அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 752

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏نَبَّأَتْهُ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ ‏ ‏سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ ‏

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏قَتَادَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது ருகூஉவிலும் ஸஜ்தாவிலும், “ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்” (இறைவா! நீ தூயவன்! மிகப் பரிசுத்தமானவன்! வானவர்களின், வானவர் தலைவர் ஜிப்ரீலின் அதிபதி) என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 751

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

فَقَدْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةً مِنْ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ ‏ ‏اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ ‏

ஒருநாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (ஸஜ்தாவில்) இருந்தார்கள். நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் எனது கை பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹும்ம அஊது பி ரிளாக்க மின் சகதிக்க; வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க; வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்ஸிக்க” (பொருள் : இறைவா உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும்; உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்து கொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்) என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 750

و حَدَّثَنِي ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏كَيْفَ تَقُولُ أَنْتَ فِي الرُّكُوعِ قَالَ أَمَّا سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏ابْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

افْتَقَدْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فَظَنَنْتُ أَنَّهُ ذَهَبَ إِلَى بَعْضِ نِسَائِهِ ‏ ‏فَتَحَسَّسْتُ ‏ ‏ثُمَّ رَجَعْتُ فَإِذَا هُوَ رَاكِعٌ أَوْ سَاجِدٌ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ فَقُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي إِنِّي لَفِي شَأْنٍ وَإِنَّكَ لَفِي آخَرَ ‏

நான் ஒரு நாள் இரவில் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடினேன். அவர்கள் தம் துணைவியருள் எவரிடத்தோ சென்றிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே அவர்களைத் தேடிப் போனேன். (அவர்களை எங்கும் காணாமல்) பின்னர் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் (தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள்) ருகூஉவில்/ஸஜ்தாவில், “ஸுப்ஹானக்க, வபி ஹம்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த” (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் வேறு எண்ணத்தில் இருந்தேன். ஆனால் நீங்கள் (அதற்கு மாறான) மற்றோர் எண்ணத்தில் இருக்கிறீர்கள்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு:

நான், அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் ருகூஉவில் என்ன ஓதுவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஸுப்ஹானக்க, வபி ஹம்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று ஓதுவேன். ஏனெனில், அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் மேற்காணும் ஹதீஸை எனக்கு அறிவித்திருக்கிறார்” என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 749

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُكْثِرُ مِنْ قَوْلِ ‏ ‏سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَاكَ تُكْثِرُ مِنْ قَوْلِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فَقَالَ خَبَّرَنِي رَبِّي أَنِّي ‏ ‏سَأَرَى عَلَامَةً فِي أُمَّتِي فَإِذَا رَأَيْتُهَا أَكْثَرْتُ مِنْ قَوْلِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فَقَدْ رَأَيْتُهَا ‏‏إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ‏فَتْحُ ‏ ‏مَكَّةَ ‏وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ ‏ ‏أَفْوَاجًا ‏ ‏فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) மிகுதியாக, “ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி” (அல்லாஹ் மிகத் தூயவன்! அவனைப் புகழ்ந்து துதிக்கிறேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி அவனிடமே மீளுகிறேன்) என்று கூறிவந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி என்று மிகுதியாகக் கூறிவருவதை நான் காண்கிறேன் (இதற்கு என்ன காரணம்?)” என்று கேட்டேன். அதற்கு, “என் சமுதாயத்தாரைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை நான் காண்பேன் என்றும், அதைக் காணும்போது இந்தத் தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை நான் கண்டுகொண்டேன்”; “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து சேரும்போது, அல்லாஹ்வின் மார்க்க(மான இஸ்லா)த்தில் அணியணியாய் மக்கள் வந்து இணைவதைக் காணும்போது, (நபியே!) உமதிறைவனின் புகழுக்கொப்ப அவனைப் புகழ்ந்து போற்றுவீராக! மேலும் அவனிடம் அதிகம் மன்னிப்புக் கோருவீராக! அவன் மிக்க மன்னிப்பவனாவான் (110:1-3) இதில் வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 748

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُفَضَّلٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ صُبَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُفَضَّلٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ صُبَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏مَا رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُنْذُ نَزَلَ عَلَيْهِ ‏ ‏إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ‏ ‏يُصَلِّي صَلَاةً إِلَّا دَعَا أَوْ قَالَ فِيهَا ‏ ‏سُبْحَانَكَ رَبِّي وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ‏

நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது …” என்று தொடங்கும் (110ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது முதல் ஒவ்வொரு தொழுகையிலும் “ஸுப்ஹானக்க ரப்பீ வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ (என் இறைவனே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனகு மன்னிப்பளிப்பாயாக!)என்று கூறாமல்/ பிரார்த்திக்காமல் இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 747

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُكْثِرُ أَنْ يَقُولَ قَبْلَ أَنْ يَمُوتَ ‏ ‏سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْكَلِمَاتُ الَّتِي أَرَاكَ أَحْدَثْتَهَا تَقُولُهَا قَالَ جُعِلَتْ لِي عَلَامَةٌ فِي أُمَّتِي إِذَا رَأَيْتُهَا قُلْتُهَا ‏ ‏إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ‏إِلَى آخِرِ السُّورَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்னர், “ஸுப்ஹானக, வபி ஹம்திக, அஸ்தஃக்ஃபிருக, வ அதூபு இலைக்க. (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னிடத்தில் பாவமன்னிப்புக்கோரி உன்னிடமே மீளுகிறேன்)” என்று அதிகமாகக் கூறிவந்தார்கள். (ஒரு நாள்) நான், “அல்லாஹ்வின் தூதரே! புதிதாக இந்தச் சொற்களைக் கூறுபவராக நான் தங்களைக் காண்கிறேன். அதன் காரணம் யாது?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது (என்று தொடங்கும் 110ஆவது) அத்தியாயத்தில் என் சமுதாயத்தார் விஷயத்தில் எனக்கோர் அடையாளம் கூறப்பட்டுள்ளது. அதை நான் காண்பதால் இவற்றைக் கூறிவருகிறேன்” எனச் சொல்லி, அந்த அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 746

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الضُّحَى ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي يَتَأَوَّلُ الْقُرْآنَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் “ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபி ஹம்திக; அல்லாஹும்மஃக்பிர்லீ” (பொருள்: இறைவா! எங்கள் அதிபதியே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கூற்றுப்படி பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 745

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ غَزِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سُمَيٍّ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقُولُ فِي سُجُودِهِ ‏ ‏اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ ‏ ‏دِقَّهُ ‏ ‏وَجِلَّهُ ‏ ‏وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஸஜ்தாவில் “அல்லாஹும்மஃக்பிர்லீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு வ அவ்வலஹு வஆகிரஹு வ அலானிய்யத்தஹு வ சிர்ரஹு” (பொருள் : இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றுள் சிறியதையும் பெரியதையும் தொடக்கமானதையும் கடைசியானதையும் வெளிப்படையானதையும் மறைவானதையும் மன்னிப்பாயாக!) என்று பிரார்த்திப்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 744

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَعَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ غَزِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سُمَيٍّ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا صَالِحٍ ذَكْوَانَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ ‏

“ஓர் அடியார் ஸஜ்தாவில் இருக்கும்போது தம் இறைவனிடம் அதிக நெருக்கமாக இருக்கிறார்.

எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்) பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)