அத்தியாயம்: 28, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3179

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ قَالَ:‏

لَمَّا كَانَ ذَلِكَ الْيَوْمُ قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَخَذَ إِنْسَانٌ بِخِطَامِهِ فَقَالَ ‏”أَتَدْرُونَ أَىَّ يَوْمٍ هَذَا‏”‏ ‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ ‏.‏ فَقَالَ ‏”أَلَيْسَ بِيَوْمِ النَّحْرِ‏”‏ ‏.‏ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”فَأَىُّ شَهْرٍ هَذَا‏”‏ ‏.‏ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ قَالَ ‏”أَلَيْسَ بِذِي الْحِجَّةِ‏”‏ ‏.‏ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”فَأَىُّ بَلَدٍ هَذَا‏”‏ ‏.‏ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ – قَالَ – حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ ‏.‏ قَالَ ‏”أَلَيْسَ بِالْبَلْدَةِ‏”‏ ‏.‏ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ أَمْلَحَيْنِ فَذَبَحَهُمَا وَإِلَى جُزَيْعَةٍ مِنَ الْغَنَمِ فَقَسَمَهَا بَيْنَنَا‏.‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنِ ابْنِ عَوْنٍ، قَالَ قَالَ مُحَمَّدٌ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا كَانَ ذَلِكَ الْيَوْمُ جَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى بَعِيرٍ – قَالَ – وَرَجُلٌ آخِذٌ بِزِمَامِهِ – أَوْ قَالَ بِخِطَامِهِ – فَذَكَرَ نَحْوَ حَدِيثِ يَزِيدَ بْنِ زُرَيْعٍ ‏.‏

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، وَعَنْ رَجُلٍ، آخَرَ هُوَ فِي نَفْسِي أَفْضَلُ مِنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ قَالاَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا قُرَّةُ بِإِسْنَادِ يَحْيَى بْنِ سَعِيدٍ – وَسَمَّى الرَّجُلَ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ – عَنْ أَبِي بَكْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ فَقَالَ ‏”‏أَىُّ يَوْمٍ هَذَا‏”‏ ‏.‏ وَسَاقُوا الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عَوْنٍ غَيْرَ أَنَّهُ لاَ يَذْكُرُ ‏”وَأَعْرَاضَكُمْ‏”‏ ‏.‏ وَلاَ يَذْكُرُ ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ وَمَا بَعْدَهُ وَقَالَ فِي الْحَدِيثِ ‏”كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ أَلاَ هَلْ بَلَّغْتُ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ ‏”اللَّهُمَّ اشْهَدْ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (நஹ்ருடைய) அந்நாளில் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒட்டகத்தின் கடிவாளத்தை ஒருவர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது “இது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று அவர்கள் கேட்க, “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று மக்கள் கூறினார்கள். அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக) இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?” என்று கேட்க, “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்.

மேலும் “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று சொன்னோம். அவர்கள் “இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்.

மேலும், “இது எந்த நகரம்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக) இருந்துவிட்டு, “இது அல் பல்தா (புனித நகரம் மக்கா) அல்லவா?” என்று கேட்க, நாங்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று விடையளித்தோம்.

அப்போது அவர்கள், “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் (ஒருவருடைய) உயிரும் உடைமைகளும் மானமும் மற்ற ஒருவருக்குப் புனிதமானவையாகும். (இதை) இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

பிறகு கருப்பு நிறம் கலந்த இரு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் திரும்பி, அவற்றை அறுத்தார்கள். மேலும், ஆட்டிறைச்சியில் சிறிதளவு எடுத்து எங்களிடையே பங்கிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா (ரலி) வழியாக அவரின் மகன் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


குறிப்பு :

ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பு “… (நஹ்ருடைய) நாள் வந்தபோது நபி (ஸல்) ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்” என்று ஆரம்பமாகிறது.

யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது, “இது எந்த நாள்? என்று கேட்டார்கள்…” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், “உங்கள் மானம்…” என்பதும் “பிறகு இரு செம்மறிக் கடாக்களின் பக்கம் திரும்பினார்கள் …” என்பதும் அதற்குப் பின்னுள்ள குறிப்புகளும் இடம் பெறவில்லை.

