அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3829

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ الْعَطَّارُ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍقَالَ :‏

نَزَلَ عَلَيْنَا أَضْيَافٌ لَنَا – قَالَ – وَكَانَ أَبِي يَتَحَدَّثُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ – قَالَ – فَانْطَلَقَ وَقَالَ يَا عَبْدَ الرَّحْمَنِ افْرُغْ مِنْ أَضْيَافِكَ ‏.‏ قَالَ فَلَمَّا أَمْسَيْتُ جِئْنَا بِقِرَاهُمْ – قَالَ – فَأَبَوْا فَقَالُوا حَتَّى يَجِيءَ أَبُو مَنْزِلِنَا فَيَطْعَمَ مَعَنَا – قَالَ – فَقُلْتُ لَهُمْ إِنَّهُ رَجُلٌ حَدِيدٌ وَإِنَّكُمْ إِنْ لَمْ تَفْعَلُوا خِفْتُ أَنْ يُصِيبَنِي مِنْهُ أَذًى – قَالَ – فَأَبَوْا فَلَمَّا جَاءَ لَمْ يَبْدَأْ بِشَىْءٍ أَوَّلَ مِنْهُمْ فَقَالَ أَفَرَغْتُمْ مِنْ أَضْيَافِكُمْ قَالَ قَالُوا لاَ وَاللَّهِ مَا فَرَغْنَا ‏.‏ قَالَ أَلَمْ آمُرْ عَبْدَ الرَّحْمَنِ قَالَ وَتَنَحَّيْتُ عَنْهُ فَقَالَ يَا عَبْدَ الرَّحْمَنِ ‏.‏ قَالَ فَتَنَحَّيْتُ – قَالَ – فَقَالَ يَا غُنْثَرُ أَقْسَمْتُ عَلَيْكَ إِنْ كُنْتَ تَسْمَعُ صَوْتِي إِلاَّ جِئْتَ – قَالَ – فَجِئْتُ فَقُلْتُ وَاللَّهِ مَا لِي ذَنْبٌ هَؤُلاَءِ أَضْيَافُكَ فَسَلْهُمْ قَدْ أَتَيْتُهُمْ بِقِرَاهُمْ فَأَبَوْا أَنْ يَطْعَمُوا حَتَّى تَجِيءَ – قَالَ – فَقَالَ مَا لَكُمْ أَلاَ تَقْبَلُوا عَنَّا قِرَاكُمْ – قَالَ – فَقَالَ أَبُو بَكْرٍ فَوَاللَّهِ لاَ أَطْعَمُهُ اللَّيْلَةَ – قَالَ – فَقَالُوا فَوَاللَّهِ لاَ نَطْعَمُهُ حَتَّى تَطْعَمَهُ ‏.‏ قَالَ فَمَا رَأَيْتُ كَالشَّرِّ كَاللَّيْلَةِ قَطُّ وَيْلَكُمْ مَا لَكُمْ أَنْ لاَ تَقْبَلُوا عَنَّا قِرَاكُمْ قَالَ ثُمَّ قَالَ أَمَّا الأُولَى فَمِنَ الشَّيْطَانِ هَلُمُّوا قِرَاكُمْ – قَالَ – فَجِيءَ بِالطَّعَامِ فَسَمَّى فَأَكَلَ وَأَكَلُوا – قَالَ – فَلَمَّا أَصْبَحَ غَدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ بَرُّوا وَحَنِثْتُ – قَالَ – فَأَخْبَرَهُ فَقَالَ ‏ “‏ بَلْ أَنْتَ أَبَرُّهُمْ وَأَخْيَرُهُمْ ‏”‏ ‏.‏ قَالَ وَلَمْ تَبْلُغْنِي كَفَّارَةٌ ‏.‏

எங்கள் (வீட்டுக்கு) விருந்தாளிகள் சிலர் வந்தனர். அந்த இரவில் என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பேசுவதற்காகச் சென்றுவிட்டார்கள். (அவர்கள் செல்வதற்கு முன் என்னிடம்,) “அப்துர் ரஹ்மானே! உன் விருந்தாளிகளை (இரவு உணவு கொடுத்து) கவனித்துக்கொள்!” என்று கூறினார்கள்.

மாலை நேரமானதும் நாங்கள் விருந்தாளிகளுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்தோம். ஆனால் அவர்கள், “குடும்பத் தலைவர் வந்து எங்களுடன் உண்ணாத வரை நாங்கள் உண்ண மாட்டோம்” என்று கூறி, மறுத்துவிட்டனர்.

