அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 467

و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مِسْكِينٌ يَعْنِي ابْنَ بُكَيْرٍ الْحَذَّاءَ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَطُوفُ عَلَى نِسَائِهِ بِغُسْلٍ وَاحِدٍ ‏

நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் (உடலுறவு கொள்ளச்) சென்றால் ஒருமுறை குளிக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 466

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ ‏
‏زَادَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فِي حَدِيثِهِ بَيْنَهُمَا وُضُوءًا وَقَالَ ثُمَّ أَرَادَ أَنْ يُعَاوِدَ ‏

“உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டுப் பின்னர் மீண்டும் (உறவு கொள்ள) விரும்பினால் அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி).

குறிப்பு:

அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவ்விரு தடவைகளுக்கும் இடையில் அவர் ஒருமுறை உளூச் செய்து கொள்ளட்டும்” என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 465

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏
‏عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ الْحَدِيثَ قُلْتُ كَيْفَ كَانَ يَصْنَعُ فِي الْجَنَابَةِ أَكَانَ يَغْتَسِلُ قَبْلَ أَنْ يَنَامَ أَمْ يَنَامُ قَبْلَ أَنْ يَغْتَسِلَ قَالَتْ كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ ‏ ‏رُبَّمَا اغْتَسَلَ فَنَامَ وَرُبَّمَا تَوَضَّأَ فَنَامَ قُلْتُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً ‏
‏و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

நான் (அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “பெருந்துடக்கான நிலையில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா? குளித்து விட்டு உறங்குவார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இரண்டு முறைகளையும் கையாண்டு வந்தார்கள். சில நேரங்களில் குளித்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். சில நேரங்களில் (குளிக்காமல்) அங்கத் தூய்மை (உளூ) செய்து விட்டு உறங்கினார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “(மார்க்க) நடைமுறைகளில் தாராள நெகிழ்வை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்).

குறிப்பு:

“நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வித்ருத் தொழுகையைப் பற்றிக் கேட்டேன். அன்னை ஆயிஷா (ரலி) அது தொடர்பான ஹதீஸையும் அறிவித்து விட்டு, தொடர்ந்த எனது கேள்விகளுக்கு மேற்கண்டவாறு விளக்கமும் கூறினார்கள்” என்று அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) தமக்கு அறிவித்ததாக முஆவியா பின் ஸாலிஹ் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 464

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏
‏ذَكَرَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ تُصِيبُهُ جَنَابَةٌ مِنْ اللَّيْلِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ ‏

(என் தந்தை) உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு விடுவது பற்றிக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளுங்கள்; ஆணுறுப்பைக் கழுவிக் கொண்டு, பின்னர் உறங்குங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 463

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏
‏أَنَّ ‏ ‏عُمَرَ ‏ ‏اسْتَفْتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏هَلْ يَنَامُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ قَالَ نَعَمْ لِيَتَوَضَّأْ ثُمَّ لِيَنَمْ حَتَّى يَغْتَسِلَ إِذَا شَاءَ ‏

“எங்களில் ஒருவர் பெருந்துடக்காளி ஆகி (குளிக்காமல்) உறங்கலாமா?” என்று (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து விட்டுப் பின்னர் உறங்கட்டும். விரும்பும்போது குளித்துக் கொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

குறிப்பு:

பெருந்துடக்காளி, தொழுகைக்கு முன்னர் குளித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். “விரும்பும்போது குளித்துக் கொள்ளட்டும்” என்ற அனுமதி, உடலுறவு முடிந்த அல்லது உறக்கத்தில் விந்து வெளியேறிய உடனடியாகக் குளித்தாக வேண்டியது கட்டாயமில்லை என்பதை உள்ளடக்கியதாகும்.

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 462

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏
‏أَنَّ ‏ ‏عُمَرَ ‏ ‏قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ قَالَ ‏ ‏نَعَمْ إِذَا تَوَضَّأَ ‏

“அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் பெருந்துடக்காளி ஆகி (குளிக்காமல்) உறங்கலாமா?” என்று (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து கொண்ட பின்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 461

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏وَغُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏كَانَ جُنُبًا فَأَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ‏
‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏يُحَدِّثُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்காளியான நிலையில் உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் (அதற்குமுன்) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்து கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 460

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ قَبْلَ أَنْ يَنَامَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்காளியாகிய நிலையில் உறங்க விரும்பினால் அதற்குமுன் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்து கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).