அத்தியாயம்: 3, பாடம்: 13, ஹதீஸ் எண்: 500

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏صَفِيَّةَ ‏ ‏تُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏
‏أَنَّ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏سَأَلَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ غُسْلِ الْمَحِيضِ فَقَالَ ‏ ‏تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا ‏ ‏وَسِدْرَتَهَا ‏ ‏فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ ‏ ‏شُؤُونَ ‏ ‏رَأْسِهَا ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ ثُمَّ تَأْخُذُ ‏ ‏فِرْصَةً ‏ ‏مُمَسَّكَةً ‏ ‏فَتَطَهَّرُ بِهَا فَقَالَتْ ‏ ‏أَسْمَاءُ ‏ ‏وَكَيْفَ ‏ ‏تَطَهَّرُ بِهَا فَقَالَ سُبْحَانَ اللَّهِ ‏ ‏تَطَهَّرِينَ بِهَا فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ ‏ ‏تَتَبَّعِينَ أَثَرَ الدَّمِ وَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْجَنَابَةِ فَقَالَ تَأْخُذُ مَاءً ‏ ‏فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ ‏ ‏أَوْ تُبْلِغُ الطُّهُورَ ‏ ‏ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ ‏ ‏شُؤُونَ ‏ ‏رَأْسِهَا ثُمَّ ‏ ‏تُفِيضُ ‏ ‏عَلَيْهَا الْمَاءَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏نِعْمَ النِّسَاءُ نِسَاءُ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَقَالَ قَالَ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي بِهَا وَاسْتَتَرَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ ‏ ‏عَنْ ‏ ‏صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏دَخَلَتْ ‏ ‏أَسْمَاءُ بِنْتُ شَكَلٍ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَغْتَسِلُ إِحْدَانَا إِذَا طَهُرَتْ مِنْ الْحَيْضِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ فِيهِ غُسْلَ الْجَنَابَةِ ‏

அஸ்மா பின்த் ஷகல் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க்காகக்) குளிப்பதற்கு, சுத்தமான தண்ணீரையும் நன்கு சுத்தம் செய்யப் பட்ட இலந்தை இலைகளையும் (தண்ணீரில் போட்டுப்) பயன் படுத்திக் கொள்க! தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து, தலைமுடி நனையும்வரைக் கழுவட்டும்; பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சு கொண்டு சுத்தம் செய்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

“அதைக் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது?” என்று அஸ்மா (ரலி) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஸுப்ஹானல்லாஹ்! அதைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளட்டும்” என்று (மீண்டும்) சொன்னார்கள்.

உடனே நான், “(மாதவிடாய்) குருதி படிந்த அடையாளத்தில் தடவிக்கொள்” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.

மேலும், அஸ்மா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றியும் கேட்டார். அதற்கு அவர்கள், “தண்ணீர் எடுத்து இயன்றவரை/நன்கு சுத்தம் செய்து கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றித் தலைமுடி நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (உடம்பின்) மீது தண்ணீர் ஊற்று!” என்றார்கள்.

பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

குறிப்பு:

அப்துல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸுப்ஹானல்லாஹ்! அதைக் கொண்டு துப்புரவு செய்து கொள்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தை (வெட்கப்பட்டு) மறைத்துக் கொண்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அபுல் அஹ்வஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அஸ்மா பின்த் ஷகல் எனும் பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் நின்று விட்டால் அவர் குளிப்பது எவ்வாறு? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறு பதிலளித்தார்கள். அதில் பெருந்துடக்கிற்கான குளியல் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 3, பாடம்: 13, ஹதீஸ் எண்: 499

حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورِ بْنِ صَفِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏سَأَلَتْ ‏ ‏امْرَأَةٌ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ تَغْتَسِلُ مِنْ حَيْضَتِهَا قَالَ فَذَكَرَتْ أَنَّهُ عَلَّمَهَا كَيْفَ تَغْتَسِلُ ثُمَّ تَأْخُذُ ‏ ‏فِرْصَةً ‏ ‏مِنْ مِسْكٍ ‏ ‏فَتَطَهَّرُ بِهَا قَالَتْ كَيْفَ أَتَطَهَّرُ بِهَا قَالَ ‏ ‏تَطَهَّرِي بِهَا سُبْحَانَ اللَّهِ وَاسْتَتَرَ ‏ ‏وَأَشَارَ لَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏بِيَدِهِ عَلَى وَجْهِهِ قَالَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏وَاجْتَذَبْتُهَا إِلَيَّ وَعَرَفْتُ مَا أَرَادَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ ‏
‏و قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏فِي رِوَايَتِهِ فَقُلْتُ تَتَبَّعِي بِهَا آثَارَ الدَّمِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ امْرَأَةً سَأَلَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ أَغْتَسِلُ عِنْدَ الطُّهْرِ فَقَالَ خُذِي ‏ ‏فِرْصَةً ‏ ‏مُمَسَّكَةً ‏ ‏فَتَوَضَّئِي بِهَا ثُمَّ ‏ ‏ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாயி(முடிவி)ன்போது எவ்வாறு குளிக்க வேண்டும் என்று ஒரு பெண்மணி கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையை விளக்கினார்கள். “பிறகு கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சால் தூய்மைப் படுத்திக் கொள்” என்று சொன்னார்கள்.

அந்தப் பெண்மணி, “அதை வைத்து நான் எப்படித் தூய்மைப் படுத்திக் கொள்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (வெட்கத்துடன்) முகத்தை மூடிக் கொண்டு, “ஸுப்ஹானல்லாஹ்! அதனால் தூய்மைப் படுத்திக்கொள்” என்று மீண்டும் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொல்ல விரும்புவதை(யும் அவர்களது வெட்க உணர்வையும்) புரிந்து கொண்ட நான், அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து, “இரத்தம் படிந்த இடத்தை அந்தப் பஞ்சினால் துடைத்துக் கொள்!” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).

குறிப்பு:

“நபி (ஸல்) அவர்கள் (தமது முகத்தை) மூடிக் கொண்டார்கள்” என்பதை அறிவிக்கும்போது அறிவிப்பாளர் ஸுப்யான் பின் உயைனா (ரஹ்) தமது முகத்தின் மீது கையை வைத்து மூடிக் காட்டினார்.

ஆயிஷா (ரலி) வழியாகத் தம் தாயார் மூலமாக அறிவிக்கும் மன்ஸூர் (ரஹ்) அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, (மாதவிடாயிலிருந்து) துப்புரவு செய்து கொள்ளும் போது எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சைப் பயன் படுத்தித் துப்புரவு செய்து கொள்வாயாக! என்று சொன்னார்கள்” என்றும் பிற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

இப்னு அபீ உமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “இரத்தம் படிந்த இடங்களை” என்று பன்மையில் ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.