அவற்றில் “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இந்த நாள் எந்த அளவுக்குப் புனிதமானதோ அதைப் போன்றே (உங்களிள் ஒருவரின் உயிரும் உடைமைகளும்) நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள்வரை மற்ற ஒருவருக்குப் புனிதமானவையாகும்” என்று கூறி விட்டு “நான் (இறைச்செய்திகளை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம் என்றோம். அவர்கள் “இறைவா! நீயே இதற்குச் சாட்சியாக இரு” என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 28, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3178

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَيَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ:‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏”‏إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبٌ شَهْرُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ – ثُمَّ قَالَ – أَىُّ شَهْرٍ هَذَا‏”‏ ‏.‏ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ – قَالَ – فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ ‏.‏ قَالَ ‏”أَلَيْسَ ذَا الْحِجَّةِ ‏”‏ ‏.‏ قُلْنَا بَلَى ‏.‏ قَالَ ‏”فَأَىُّ بَلَدٍ هَذَا‏”‏ ‏.‏ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ – قَالَ – فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ ‏.‏ قَالَ ‏”‏أَلَيْسَ الْبَلْدَةَ‏”‏ ‏.‏ قُلْنَا بَلَى ‏.‏ قَالَ ‏”فَأَىُّ يَوْمٍ هَذَا‏”‏ ‏.‏ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ – قَالَ – فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ ‏.‏ قَالَ ‏”‏أَلَيْسَ يَوْمَ النَّحْرِ‏”‏ ‏.‏ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ – قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ – وَأَعْرَاضَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ فَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ فَلاَ تَرْجِعُنَّ بَعْدِي كُفَّارًا – أَوْ ضُلاَّلاً – يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَلَعَلَّ بَعْضَ مَنْ يُبَلَّغُهُ يَكُونُ أَوْعَى لَهُ مِنْ بَعْضِ مَنْ سَمِعَهُ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏”أَلاَ هَلْ بَلَّغْتُ‏”‏


قَالَ ابْنُ حَبِيبٍ فِي رِوَايَتِهِ ‏”وَرَجَبُ مُضَرَ‏”‏ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ ‏”فَلاَ تَرْجِعُوا بَعْدِي‏”‏ ‏

நபி (ஸல்), “வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையேயுள்ள “முளர் குலத்தாரின் ரஜப் மாதமாகும்” என்று சொன்னார்கள்.

பிறகு, “இது எந்த மாதம்?” என்று கேட் டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது துல்ஹஜ் இல்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்” என்றோம்.

பிறகு “இது எந்த நகரம்?“ என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று கூறினோம். அப்போதும் அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது அல்பல்தா (மக்காவின் பெயர்களில் ஒன்று) அல்லவா?” என்று கேட்க, நாங்கள் “ஆம்” என்றோம். மேலும் “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்றோம். இந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (பலியிடும்) நாளல்லவா?” என்று கேட்க, நாங்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றோம்.

பிறகு “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய நாள் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் (ஒருவரின்) உயிரும், உடைமைகளும் மானமும் (இன்னொருவருக்குப்) புனிதமானவையாகும். (அவற்றுக்கு ஊறு விளைவிப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை) நீங்கள் மறுமையில் உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்துகொள்ளுங்கள்! எனக்குப் பின், ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் அல்லது வழிகெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட நன்கு (புரிந்து) பாதுகாப்பவராக  இருக்கலாம்” என்று கூறினார்கள். பிறகு “நான் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா (ரலி)


குறிப்பு :

நபி (ஸல்) தம் தோழர்களிடம் வினவும் வினாக்களுக்கு, விடை தெரிந்திருந்தாலும் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்” என்று கூறும் வழக்கம், நபித் தோழர்களிடம் இருந்தது.

“இந்த ஹதீஸில் இடம்பெற்ற ‘மானமும்’ எனும் சொல்லை நபி (ஸல்) சேர்த்துச் சொன்னார்கள் என்று நினைக்கின்றேன்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான முஹம்மது (ரஹ்) ஐயத்துடன் குறிப்பிடுகின்றார்.