அப்போது அவர்களிடம் நான், “அவர் (என் தந்தை) ஓர் இரும்பு மனிதர். நீங்கள் விருந்து உண்ணவில்லையானால், நான் அவரால் தண்டிக்கப்படுவேன் என அஞ்சுகின்றேன்” என்று சொன்னேன். அப்படியிருந்தும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

அபூபக்ரு (ரலி) வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக விருந்தாளிகளைப் பற்றியே “உங்கள் விருந்தாளிகளுக்கு உணவு கொடுத்துவிட்டீர்களா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். வீட்டார், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுக்கு இன்னும் நாங்கள் உணவு கொடுக்கவில்லை” என்று பதிலளித்தனர். அபூபக்ரு (ரலி), “நான் அப்துர் ரஹ்மானிடம் (அவர்களுக்கு உணவளிக்குமாறு) கட்டளையிடவில்லையா?” என்று கேட்டார்கள்.

உடனே நான் அங்கிருந்து நகர்ந்தேன். அப்போது அவர்கள், “அப்துர் ரஹ்மான்!“ என அழைத்தார்கள். நான் ஒளிந்துகொண்டேன். அவர்கள் “தடியா! உன்மீது அறுதியிட்டுச் சொல்கிறேன். என் குரல் உன் காதில் விழுந்தால் இங்கு வந்துவிடு” என்று கூறினார்கள். நான் வந்து, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்மீது எந்தக் குற்றமும் இல்லை. இதோ! உங்கள் விருந்தாளிகளிடமே கேட்டுப் பாருங்கள். நான் அவர்களிடம் உணவைக் கொண்டுவந்து வைத்தேன். நீங்கள் வரும்வரை நாங்கள் உண்ணமாட்டோம் என அவர்கள்தாம் மறுத்துவிட்டனர்” என்று சொன்னேன்.

அபூபக்ரு (ரலி), “எங்கள் விருந்தை ஏற்காமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது?” என்று கேட்டார்கள். மேலும் அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றிரவு இதை நான் உண்ணமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்கு விருந்தாளிகளும், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உண்ணாத வரை நாங்களும் இதை உண்ணமாட்டோம்” என்று கூறினர்.

அபூபக்ரு (ரலி), “இன்றிரவைப் போன்று நற்பேரற்ற ஓர் இரவை நான் ஒரு போதும் அடைந்ததில்லை” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு என்ன கேடு! உங்கள் விருந்தை எங்களிடமிருந்து ஏன் நீங்கள் மறுக்கின்றீர்கள்?” என்று கூறிவிட்டு, “(நான் உண்ணமாட்டேன் எனச் சத்தியம் செய்த) எனது முந்தைய நிலைப்பாடு ஷைத்தானால் விளைந்ததாகும்” என்றார்கள். பிறகு “உங்கள் உணவைக் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். உணவு கொண்டுவரப்பட்டதும் அல்லாஹ்வின் பெயர் சொல்லி உண்டார்கள். விருந்தினரும் உண்டனர்.

காலையில் நபி (ஸல்) அவர்களிடம் அபூபக்ரு (ரலி) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் (தமது சத்தியத்தில்) உறுதியாக இருந்தனர். நான்தான் சத்தியத்தை முறித்து விட்டேன்” என்று கூறி நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்), “இல்லை. அவர்களில் நீரே நன்மை புரிந்தவர். அவர்களில் நீரே சிறந்தவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி)


குறிப்பு :

“அபூபக்ரு (ரலி), சத்திய முறிவுக்குப் பரிகாரம் செய்தார்களா என்பது பற்றிய தகவல் எனக்குக் கிடைக்கவில்லை” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸயீத் பின் இயாஸ் அல் ஜுரைரீ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3828

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، الْقَيْسِيُّ كُلُّهُمْ عَنِ الْمُعْتَمِرِ، – وَاللَّفْظُ لاِبْنِ مُعَاذٍ – حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ قَالَ أَبِي حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، أَنَّهُ حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ :‏

أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ، كَانُوا نَاسًا فُقَرَاءَ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَرَّةً ‏ “‏ مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَلاَثَةٍ وَمَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ أَرْبَعَةٍ فَلْيَذْهَبْ بِخَامِسٍ بِسَادِسٍ ‏”‏ ‏.‏ أَوْ كَمَا قَالَ ‏.‏ وَإِنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلاَثَةٍ وَانْطَلَقَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِعَشَرَةٍ وَأَبُو بَكْرٍ بِثَلاَثَةٍ – قَالَ – فَهُوَ وَأَنَا وَأَبِي وَأُمِّي – وَلاَ أَدْرِي هَلْ قَالَ وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَ بَيْتِنَا وَبَيْتِ أَبِي بَكْرٍ – قَالَ وَإِنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ ثُمَّ لَبِثَ حَتَّى صُلِّيَتِ الْعِشَاءُ ثُمَّ رَجَعَ فَلَبِثَ حَتَّى نَعَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ قَالَتْ لَهُ امْرَأَتُهُ مَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ – أَوْ قَالَتْ – ضَيْفِكَ قَالَ أَوَمَا عَشَّيْتِهِمْ قَالَتْ أَبَوْا حَتَّى تَجِيءَ قَدْ عَرَضُوا عَلَيْهِمْ فَغَلَبُوهُمْ – قَالَ – فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ وَقَالَ يَا غُنْثَرُ ‏.‏ فَجَدَّعَ وَسَبَّ وَقَالَ كُلُوا لاَ هَنِيئًا ‏.‏ وَقَالَ وَاللَّهِ لاَ أَطْعَمُهُ أَبَدًا – قَالَ – فَايْمُ اللَّهِ مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلاَّ رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا – قَالَ – حَتَّى شَبِعْنَا وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ فَنَظَرَ إِلَيْهَا أَبُو بَكْرٍ فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثَرُ ‏.‏ قَالَ لاِمْرَأَتِهِ يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا قَالَتْ لاَ وَقُرَّةِ عَيْنِي لَهِيَ الآنَ أَكْثَرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثَلاَثِ مِرَارٍ – قَالَ – فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ وَقَالَ إِنَّمَا كَانَ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ – يَعْنِي يَمِينَهُ – ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً ثُمَّ حَمَلَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَصْبَحَتْ عِنْدَهُ – قَالَ – وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ فَمَضَى الأَجَلُ فَعَرَّفْنَا اثْنَا عَشَرَ رَجُلاً مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ إِلاَّ أَنَّهُ بَعَثَ مَعَهُمْ فَأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ ‏‏ أَوْ كَمَا قَالَ ‏.‏

திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்), “யாரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ அவர், மூன்றாம(வராகத் தோழர்களில் ஒரு)வரை அழைத்துச் செல்லட்டும். யாரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கிறதோ அவர் ஐந்தாவது அல்லது ஆறாவது பேரை அழைத்துச் செல்லட்டும்” என்று அல்லது அதைப் போலக் கூறினார்கள்.

(என் தந்தை) அபூபக்ரு (ரலி) மூன்று பேரை அழைத்துவந்தார்கள். நபி (ஸல்) பத்துப் பேருடன் (தம் வீட்டுக்குச்) சென்றார்கள். அபூபக்ரு (ரலி) மூன்று பேருடன் வந்தபோது, வீட்டில் நானும் என் தந்தையும் என் தாயார் (உம்முரூமான்) அவர்களும்தாம் இருந்தோம்(*).

அபூபக்ரு (ரலி) (விருந்தினருக்கு உணவளிக்குமாறு என்னிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு உண்டார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷாத் தொழுகை தொழும்வரை (அவர்களுடன்) தங்கினார்கள். நபி (ஸல்) உறங்கச் செல்லும்வரை அவர்களுடன் இருந்துவிட்டு, இரவில் அல்லாஹ் நாடிய நேரம் கழிந்த பின்னர் வீட்டுக்குத் திரும்பிவந்தார்கள்.

அப்போது அவர்களுடைய துணைவியான என் தாயார், “உங்கள் விருந்தாளிகளை / உங்கள் விருந்தாளியை உபசரிக்க நீங்கள் வராமல் தாமாதமானதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார். அபூபக்ரு (ரலி), “அவர்களுக்கு நீ இரவு உணவு அளிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்குத் துணைவியார், “நீங்கள் வராமல் உண்ண முடியாதென அவர்கள் மறுத்து விட்டனர். நாங்கள் (உண்ணும்படி) கேட்டுக் கொண்டபோதும் (அவர்கள் உடன்படாமல்) எங்களை மிகைத்துவிட்டனர்” என்று பதிலளித்தார்.

நான் சென்று ஒளிந்துகொண்டேன். அவர்கள், “தடியா!“ என்று (கோபத்துடன்) அழைத்து, “உன் மூக்கறுந்து போக!” என்று (என்னை) ஏசினார்கள்.

