அத்தியாயம்: 3, பாடம்: 33, ஹதீஸ் எண்: 567

حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏
‏أُقِيمَتْ صَلَاةُ الْعِشَاءِ فَقَالَ رَجُلٌ لِي حَاجَةٌ فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُنَاجِيهِ ‏ ‏حَتَّى نَامَ الْقَوْمُ أَوْ بَعْضُ الْقَوْمِ ثُمَّ صَلَّوْا ‏

(ஒரு நாள்) இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு மனிதர் (நபி அவர்களிடம்) “எனக்கு(த் தங்களிடம்) ஓர் அலுவல் (குறித்துப் பேச வேண்டியது) இருக்கிறது” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து அவரிடம் (நீண்ட நேரம்) தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அனைவரும்/மக்களில் சிலர் (உட்கார்ந்த நிலையிலேயே) உறங்கி விட்டனர். பிறகு (மீண்டும் உளூச் செய்யாமலேயே) தொழுதனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 33, ஹதீஸ் எண்: 566

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُا ‏
‏كَانَ ‏ ‏أَصْحَابُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنَامُونَ ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ قَالَ قُلْتُ سَمِعْتَهُ مِنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ إِي وَاللَّهِ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (உட்கார்ந்து கொண்டே) உறங்கி விட்டு (பிறகு எழுந்து) தொழுவார்கள். (அதற்குப் புதிதாக) உளூச் செய்யமாட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான், “இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு கத்தாதா(ரஹ்) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்) வழியாக ஷுஃபா (ரஹ்).

அத்தியாயம்: 3, பாடம்: 33, ஹதீஸ் எண்: 565

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏أُقِيمَتْ الصَّلَاةُ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُنَاجِي رَجُلًا فَلَمْ يَزَلْ ‏ ‏يُنَاجِيهِ ‏ ‏حَتَّى نَامَ أَصْحَابُهُ ثُمَّ جَاءَ فَصَلَّى بِهِمْ ‏

(ஒருநாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. ஆனால், நபி(ஸல்) அவர்களோ ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (நீண்ட நேரம்) பேசிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் (உட்கார்ந்து கொண்டே) தூங்கி விட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்து தோழர்களுக்குத் தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 564

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏أُقِيمَتْ الصَّلَاةُ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَجِيٌّ ‏ ‏لِرَجُلٍ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏وَنَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏يُنَاجِي ‏ ‏الرَّجُلَ فَمَا قَامَ إِلَى الصَّلَاةِ حَتَّى نَامَ الْقَوْمُ ‏

(ஒருநாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. (ஆனால்,) மக்கள் (உட்கார்ந்து கொண்டே) தூங்கி விடும் வரைக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் (நீண்ட நேரம்) தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் தொழுகைக்கு (வந்து) நின்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)