அத்தியாயம்: 33, பாடம்: 52, ஹதீஸ் எண்: 3540

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ الْحَارِثِ بْنِ يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شَمَاسَةَ، أَنَّ فُقَيْمًا اللَّخْمِيَّ :‏

قَالَ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ تَخْتَلِفُ بَيْنَ هَذَيْنِ الْغَرَضَيْنِ وَأَنْتَ كَبِيرٌ يَشُقُّ عَلَيْكَ ‏.‏ قَالَ عُقْبَةُ لَوْلاَ كَلاَمٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ أُعَانِهِ ‏.‏ قَالَ الْحَارِثُ فَقُلْتُ لاِبْنِ شُمَاسَةَ وَمَا ذَاكَ قَالَ إِنَّهُ قَالَ ‏ “‏ مَنْ عَلِمَ الرَّمْىَ ثُمَّ تَرَكَهُ فَلَيْسَ مِنَّا أَوْ قَدْ عَصَى ‏”‏

ஃபுகைம் அல்லக்மீ என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் “(முதியவரான) நீங்கள் (அம்பெய்வதற்காக) இவ்விரு இலக்குகளுக்கிடையே உங்களைச் சிரமப்படுத்திக்கொள்கின்றீர்களே!” என்று கேட்டார். அதற்கு உக்பா பின் ஆமிர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (அந்த) ஒரு செய்தியை நான் செவியுற்றிராவிட்டால் இதற்காக நான் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் ஷுமாஸா (ரஹ்)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் பின் யஅகூப் (ரஹ்) கூறுகின்றார்:

நான் அப்துர் ரஹ்மான் பின் ஷுமாஸா (ரஹ்) அவர்களிடம், “அது என்ன (செய்தி)?” என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுபவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்’ / (நமக்கு) மாறு செய்துவிட்டார்’ என்று கூறினார்கள்” என விடையளித்தார்கள்.

அத்தியாயம்: 33, பாடம்: 52, ஹதீஸ் எண்: 3539

وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عَلِيٍّ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ سَتُفْتَحُ عَلَيْكُمْ أَرَضُونَ وَيَكْفِيكُمُ اللَّهُ فَلاَ يَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَلْهُوَ بِأَسْهُمِهِ ‏”‏ ‏‏


وَحَدَّثَنَاهُ دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏

“விரைவில் பல நாடுகள் உங்களால் வெற்றிகொள்ளப்படும். அதற்கு இறைவனே உங்களுக்குப் போதுமானவன். எனவே, உங்களில் ஒருவர் தம் அம்பு (எய்யும் வீர) விளையாட்டை விட்டுவிட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 52, ஹதீஸ் எண்: 3538

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عَلِيٍّ ثُمَامَةَ بْنِ شُفَىٍّ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ ‏ “‏ وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, “நீங்கள் அவர்களுக்கெதிராக உங்களால் இயன்ற அளவுக்கு வலிமையைப் பெருக்கி ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்” எனும் (8:60) இறைவசனத்தை ஓதிவிட்டு, “அறிந்து கொள்க! வலிமை என்பது அம்பெய்வதாகும்; அறிக! வலிமை என்பது அம்பெய்வதாகும்; அறிக! வலிமை என்பது அம்பெய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)