(விருந்தாளிகளை நோக்கி) “சூழல் மகிழும்படி இல்லை; நீங்கள் உண்ணுங்கள்!” என்று கூறினார்கள். (தம் வீட்டாரை நோக்கி, “என்னை எதிர்பார்த்துத்தானே விருந்தாளிகளுக்குச் சிரமம் கொடுத்து விட்டீர்கள்!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவள உணவை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகியது. இறுதியில் நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அந்த உணவு முன்பிருந்ததைவிடக் கூடுதலாகிவிட்டிருந்தது. அது முன்பிருந்த அளவிலோ, அல்லது அதைவிடக் கூடுதலாகவோ மாறியிருப்பதைக் கண்ட அபூபக்ரு (ரலி) தம் துணைவியாரிடம், “பனூ ஃபிராஸ் குலமகளே! என்ன இது?” என்று (வியப்புடன்) கேட்க, என் தாயார், “என் கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது!” என்று சொன்னார்.

பிறகு அபூபக்ரு (ரலி) (தமது வீண் சத்தியத்தை முறித்துவிட்டு) அதிலிருந்து உண்டார்கள். மேலும், “அது (நான் சத்தியம் செய்தது) ஷைத்தானால் ஏற்பட்டடதே” என்று கூறிவிட்டு, பிறகு அதிலிருந்து மேலும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள்.

பிறகு அந்த உணவு நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று. (அப்போது) எங்களுக்கும் ஒரு கூட்டத்தாருக்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஒப்பந்தக் காலம் முடிவுக்கும் வந்தது. (இனி அவர்கள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்கொள்வதற்காக) நபி (ஸல்) எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி ஒவ்வொருவருடனும் சில வீரர்களை ஒப்படைத்தார்கள்.

ஒவ்வொரு தளபதியுடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். எனினும், அப்படையினருக்கு அந்த உணவைக் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் அதிலிருந்து உண்டனர்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி)


குறிப்பு :

(*) “என் மனைவியும் எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூபக்ரு (ரலி) அவர்களின் வீட்டிற்கும் சேர்ந்து பணிபுரிந்துவந்த பணிப் பெண்ணும் வீட்டிலிருந்தனர் …” என அப்துர்ரஹ்மான் (ரலி) குறிப்பிட்டார்களா என எனக்கு நினைவில்லை என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3827

وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى جَمِيعًا عَنِ الْمُعْتَمِرِ بْنِ سُلَيْمَانَ، – وَاللَّفْظُ لاِبْنِ مُعَاذٍ – حَدَّثَنَا الْمُعْتَمِرُ، حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِي عُثْمَانَ، – وَحَدَّثَ أَيْضًا، – عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ قَالَ :‏

كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَمِائَةً فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ ‏”‏ ‏.‏ فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ فَعُجِنَ ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ أَبَيْعٌ أَمْ عَطِيَّةٌ – أَوْ قَالَ – أَمْ هِبَةٌ ‏”‏ ‏.‏ فَقَالَ لاَ بَلْ بَيْعٌ ‏.‏ فَاشْتَرَى مِنْهُ شَاةً فَصُنِعَتْ وَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِسَوَادِ الْبَطْنِ أَنْ يُشْوَى ‏.‏ قَالَ وَايْمُ اللَّهِ مَا مِنَ الثَّلاَثِينَ وَمِائَةٍ إِلاَّ حَزَّ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حُزَّةً حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهُ وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَ لَهُ – قَالَ  – وَجَعَلَ قَصْعَتَيْنِ فَأَكَلْنَا مِنْهُمَا أَجْمَعُونَ وَشَبِعْنَا وَفَضَلَ فِي الْقَصْعَتَيْنِ فَحَمَلْتُهُ عَلَى الْبَعِيرِ ‏‏ أَوْ كَمَا قَالَ.‏

நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்), “உங்களில் யாரிடமாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அப்போது ஒருவரிடம் ஒரு ‘ஸாஉ’ அல்லது கிட்டத்தட்ட அந்த அளவு உணவு(க்கு வேண்டிய மாவு) இருந்தது. அது தண்ணீர் விட்டுக் குழைக்கப்பட்டது.

பரட்டைத் தலையுடைய உயரமான இணைவைப்பாளர் ஒருவர் (சற்று நேரத்திற்குப்) பின் ஆடுகளை ஓட்டியபடி வந்தார். அவரிடம் நபி (ஸல்), “(இவை) விற்பனைக்கா? அன்பளிக்கவா?” என்று கேட்டார்கள். அவர், “விற்பனைக்குத்தான்” என்றார்.

