அத்தியாயம்: 38, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4007

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لَوْ أَنَّ رَجُلاً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ فَخَذَفْتَهُ بِحَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ ‏”‏ ‏

“உன் அனுமதியின்றி ஒருவர் உன்னை எட்டிப் பார்த்தபோது, அவர்மீது நீ சிறு கல்லைச் சுண்டியெறிந்து, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன்மீது எந்தக் குற்றமுமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4006

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَنِ اطَّلَعَ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَقَدْ حَلَّ لَهُمْ أَنْ يَفْقَئُوا عَيْنَهُ ‏”‏ ‏

“அனுமதியின்றி ஒரு குடும்பத்தாரின் வீட்டினுள் யாரேனும் எட்டிப் பார்த்தால், அவரது கண்ணைப் பறிக்கவும் அந்தக் குடும்பத்தாருக்கு அனுமதி உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4005

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ – وَاللَّفْظُ لِيَحْيَى وَأَبِي كَامِلٍ – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَخْتِلُهُ لِيَطْعُنَهُ ‏

நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக ஒருவர் எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) நீளமான அம்பின் கூர்முனையுடன் / கூர்முனைகளுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரது கண்ணில்) குத்தப் போனதை இப்போதும் என் மனக்கண்ணால் நான் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4004

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ الْأَنْصَارِيَّ أَخْبَرَهُ :‏

أَنَّ رَجُلاً اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي بَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِدْرًى يُرَجِّلُ بِهِ رَأْسَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْظُرُ طَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ إِنَّمَا جَعَلَ اللَّهُ الإِذْنَ مِنْ أَجْلِ الْبَصَرِ”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ اللَّيْثِ وَيُونُسَ ‏

ஒருவர், கதவு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறையினுள் உற்றுப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றின் மூலம் தமது தலையை வாரிக்கொண்டிருந்தார்கள்.

அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று அல்லாஹ் சட்டமாக்கியிருப்பதே, (பிறர்) பார்வை (எல்லை மீறக்கூடும் என்ற) காரணத்தால்தான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத்  அல் அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4003

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ،  – وَاللَّفْظُ لِيَحْيَى – ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ أَخْبَرَهُ :‏

أَنَّ رَجُلاً اطَّلَعَ فِي جُحْرٍ فِي بَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِدْرًى يَحُكُّ بِهِ رَأْسَهُ فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْظُرُنِي لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ ‏”‏ ‏.‏ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ أَجْلِ الْبَصَرِ ‏”‏ ‏‏

ஒருவர், கதவு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அறையினுள் உற்றுப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த ஈர்வலி (பேன் சீப்பு) மூலம் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள்.

அவரைக் கண்டுவிட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ என்னை(உற்று)ப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்” என்று கூறி விட்டு, “(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்ற சட்டம், (பிறரின்) பார்வை (எல்லை மீறக்கூடும் என்ற) காரணத்தால்தான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத்  அஸ்ஸாஇதீ (ரலி)