حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :
عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ” غَطُّوا الإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْبَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَحُلُّ سِقَاءً وَلاَ يَفْتَحُ بَابًا وَلاَ يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلاَّ أَنْ يَعْرُضَ عَلَى إِنَائِهِ عُودًا وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ ”
وَلَمْ يَذْكُرْ قُتَيْبَةُ فِي حَدِيثِهِ ” وَأَغْلِقُوا الْبَابَ ”
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ غَيْرَ أَنَّهُ قَالَ “ وَاكْفِئُوا الإِنَاءَ أَوْ خَمِّرُوا الإِنَاءَ ” . وَلَمْ يَذْكُرْ تَعْرِيضَ الْعُودِ عَلَى الإِنَاءِ .
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” أَغْلِقُوا الْبَابَ ” . فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ غَيْرَ أَنَّهُ قَالَ ” وَخَمِّرُوا الآنِيَةَ ” . وَقَالَ ” تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ ثِيَابَهُمْ ” .
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِهِمْ وَقَالَ “ وَالْفُوَيْسِقَةُ تُضْرِمُ الْبَيْتَ عَلَى أَهْلِهِ ”
“பாத்திரங்களை (உறங்குமுன்) மூடிவையுங்கள்; தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டுவிடுங்கள்; விளக்கை அணைத்துவிடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை.
உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலியானது (விளக்கின் திரியை இழுத்துப் போட்டு) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
குறிப்புகள் :
குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “கதவைத் தாழிட்டுவிடுங்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
யஹ்யா இப்னு யஹ்யா (ரஹ் வழி அறிவிப்பில், “பாத்திரத்தைக் கவிழ்த்து(க் கொட்டி)விடுங்கள்; அல்லது பாத்திரத்தை மூடிவையுங்கள்” என்று இடம்பெற்றுள்ளது. “பாத்திரத்தின் மீது குச்சியைக் குறுக்காக வைப்பது’ தொடர்பான குறிப்பு இல்லை.
அஹ்மது பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “கதவைத் தாழிட்டுவிடுங்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் “பாத்திரத்தை மூடிவையுங்கள்” என்றும், “வீட்டாரின் உடைகளை (எலி) எரித்துவிடும்” என்றும் இடம்பெற்றுள்ளது.
ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “எலி, வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்” என்று இடம்பெற்றுள்ளது.