அவரிடமிருந்து நபி (ஸல்) ஓர் ஆட்டை விலைக்கு வாங்கினார்கள். அது அறு(த்துச் சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொரிக்கும்படி நபி (ஸல்) உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்று முப்பது பேரில் ஒருவர் விடாமல் ஆளுக்கொரு துண்டை நபி (ஸல்) வெட்டித் தந்தார்கள். அங்கிருந்தவருக்கு (அப்போதே) கொடுத்தது போக, அங்கில்லாதவருக்காகவும் எடுத்து வைத்(துப் பிறகு கொடுத்)தார்கள்.

பிறகு இரு அகன்ற தட்டுக(ளில் அந்த இறைச்சி)களை வைத்தார்கள். அவற்றிலிருந்து நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அப்படியிருந்தும் அவ்விரு தட்டுகளிலும் மீதி இருந்தது. எனவே, அதை / அவ்விரு தட்டுகளையும் நான் ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3826

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْمِقْدَادِ قَالَ :‏

أَقْبَلْتُ أَنَا وَصَاحِبَانِ لِي وَقَدْ ذَهَبَتْ أَسْمَاعُنَا وَأَبْصَارُنَا مِنَ الْجَهْدِ فَجَعَلْنَا نَعْرِضُ أَنْفُسَنَا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَيْسَ أَحَدٌ مِنْهُمْ يَقْبَلُنَا فَأَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَانْطَلَقَ بِنَا إِلَى أَهْلِهِ فَإِذَا ثَلاَثَةُ أَعْنُزٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ احْتَلِبُوا هَذَا اللَّبَنَ بَيْنَنَا ‏”‏ ‏.‏ قَالَ فَكُنَّا نَحْتَلِبُ فَيَشْرَبُ كُلُّ إِنْسَانٍ مِنَّا نَصِيبَهُ وَنَرْفَعُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَصِيبَهُ – قَالَ – فَيَجِيءُ مِنَ اللَّيْلِ فَيُسَلِّمُ تَسْلِيمًا لاَ يُوقِظُ نَائِمًا وَيُسْمِعُ الْيَقْظَانَ – قَالَ  – ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ فَيُصَلِّي ثُمَّ يَأْتِي شَرَابَهُ فَيَشْرَبُ فَأَتَانِي الشَّيْطَانُ ذَاتَ لَيْلَةٍ وَقَدْ شَرِبْتُ نَصِيبِي فَقَالَ مُحَمَّدٌ يَأْتِي الأَنْصَارَ فَيُتْحِفُونَهُ وَيُصِيبُ عِنْدَهُمْ مَا بِهِ حَاجَةٌ إِلَى هَذِهِ الْجُرْعَةِ فَأَتَيْتُهَا فَشَرِبْتُهَا فَلَمَّا أَنْ وَغَلَتْ فِي بَطْنِي وَعَلِمْتُ أَنَّهُ لَيْسَ إِلَيْهَا سَبِيلٌ – قَالَ – نَدَّمَنِي الشَّيْطَانُ فَقَالَ وَيْحَكَ مَا صَنَعْتَ أَشَرِبْتَ شَرَابَ مُحَمَّدٍ فَيَجِيءُ فَلاَ يَجِدُهُ فَيَدْعُو عَلَيْكَ فَتَهْلِكُ فَتَذْهَبُ دُنْيَاكَ وَآخِرَتُكَ ‏.‏ وَعَلَىَّ شَمْلَةٌ إِذَا وَضَعْتُهَا عَلَى قَدَمَىَّ خَرَجَ رَأْسِي وَإِذَا وَضَعْتُهَا عَلَى رَأْسِي خَرَجَ قَدَمَاىَ وَجَعَلَ لاَ يَجِيئُنِي النَّوْمُ وَأَمَّا صَاحِبَاىَ فَنَامَا وَلَمْ يَصْنَعَا مَا صَنَعْتُ – قَالَ – فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَسَلَّمَ كَمَا كَانَ يُسَلِّمُ ثُمَّ أَتَى الْمَسْجِدَ فَصَلَّى ثُمَّ أَتَى شَرَابَهُ فَكَشَفَ عَنْهُ فَلَمْ يَجِدْ فِيهِ شَيْئًا فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقُلْتُ الآنَ يَدْعُو عَلَىَّ فَأَهْلِكُ ‏.‏ فَقَالَ ‏”‏ اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي وَأَسْقِ مَنْ أَسْقَانِي ‏”‏ ‏.‏ قَالَ فَعَمَدْتُ إِلَى الشَّمْلَةِ فَشَدَدْتُهَا عَلَىَّ وَأَخَذْتُ الشَّفْرَةَ فَانْطَلَقْتُ إِلَى الأَعْنُزِ أَيُّهَا أَسْمَنُ فَأَذْبَحُهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هِيَ حَافِلَةٌ وَإِذَا هُنَّ حُفَّلٌ كُلُّهُنَّ فَعَمَدْتُ إِلَى إِنَاءٍ لآلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مَا كَانُوا يَطْمَعُونَ أَنْ يَحْتَلِبُوا فِيهِ – قَالَ – فَحَلَبْتُ فِيهِ حَتَّى عَلَتْهُ رَغْوَةٌ فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ أَشَرِبْتُمْ شَرَابَكُمُ اللَّيْلَةَ ‏”‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ اشْرَبْ ‏.‏ فَشَرِبَ ثُمَّ نَاوَلَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ اشْرَبْ ‏.‏ فَشَرِبَ ثُمَّ نَاوَلَنِي فَلَمَّا عَرَفْتُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ رَوِيَ وَأَصَبْتُ دَعْوَتَهُ ضَحِكْتُ حَتَّى أُلْقِيتُ إِلَى الأَرْضِ – قَالَ – فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ إِحْدَى سَوْآتِكَ يَا مِقْدَادُ ‏”‏ ‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَانَ مِنْ أَمْرِي كَذَا وَكَذَا وَفَعَلْتُ كَذَا ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ مَا هَذِهِ إِلاَّ رَحْمَةٌ مِنَ اللَّهِ أَفَلاَ كُنْتَ آذَنْتَنِي فَنُوقِظَ صَاحِبَيْنَا فَيُصِيبَانِ مِنْهَا ‏”‏ ‏.‏ قَالَ فَقُلْتُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُبَالِي إِذَا أَصَبْتَهَا وَأَصَبْتُهَا مَعَكَ مَنْ أَصَابَهَا مِنَ النَّاسِ


وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، بِهَذَا الإِسْنَادِ

நானும் என்னிரு நண்பர்களும் பசியால் காதும் கண்ணும் (அடைபட்டுப்) போய்விட்ட நிலையில் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுக்கு முன்னால் தலை காட்டினோம். (வறுமை சூழ்ந்திருந்த அந்த நிலையில்) அவர்களில் எவரும் எங்களை (விருந்தாளிகளாக) ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) எங்களைத் தம் வீட்டாரிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கு மூன்று பெட்டை வெள்ளாடுகள் இருந்தன. நபி (ஸல்), “இவற்றிலிருந்து பால் கறந்து நம்மிடையே பகிர்ந்துகொள்வோம்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பருகினோம். நபி (ஸல்) அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்காக எடுத்துவைத்தோம். நபி (ஸல்) இரவில் (எங்களிடம்) வந்து, உறங்கிக்கொண்டிருப்பவரை விழிக்கச் செய்யாமல், விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும் விதமாக (மெதுவாக) ஸலாம் சொல்வார்கள். பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவார்கள். பிறகு தமது பானத்தை நோக்கி வந்து (அதை) அருந்துவார்கள்.

இந்நிலையில், எனது பங்கை நான் அருந்திவிட்ட நிலையில் ஓர் இரவில் என்னிடம் ஷைத்தான் வந்து, “முஹம்மது, அன்ஸாரிகளிடம் செல்லும்போது அவர்களுக்கு அன்ஸாரிகள் அன்பளிப்புகள் வழங்குகின்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அதைப் பெற்றுக்கொள்கின்றார்கள். இந்த ஒரு மிடறு(ப் பால்) அவர்களுக்குத் தேவையே இருக்காது” என்று சொன்னான்.

எனவே, நான் அந்தப் பாலைப் பருகிவிட்டேன். என் வயிற்றுக்குள் பால் இறங்கியதும், (அருந்திய) அந்தப் பாலை(த் திருப்பி)க் கொடுக்க வழியில்லை என்பதை நான் உணர்ந்தேன். பிறகு ஷைத்தான் “உனக்குக் கேடு நேரட்டும்! என்ன காரியம் செய்தாய்! முஹம்மதுக்குரிய பாலைப் பருகிவிட்டாயே? அவர் (வீட்டுக்கு) வரும்போது, பால் இல்லாததைக் கண்டு உனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டால் நீ அழிந்துபோவாய்! உனது இம்மையும் மறுமையும் (பாழாகிப்) போய்விடுமே!” என்று என்னைச் சஞ்சலப்படுத்தினான்.

