அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 743

و حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

نُهِيتُ أَنْ أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ ‏

لَا يَذْكُرُ فِي الْإِسْنَادِ ‏ ‏عَلِيًّا ‏

ருகூஉச் செய்து கொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓதக்கூடாது என நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ (ரலி) பெயர் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 742

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ قَيْسٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ ‏

نَهَانِي حِبِّي ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ أَقْرَأَ رَاكِعًا أَوْ سَاجِدًا ‏

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ عَمْرٍو ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِسْحَقَ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏ح ‏ ‏إِلَّا ‏ ‏الضَّحَّاكَ ‏ ‏وَابْنَ عَجْلَانَ ‏ ‏فَإِنَّهُمَا زَادَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُلُّهُمْ قَالُوا نَهَانِي عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ وَأَنَا رَاكِعٌ وَلَمْ يَذْكُرُوا فِي رِوَايَتِهِمْ النَّهْيَ عَنْهَا فِي السُّجُودِ كَمَا ذَكَرَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَزَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏وَالْوَلِيدُ بْنُ كَثِيرٍ ‏ ‏وَدَاوُدُ بْنُ قَيْسٍ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حَاتِمِ بْنِ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي السُّجُودِ ‏

ருகூஉ அல்லது ஸஜ்தாச் செய்து கொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என் அன்பரான (நபி-ஸல்) என்னைத் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

குறிப்பு :

அஸ்ஸுஹ்ரீ, ஸைதிப்னு அஸ்லம், அல்வலீதிப்னு கஸீர், தாவூத் பின் கைஸ் (ரஹ்-அலைஹிம்) போன்றோர் வழி அறிவிப்புகளில், “ருகூஉச் செய்து கொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்” என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது; “ஸஜ்தாவிலிருக்கும்போது குர்ஆனை ஓதக் கூடாது” என்பது பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 741

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي مَرْيَمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

نَهَانِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْقِرَاءَةِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ وَلَا أَقُولُ نَهَاكُمْ ‏

ருகூவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைத் தடுத்தார்கள். உங்களைத் தடுத்தார்கள் என்று நான் கூற மாட்டேன்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

குறிப்பு :

மேற்காணும் தடை, முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானதே.

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 740

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ يَعْنِي ابْنَ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏يَقُولُا ‏

نَهَانِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ وَأَنَا رَاكِعٌ أَوْ سَاجِدٌ ‏

எனது ருகூஉ நிலையிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 739

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏قَالَ ‏

نَهَانِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ أَقْرَأَ رَاكِعًا أَوْ سَاجِدًا ‏

ருகூஉ நிலையிலும் ஸஜ்தாவிலும் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டாமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 41, ஹதீஸ் எண்: 738

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ سُحَيْمٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

كَشَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السِّتَارَةَ وَالنَّاسُ صُفُوفٌ خَلْفَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلَّا الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ أَلَا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ ‏ ‏فَقَمِنٌ ‏ ‏أَنْ يُسْتَجَابَ لَكُمْ ‏

قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ سُحَيْمٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏كَشَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السِّتْرَ وَرَأْسُهُ مَعْصُوبٌ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ ‏ ‏اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلَاثَ مَرَّاتٍ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلَّا الرُّؤْيَا يَرَاهَا الْعَبْدُ الصَّالِحُ أَوْ تُرَى لَهُ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில் உடல் நலிவுற்றிருந்த போது தமது அறையின்) திரை சீலையை விலக்(பள்ளிவாசலுக்குள் நோக்)கினார்கள். அப்போது மக்கள் அபூபக்ரு (ரலி) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். (அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களே! ஒரு முஸ்லிம் காண்கின்ற அல்லது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர நபித்துவத்தின் நற்செய்திகளுள் வேறெதுவும் மிச்சமில்லை. அறிந்து கொள்ளுங்கள்! ருகூஉ அல்லது ஸஜ்தாச் செய்து கொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனை ருகூவில் மகிமைப் படுத்துங்கள். ஸஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். அது, உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட உங்களுக்கு மிகவும் உதவும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

யஹ்யா பின் அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கினார்கள். அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் காரணத்தால் அவர்களது தலையில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அப்போது அவர்கள், “இறைவா! (உன் செய்திகளை) நான் (மக்களிடம்) சேர்த்துவிட்டேனா?” என்று மும்முறை கூறிவிட்டு, “ஒரு நல்ல அடியார் காண்கின்ற அல்லது அவருக்குக் காட்டப்படுகின்ற (நல்ல) கனவைத் தவிர நபித்துவத்தின் நற்செய்திகளுள் வேறெதுவும் மிச்சமில்லை” எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.