?” என்று கேட்டார்கள். அதற்கு ஸயீத் (ரலி), “ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தவரது கழுத்தில், ஏழு பூமிகள் மாலையாக மாட்டப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள் அதற்கு மர்வான், “இதற்குப் பின் உங்களிடம் நான் ஆதாரம் கேட்கமாட்டேன்” என்றார்கள்.

அப்போது ஸயீத் பின் ஸைத் (ரலி), ”இறைவா! இவள் பொய் சொல்லியிருந்தால் இவளது பார்வையைப் பறித்துவிடு. அந்த(ப் பகுதி) நிலத்திலேயே அவளைக் கொன்றுவிடு” என்று பிரார்த்தித்தார்கள்.

பிறகு பார்வை பறிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு (கிணற்றுக்) குழியில் (தவறி) விழுந்து மாண்டுபோனாள்.

அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3021

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّحَدَّثَهُ عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ:‏ ‏

أَنَّ أَرْوَى، خَاصَمَتْهُ فِي بَعْضِ دَارِهِ فَقَالَ دَعُوهَا وَإِيَّاهَا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ بِغَيْرِ حَقِّهِ طُوِّقَهُ فِي سَبْعِ أَرَضِينَ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏ ‏.‏ اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَأَعْمِ بَصَرَهَا وَاجْعَلْ قَبْرَهَا فِي دَارِهَا ‏


قَالَ فَرَأَيْتُهَا عَمْيَاءَ تَلْتَمِسُ الْجُدُرَ تَقُولُ أَصَابَتْنِي دَعْوَةُ سَعِيدِ بْنِ زَيْدٍ ‏.‏ فَبَيْنَمَا هِيَ تَمْشِي فِي الدَّارِ مَرَّتْ عَلَى بِئْرٍ فِي الدَّارِ فَوَقَعَتْ فِيهَا فَكَانَتْ قَبْرَهَا‏.‏

அர்வா பின்தி உவைஸ் என்பவள் எனது வீட்டின் ஒரு பகுதியில் (உரிமை கோரி) வழக்காடினாள். அப்போது நான், “அவளையும் அந்த(ப் பகுதி) வீட்டையும் விட்டுவிடுங்கள். ஏனெனில், ‘நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தை அபகரித்துக் கொள்கின்றவரது கழுத்தில் மறுமை நாளில் ஏழு பூமிகள் மாலையாக மாட்டப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன். இறைவா! அவள் (தனது வாதத்தில்) பொய் சொல்பவளாக இருந்தால், அவளது பார்வையைப் பறித்துவிடு. அவளது சவக்குழியை அந்த வீட்டிலேயே அமைத்துவிடு” என்று வேண்டினேன்.

அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஸைத் பின் அம்ரு பின் நுஃபைல் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை ஸயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறுகின்றார்:

பின்னர் நான் அந்தப் பெண்ணைப் பார்வை இழந்தவளாகப் பார்த்தேன். அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு நடந்தாள். “ஸயீத் பின் ஸைதின் பிரார்த்தனை எனது விஷயத்தில் பலித்துவிட்டது” என்று கூறுவாள். இந்நிலையில் அவள் (ஒரு நாள்) தனது வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது, வீட்டின் கிணற்றை அவள் கடந்து சென்றாள். அப்போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அதுவே அவளது சவக் குழியாக அமைந்தது.

அத்தியாயம்: 22, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3020

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ:‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَنِ اقْتَطَعَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا طَوَّقَهُ اللَّهُ إِيَّاهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ ‏”‏

“ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்தவரது கழுத்தில், அல்லாஹ் மறுமை நாளில் ஏழு பூமிகளை மாலையாக மாட்டுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஸைத் பின் அம்ரு பின் நுஃபைல் (ரலி)