அப்போது என்மீது ஒரு சால்வை இருந்தது. அதை என் பாதங்கள்மீது போர்த்தினால் தலை வெளியே தெரியும். தலைமீது போர்த்தினால் என் பாதங்கள் வெளியே தெரியும். எனக்கு (அன்றிரவு குற்ற உணர்வால்) தூக்கமே வரவில்லை. என்னிரு தோழர்களோ (நிம்மதியாகத்) தூங்கிவிட்டனர். நான் செய்த தவறை அவர்களிருவரும் செய்யவில்லை.

பிறகு நபி (ஸல்) வந்து வழக்கம்போல் ஸலாம் சொன்னார்கள். பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பிறகு தமது பானத்தை நோக்கி வந்து, அதைத் திறந்தார்கள். அதில் எதுவும் இருக்கவில்லை. அப்போது வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். ‘இப்போது எனக்கெதிராக அவர்கள் பிரார்த்திப்பார்கள். நான் அழிந்துபோய்விடுவேன்‘ என்று நான் (மனத்துக்குள்ளே) கூறிக்கொண்டேன்.

ஆனால் அவர்கள், “இறைவா! எனக்கு உண்ண உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகப் பானம் புகட்டியவருக்கு நீ புகட்டுவாயாக!” (அல்லாஹும்ம அத்இம், மன் அத்அமனீ வஸ்கி, மன் ஸகானீ) என்று பிரார்த்தித்தார்கள்.

நான் சால்வையை எடுத்து இறுக்கமாக என்மீது கட்டிக்கொண்டு, கத்தியை எடுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குரிய அந்த வெள்ளாடுகளை நோக்கிச் சென்று, அவற்றில் கொழுத்த ஆடு எது என்பதைப் பார்த்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அறுக்கலாம் என நினைத்தேன். ஆனால், அவற்றின் பால்மடிகள் திரண்டு காணப்பட்டன. அவற்றில் ஒவ்வொன்றும் பால் சுரந்து காணப்பட்டன.

உடனே நான் முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் பால் கறப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு பாத்திரத்தை எடுத்துச் சென்று அதில் பால் கறந்தேன். அதில் நுரை ததும்பும் அளவுக்குக் கறந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன்.

அப்போது அவர்கள், “இன்றிரவு நீங்கள் உங்களுக்குரிய பானத்தைப் பருகினீர்களா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்” என்றேன். அவர்கள் பருகிவிட்டுப் பிறகு (மீதியை) என்னிடம் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! (இன்னும்) பருகுங்கள்” என்றேன். அவர்கள் பருகிவிட்டுப் பிறகு (மீதியை மீண்டும்) என்னிடம் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தாகம் தணிந்துவிட்டது; அவர்களது பிரார்த்தனை எனக்குக் கிடைத்துவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டபோது, (மகிழ்ச்சியால்) பூமியில் விழுமளவுக்குச் சிரித்தேன்!

அப்போது நபி (ஸல்), “மிக்தாதே! ஏதோ ஒரு குறும்பு செய்துள்ளீர்! அது என்ன?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இன்னின்னவாறு நடந்தது. இப்படி நான் செய்தேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்), “இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள கருணையே ஆகும். இதை (முன்பே) என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நம் தோழர்கள் இருவரையும் நாம் எழுப்பி, அவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்திருக்கலாமே!” என்று கூறினார்கள்.

அப்போது நான், “தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அதைத் தாங்களும் தங்களுடன் நானும் அடைந்துகொண்ட பின் மக்களில் வேறு யாருக்குக் கிடைத்தாலும் (கிடைக்காவிட்டாலும்) அதை நான் பொருட்படுத்த மாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3825

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ بَاتَ بِهِ ضَيْفٌ فَلَمْ يَكُنْ عِنْدَهُ إِلاَّ قُوتُهُ وَقُوتُ صِبْيَانِهِ فَقَالَ لاِمْرَأَتِهِ نَوِّمِي الصِّبْيَةَ وَأَطْفِئِي السِّرَاجَ وَقَرِّبِي لِلضَّيْفِ مَا عِنْدَكِ – قَالَ – فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{ وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ‏…}  


وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيُضِيفَهُ فَلَمْ يَكُنْ عِنْدَهُ مَا يُضِيفُهُ فَقَالَ ‏ “‏ أَلاَ رَجُلٌ يُضِيفُ هَذَا رَحِمَهُ اللَّهُ ‏”‏ ‏.‏ فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو طَلْحَةَ فَانْطَلَقَ بِهِ إِلَى رَحْلِهِ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ جَرِيرٍ وَذَكَرَ فِيهِ نُزُولَ الآيَةِ كَمَا ذَكَرَهُ وَكِيعٌ ‏.‏

ஓர் அன்ஸாரித் தோழரிடம் இரவில் விருந்தாளி ஒருவர் வந்தார். அத்தோழரிடம் அவருக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் தேவையான உணவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனவே, அவர் தம் மனைவியிடம், “குழந்தைகளை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்க வைத்துவிடு; விளக்கை (ஏற்றிவிடுவதைப் போன்று பாவனை செய்து) அணைத்துவிடு. உன்னிடம் உள்ள உணவை விருந்தாளிக்கு அருகில் வைத்துவிடு” என்று கூறினார். இது தொடர்பாகவே, “தமக்கே தேவையிருந்தும்கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்” எனும் (59:9) இறை வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விருந்தாளியாக வந்தார். அவருக்கு விருந்தளிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதுவும் இருக்கவில்லை. எனவே, (தம் தோழர்களை நோக்கி), “இவருக்கு விருந்தளிக்கும் யாரேனும் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்’ என்று கேட்டார்கள். அப்போது அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) என்பவர் எழுந்து, அந்த விருந்தாளியைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்…” என்று ஆரம்பமாகிறது. அதில் (59:9 ஆவது) இறைவசனம் இறங்கியது தொடர்பான குறிப்பும் காணப்படுகிறது.

மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3824

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي مَجْهُودٌ ‏.‏ فَأَرْسَلَ إِلَى بَعْضِ نِسَائِهِ فَقَالَتْ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلاَّ مَاءٌ ‏.‏ ثُمَّ أَرْسَلَ إِلَى أُخْرَى فَقَالَتْ مِثْلَ ذَلِكَ حَتَّى قُلْنَ كُلُّهُنَّ مِثْلَ ذَلِكَ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلاَّ مَاءٌ ‏.‏ فَقَالَ ‏”‏ مَنْ يُضِيفُ هَذَا اللَّيْلَةَ رَحِمَهُ اللَّهُ ‏”‏ ‏.‏ فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَانْطَلَقَ بِهِ إِلَى رَحْلِهِ فَقَالَ لاِمْرَأَتِهِ هَلْ عِنْدَكِ شَىْءٌ ‏.‏ قَالَتْ لاَ إِلاَّ قُوتُ صِبْيَانِي ‏.‏ قَالَ فَعَلِّلِيهِمْ بِشَىْءٍ فَإِذَا دَخَلَ ضَيْفُنَا فَأَطْفِئِي السِّرَاجَ وَأَرِيهِ أَنَّا نَأْكُلُ فَإِذَا أَهْوَى لِيَأْكُلَ فَقُومِي إِلَى السِّرَاجِ حَتَّى تُطْفِئِيهِ ‏.‏ قَالَ فَقَعَدُوا وَأَكَلَ الضَّيْفُ ‏.‏ فَلَمَّا أَصْبَحَ غَدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ قَدْ عَجِبَ اللَّهُ مِنْ صَنِيعِكُمَا بِضَيْفِكُمَا اللَّيْلَةَ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “எனக்கு(க்கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி(உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், “தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்.

பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும், “இல்லை; தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்ற பதிலே வந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் தோழர்களை நோக்கி), “இன்றிரவு இவருக்கு விருந்தளிப்பவர் யார்? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்” என்று கேட்டார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் எழுந்து, “நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லி, (அவரை அழைத்துக்கொண்டு) தம் வீட்டுக்குச் சென்று, தம் மனைவியிடம், “உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “நம் குழந்தைகளுக்கான உணவைத் தவிர வேறெதுவுமில்லை” என்றார்.

அவர், “(நம் குழந்தைகள் உணவு கேட்டால்) ஏதாவது காரணம் சொல்லி (தூங்க வைத்து) விடு; நம் விருந்தாளி நமது வீட்டுக்குள் நுழைந்ததும் (வீட்டிலுள்ள உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவதுபோல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு. நாமும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் போன்று அவருக்குக் காட்டிக்கொள். (மறக்காமல் விருந்தாளி வந்து) சாப்பிடக் கையை நீட்டும்போது விளக்கை அணைத்துவிடு” என்று கூறினார்.

அவ்வாறே (விருந்தாளி வந்ததும்) அவர்கள் அனைவரும் அமர்ந்தனர். விருந்தாளி சாப்பிட்டார். பிறகு (விருந்தளித்த) அந்தத் தோழர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இன்றிரவு நீங்கள் இருவரும் உங்கள் விருந்தாளியிடம் நடந்து கொண்ட முறையைக் கண்டு அல்லாஹ் மகிழ்வடைந்தான்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)